Tuesday, 25 February 2020

உலக சமாதான பாடல் : 12 - 'வாழ்க்கைக்கு மூலதனம்'

https://www.facebook.com/100025456231980/posts/586985545493315/

*உலக சமாதானம்*
*முதற் பாகம்*
*பாடல் : 12  – வாழ்க்கைக்கு மூலதனம்*

    வாழ்க்கையினால் சிந்தனைக்கு மேலும், மேலும்,
      வளம்  பெருகிவிட்ட தினி  ஒன்று சேர்ந்து,
    வாழ்க்கையினைச் சிந்தனையால் வளப்படுத்தும்
      வகைகளையே ஆராய்ந்து, முயற்சியோடு
    வாழ்க்கையினிலே நிறைந்துள்ள துன்பம் போக்க,
      வந்திருக்கும் அனுபவங்கள் அனைத்தும் சேர்ந்து
      வாழ்த்திடுவோம்  நம்  மூலம் முடிவறிந்து .

    உண்டு, உலாவி, உறங்கி, செயலாற்றி, இன்ப துன்பங் கண்டு, சிந்தித்து வாழ்ந்து வரும் அனுபவத்தினால், மேலும் மேலும் அறிவிற்குத் திறமையும் நுட்பமும் கூடிவிட்டன.

    அத்தகைய அறிவின் திறமையைக் கொண்டு, இனி வாழ்க்கையை மேலும் மேலும் வளம் பெறச் செய்யும் வழிகளைத் தெரிந்து, துன்பங்களைப் போக்க நமது அனுபவங்கள் அனைத்தையும் மூலதனமாகக் கொள்வோம். நமது மூலம் முடிவு என்ற இரண்டையும் ஆராய்ந்து, அதற்குத் தக்கபடி வாழ்வோம்.     



*உலக சமாதானப் பாடல் – 13       தொடரும் ....*

No comments: