Saturday, 29 February 2020

உலக சமாதான பாடல் : 13 'இயற்கைக்கேற்ற வாழ்வு'

https://www.facebook.com/100025456231980/posts/589983775193492/

*உலக சமாதானம்*
*முதற் பாகம்*
*பாடல் : 13   –  இயற்கைக்கேற்ற வாழ்வு*

    மனிதனின் உடலமைப்பும், மதியமைப்பும்
      மண்ணுலக அமைப்பும், மற்றனைத்தும் ஆய்ந்து,
    இனி வகுப்போம் ஒரு திட்டம், என்றும் எங்கும்,
      எவருக்கும், வாழ்க்கையிலே துன்பம் நீங்க –
    புனிதமுடன் உடல் அறிவு சக்தியெல்லாம்
      பொதுவாக – மனித இனம் ஒன்றுசேர்ந்து,
    கனிவுடனே  அவரவர்கள் தேவை தீர்க்கும்.
      கருத்துடனே அத்திட்டம் அமைய வேண்டும்.

    மனித உடலின் அமைப்பு (சுகாதார தத்துவம்), அறிவின் இயல்பு இயக்க விளைவு (மனோதத்துவம்), பூமியின் அமைப்பு (விண் ஞானம் ) ஆகிய இம் மூன்றை ஒவ்வொன்றாகவும், ஒன்றுடன் ஒன்று பொருத்தியும் ஆராய்ந்து பார்த்து, இனி நாம் ஒரு திட்டம் தயாரிக்க வேண்டும். அதனால் எப்போதும், எந்த இடத்திலும், எவருக்கும் வாழ்க்கையிலே துன்பம் அதிகரிக்காமல், மனித இனம் ஒரே கூட்டுறவு முறையில், மேலான நோக்கத்துடன் உடல் சக்தி, அறிவுத் திறமைகளை ஒன்று சேர்த்து இயக்கி, அவைகளின் விளைவைக் கொண்டு, எல்லோருடைய வாழ்க்கைத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் திட்டமாக, அது இருக்க வேண்டும்.



*உலக சமாதானப் பாடல் – 14       தொடரும் ....*

No comments: