Friday, 14 February 2020

உலக சமாதான பாடல் : 9 / 'பிறந்துவிட்டதால் வாழ்ந்தேயாக வேண்டும்' : பேரா. ஜெயலட்சுமி குமரேசன் அவர்கள்

https://m.facebook.com/story.php?story_fbid=579394662919070&id=100025456231980

*உலக சமாதானம்*
*முதற் பாகம்*
*பாடல் : 9  – பிறந்து விட்டதால் வாழ்ந்தேயாக வேண்டும்*

    வாழ வேண்டும் என்றெண்ணி மனிதனாக
      வந்ததில்லை, எனினும் நாம் பிறந்து விட்டோம்.
    வாழவேண்டும் உலகில் ஆயுள் மட்டும்
      வாழ்ந்தவர்கள் அனுபவத்தைத் தொடர்ந்துபற்றி
    வாழவென்ற உரிமை எல்லோர்க்கும் உண்டு. 
      வாழ்வோர்க்குச் சாதகமாய் வாழும் மட்டும்
    வாழ உள்ளோர்  அனைவருமே ஒன்றுகூடி;
      வகுத்திடுவோம் ஒருதிட்டம் வளமாய் வாழ. 

    உலகில் யாருமே வாழவேண்டும் என்ற எண்ணத்துடன் பிறக்கவில்லை. பரிணாமவேக விளைவால் பிறந்து விடுகிறார்கள். பிறந்து விட்டபின் , ஆயுள் மட்டும் வாழந்தாயாக வேண்டும். உலகில் தொன்று தொட்டு வாழ்ந்தவர்களின் அனுபவங்களைத் தொடர்ந்தும், இன்றுள்ள மக்களின் ஒற்றுமையையும் கூட்டுழைப்பின் விளைவையும் கொண்டும், ஒவ்வொருவரும் வாழ்ந்தேயாக வேண்டும், இது அவசியுமுமாகி விட்டது.

 வாழும் மக்களுக்குச் சாதகமாக வாழும் வரையில், வாழவேண்டிய உரிமை இவ்வுலகில் ஆனவருக்குமே உண்டு.

    ஆகையால் வாழவேண்டிய-வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவரும் ஒன்றுகூடி, ஒருவருக்கொருவர் சாதகமான முறையில் வளமான வாழ்வை எய்த, வாழ, ஒரு பொதுவான சிறந்த திட்டத்தை வகுத்திடுவோம்.


*உலக சமாதானப் பாடல் – 10      தொடரும் ....*

No comments: