Tuesday, 4 February 2020

உலக சமாதான பாடல் : 6 'துன்பம் தரும் காரணங்களைப் போக்க வேண்டும்

https://www.facebook.com/100025456231980/posts/572738670251336/

*உலக சமாதானம்*
*முதற் பாகம்*
*பாடல் : 6  – துன்பம் தரும் காரணங்களைப் போக்க வேண்டும்*

  பொத்தலுள்ள பாத்திரத்தில் நீர் சேமித்தால்,
      போக்கின் அளவிற்கேற்பக் குறையாக காண்போம்.
  இத்தகைய முறையினிலே மனிதர் வாழ்வில்,
      எண்ணம், சொல், செயல் பழக்கத் தவறிவற்றால்
  நித்தநித்தம், போத்தல் பல கூடிக்கூடி,
      நிறைச் செல்வமாம் இயற்கை செயற்கை இன்பம்,
  அத்தனையும் குறைத்திடுதல்  கண்டு கொண்டோம்,
      அவையடைத்து ஆனந்த வாழ்வு காண்போம்

    ஓட்டை அல்லது பொத்தல்கள் உள்ள ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேமித்து வைத்தால், அந்தப் பொத்தல்களின் அளவிற்குத் தக்கபடி நீர்ப்போக்கு ஏற்பட்டு, சேமித்திருக்கும் தண்ணீர் குறைந்து விடுகிறது. அதைப் போலவே, எண்ணம், சொல், செயல்களில் கொண்டுள்ள ஒழுக்கமுறைக்கு மாறான பழக்கவழக்கங்களே வாழ்வின் இன்பங்களைக் குறைக்கும் பொத்தல்களாயும், துன்பங்களை அதிகரிக்கச் செய்யும் பொத்தல்களாயும் இருந்து வருகின்றன.
    இயற்கையாலும் செயற்கையாலும் கிடைக்கும்-ஏற்படும் இன்பங்கள், இந்தப் பொத்தல்கள் மூலம் வீணாகி விடுகின்றன.
    நாம் இப்போது இந்த உண்மையை அறிந்து விட்டோம். ஆகையால் அவைகளை எல்லாம் சீர்திருத்தம் செய்து நல்வாழ்வு காண்போம்.


*உலக சமாதானப் பாடல் – 7   தொடரும் ....*

No comments: