Sunday, 8 July 2018

அருட்தந்தை கேள்வி பதில்

07.07.

அன்பர்களின் கேள்விகளும் – அருட்தந்தையின் பதில்களும்

 ❓ கேள்வி: சுவாமிஜி, ஐந்தறிவு வரை உள்ள ஜீவன்கள் ஒன்றையொன்று கொன்று தின்கிறது. அதற்கு பாவ, புண்ணியம் இல்லை என்கிறீர்கள். ஆனால் ஆறறிவு பெற்ற மனிதனுக்கு மட்டும் பாவ-புண்ணியம் ஏன்?

 ✅ பதில்: உலகில் ஓரறிவு முதல் ஆறறிவு வரை எண்ணற்ற உயிர்கள் வாழ்கின்றன. சீவன்களில் கருணைமிக்க எந்த உயிர்களுக்கும் துன்பம் விளைவிக்காத நன்மையே செய்கின்ற அற்புதமான சீவன் ஓரறிவினமான தாவரங்களே.

 இறைவனின் பெருங்கருணையே பஞ்சபூதக் கூட்டான வித்தாகி, ஓரறறிவுத் தாவரங்களாக உயிர்த்துள்ளது. அத்தாவரங்களே இரண்டறிவு முதல் ஆறறிவு வரையுள்ள சீவன்களுக்கு உணவாக வந்துள்ளது. தாவரங்கள் பிறவற்றிடம் இருந்து பறித்துண்ண வேண்டிய அவசியமில்லை. பூமியில் இருந்து தனக்கு வேண்டிய உணவைத் தானே தயாரித்துக் கொள்கிறது.

 இரண்டறிவிலிருந்து ஐந்தறிவு வரை உள்ள ஜீவன்களில் தாவர பட்சினியான ஆடு, மாடு, மான், யானை போன்ற சில ஜீவன்களைத் தவிர மற்றவைகள் ஒன்றை மற்றொன்று கொன்று உணவாக்கிக் கொள்கிறது. அங்கு அதற்கு உணவு உற்பத்தி செய்யவோ, நாளைக்கு என்று சேமித்து வைக்கவோ தெரியாது. கிடைப்பதை அப்படியே உணவாக (Readymade Food) எடுத்துக் கொள்கிறது.

 விலங்கினங்களிடையே பறித்துண்ணல் என்பது அதன் இயற்கை சுபாவம். அவற்றிற்கு தனக்கு வேண்டிய உணவை தானே உற்பத்தி செய்து கொள்ளத் தெரியாது. அங்கு அதில் மனிதன் குற்றம் காணமுடியாது. அதனால் ஐந்தறிவு வரை பாவ - புண்ணியம் என்பதில்லை.

 உதாரணமாக கொசு நம்மைக் கடிக்கிறது. அதற்கு நாம் ஆறறிவு பெற்ற மனிதன் என்று தெரியாது. உணர்ந்து கொள்ளவும் முடியாது. ”இரத்தமும், தசையும் நிறைந்த தன்பசிக்கான உணவு மலையே மனிதன்” என்று நினைத்துத் தனக்கு வேண்டியதைக் கொஞ்சம் எடுத்துக் கொள்வோம் என்றே கடிக்கிறது.

 ஐயறிவு விலங்கினங்களில் இருந்து வித்து எடுத்து வந்த மனிதன், தன் முழுமையை உணரும் ஆறாவது அறிவைப் பெற்ற பின்னும் பரிணாமத்தில் பெற்று வந்த விலங்கினப்பதிவாக “பறித்துண்ணல்” என்பதை விட முடியவில்லை. அங்குதான் மூன்று விதமான குற்றங்களைச் செய்கிறான். அதுவே உலகின் அனைத்துக் குற்றங்களுக்கும் அடிப்படையாகிறது.

 1. உயிர்க்கொலை
 2. உணவுக்காக அதன் உடலைத் திருடிக் கொள்ளுதல்,
 3. அதன் வாழும் உரிமையைப் பறித்தல்.

 இந்த மூன்றிணைப்புக் குற்றமே இன்றும் மனித வாழ்வில் தொடர்கிறது.

 ஒருவன் சிறிது பொருள் வைத்திருந்தால் மற்றவன் அதைப் பறிக்க நினைக்கிறான். தன் சொல்லை மற்றவன் கேட்க வேண்டும் என்கிறான். இது வாழும் உரிமையைப் பறித்தலின் பரிணாம மாற்றமே. பொருள் பறிப்பது, அதிகார மோகம், புகழ் வேட்பு, பொறுக்க முடியாமை இவைகளால் மனிதர்களிடையே பஞ்சமகா பாவங்களும் ஏற்படுகிறது.

 மனிதன் அறநெறியும் இறையுணர்வும் பெற்றாலே பாவம் போக்கி உயிர்களிடம் அன்பும் கருணையுமாக வாழ முடியும். இவ்விலங்கினப் பதிவுகளை மாற்றி மனிதன் மனிதனாக வாழ ஒழுக்கம், கடமை, ஈகை என்ற அறநெறியும் அறிவை உயர்த்தி வாழ்வின் நோக்கம் அறிந்து வாழ இறையுணர்வும் வேண்டும்.

வாழ்க வளமுடன்!!

அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி

தினம் ஒரு மாற்றம் (08/07/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (08/07/2018)

நல்ல மாற்றங்களை நம்மிடமும், சமுதாயத்திடமும், நாம் வரவேற்கத் தயாராகிறோம். ஏனென்றால் தன்னை மேம்படுத்திக் கொள்ள அனைவரும் தயாராகவே உள்ளனர்.

தனது எண்ணம், தரம், மதிப்பு, பண்பு இவைகளை நன்முறையில் பின்பற்றவே முயல்கின்றனர்.

ஆனால் 'யார்'  பின்பற்றுவது என்பதில் சற்று முரண்பாடு வருகிறது. அதற்குக் காரணம் Egoism.
*தான்* , *தனது* என்கிற உரிமைகளிலும் பற்றுதல்களிலும் சிக்குண்டு அதிலிருந்து மீளத்தெரியாமல் இருப்பதால் தான்.

அனைவருக்கும் ஆறறிவு உண்டு. ஆனால் சில நேரங்களில் தனது திறத்தையும், தரத்தையும், பல்வேறு யுக்திகளை பயன்படுத்தி, பல்வேறு துறையில்,  முன்னேற்றம் காண்கிறார்கள்.

வெற்றி காணாத ஒருசிலர் மனதளவில் ஏதோ ஒரு வெறுமை சூழ அனுமதித்து விடுகின்றனர். தான் நினைப்பது சரி என்று எண்ணி வாழ்வது தான் அதற்குக் காரணமாகின்றது.

உண்மையில் சரி என்பது சரியா? தவறா? என்று முடிவுகளை தேர்ந்து
எடுக்கும் போது, அதன் விளைவுகளை, பல பேர், ஆராய்வதில் கவனம் கொள்வதில்லை.

அதன் விளைவுகளை ஆராய்ந்து பார்த்து தனக்கும் பிறருக்கும் நன்மையுண்டு என்றால் அதை அனுமதிக்கலாம்.

"தப்புக்கணக்கிட்டுத் தான் ஒன்று எதிர்பார்த்தால் ஒப்புமோ இயற்கை விதி?, ஒழுங்கமைப்புக்கேற்றபடி, அப்போதைக்கப்போதே அளிக்கும் சரி விளைவு,
எப்போதும் கவலையுற்று இடர்படுவார் இதை உணரார்".

*அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்*

அன்புடன் ஜெ.கே

Saturday, 7 July 2018

தினம் ஒரு மாற்றம் (07/07/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (07/07/2018)

குறள் 71: 
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் 
புன்கணீர் பூசல் தரும்.

சாலமன் பாப்பையா உரை:
அன்பிற்கும் கூடப் பிறர் அறியாமல் தன்னை மூடி வைக்கும் கதவு உண்டோ? இல்லை. தம்மால் அன்பு செய்யப்பட்டவரின் துன்பத்தைக் காணும்போது வடியும் கண்ணீரே அன்பு உள்ளத்தைக் காட்டிவிடும்.
Translation: 

And is there bar that can even love restrain? 
The tiny tear shall make the lover's secret plain.

Explanation: 

Is there any fastening that can shut in love ? Tears of the affectionate will publish the love that is within

ஒருவர்  இயல்பு நிலையில் உள்ளவராயின், தான் செய்வது சரி என்று நியாயப்படுத்த விரும்பினால்.. அதில் உண்மையில் நியாயம் உள்ளதா? என்றும் அதனால் தனது அனுபவத்திற்கும் அறிவிற்கும், பிறருக்கும் மனதிற்கும் சரியாக இருக்குமா என்று ஆராய்ந்து பினனரே அதை நியாயப்படுத்த வேண்டும்.

சில பேர் அதை பிறர் மீது எப்படியாவது தான் சொல்வதை ஏற்க வேண்டும் என்று திணிப்பார்கள்.

அந்தத் திணிப்புக்கு ஆளாகாமல் ஒருவர் விழிப்புநிலையோடு  இருந்தால்  அவரவர் தன்னை பாதுகாத்துக் கொள்வதோடு, திணிப்பவர்களுக்கு புரிய வைக்கலாம்.

ஆனால் சில பேர் அறிவுரைகளை ஏற்க மாட்டார்கள்.

யார் சொல்லி யார் கேட்பது என்று 'தானே உசத்தி' என்று ஒரு கர்வம் இருக்கும்.

அப்படிப்பட்டவர்களிடம் பேசுவதைக் குறைத்துக் கொண்டு அளவோடு உரையாடி விட்டு சென்றுவிடுதல் நலம்.

அவ்வாறு உள்ளவர்கள் இயல்பான நிலையில் எப்போதும் இருப்பது அரிது.

மனதில் எதையாவது கற்பனையாக, தவறாக நினைத்துக் கொண்டு இருப்பார்கள். உண்மையைக் கூட பொய் என்று எண்ணுவார்கள்.

வாழ்த்துவதும், அவ்வாறு உள்ளவர்களை நேசிப்பதும், மன்னித்தும்,  மறந்தும் விட வேண்டும்.

இயல்பான நிலையில்  ஒருவர் இல்லாத நிலையில் மனரீதியாக பாதிப்பு இருப்பது தெரியாமலேயே பேசும் பழக்கம் இருக்கும்.

அன்புக்கு ஏங்குபவர்கள் அவர்கள். அவர்களிடம் அன்பாகப் பழகி வந்தால் இயல்பு நிலைக்கு வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

அன்பைப் பகிர்வோம். அன்புமயமாக்குவோம் இவ்வுலகை. அனைவரும் இறைவனின் அம்சமே!

அன்புடன் ஜெ.கே

Friday, 6 July 2018

Swamiji Arul Passes Video


தினம் ஒரு மாற்றம் (06/07/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (06/07/2018)

அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் காயகல்பப் பாடலில்
"பிணிகள் நீங்கும் புத்துணர்வும், இறையருளும் ஊற்றெடுக்கும் மாயமென வித்தமுத ரசமாய் மாறி *மரணமிலாப் பெருவாழ்வு சித்தியாகும்*" என்று கூறுகிறார்கள்.

இப்பாடலில் காயகல்பம் பயிற்சியை உயர்சஞ்சீவி என்று கூறுவதை பார்க்க முடியும்.

இதை ஆண் பெண் இருபாலரும் பயில்வதால், நோய் எதிர்ப்பாற்றலும், இளமை நோன்பு காக்கவும், முதுமையை தள்ளிப் போடவும் முடியும் இயற்கையாக.

எந்த ஒரு சிக்கல் உடலிலே வந்தாலும் அதை சரிசெய்யக் கூடிய ஆற்றல் இயல்பாக உடலுக்கு உண்டு என்பது எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும்??

ஒரு நோய் என்றால் உடனே மருத்துவரிடம் சென்று இன்னும் நோயையே விலைகொடுத்து வாங்குகிற மக்கள் மத்தியில் யோகப்பயிற்சியை செய்து தன்னை சரிபடுத்திக் கொள்ளும் மக்களும் இருக்கிறார்கள்.

மனவளக்கலை எளியமுறை பயிற்சி முறைகள், உணவு ஒழுக்கமுறை  என்று அனைத்தும் தன்னைத் தேடி வந்து இறைவன் கொடுத்து அதை பல பேர் மதித்து அன்றாடம் செய்கிறார்கள். பின்பற்றுகிறார்கள்.

பின்பற்றுகிறவர்கள் உடல்நலம் பேணுகிறார்கள். மனநலம் பேணுகிறார்கள்.

அனைவரும் பூரண உடல்நலம், மனநலம், உயிர்வளம், பெறுவோம் யோகக் கலை பயின்று.

அன்புடன் ஜெ.கே

Thursday, 5 July 2018

வேதாத்திரி மகரிஷி சிந்தனை உரை - அதிகாலை நினைவுகள்


தினம் ஒரு மாற்றம் (05/07/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (05/07/2018)

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண்.

மு.வ உரை:அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும், அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும் ஆகும். 

சாலமன் பாப்பையா உரை:அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம், பகைவராலும் அழிக்க முடியாத உட்கோட்டை.

எந்த ஒரு விஷயத்தையும், எந்த கோணத்தில் பார்த்தால் சரியாக இருக்குமோ, அந்தக் கோணத்தில் மட்டுமே பார்க்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

அணுகுமுறையும், வார்த்தைகளும் பிறர் மனதிற்கு இதமானதாகவும் பதமானதாகவும் இருக்குமாறு தேர்ந்தெடுத்த இனிமையான சொற்களை பயன்படுத்த வேண்டும்.
தொ
பிறர் மனம் வருத்தா மாநெறிகளை பின்பற்றி வாழ்ந்தால், வருத்த அலைகளே இந்த சமுதாயத்தில் இருந்திருக்காது..

சமுதாயத்தில் ஏற்படும் நல்ல மாற்றம் நல்லவர்களால் நினைக்கப்பட்ட எண்ணங்களும் அதன் விளைவுகளும்.

சமுதாயத்தில் ஏற்படும் தரம் குறைவான விஷயங்கள் எல்லாம்... சில பேரின்  முரண்பாடான, எதிர்மறையான எண்ணங்களுக்கு, வலிமை கொடுத்ததன் விளைவு ஆகும்..

சமுதாய மாற்றம் யாரிடம் வர வேண்டும்??

ஒவ்வொரு மனிதனின் எண்ணத்தில் தூய்மையும், நேர்மறையான சிந்தனையும் இருந்தால் மட்டுமே அது நிகழும்.

அந்த அறிவு எவ்வாறு சாத்தியம்??
*மனவளக்கலையில் தீர்வுகள் உள்ளன.*

அன்புடன் ஜெ.கே

தினம் ஒரு மாற்றம் (04/07/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (04/07/2018)

குறள் 63:
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.

விளக்கம் 1:
தம்மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும்.

விளக்கம் 2:
பிள்ளைகளைத் தம் செல்வம் என்று அறிந்தோர் கூறுவர். அப்பிள்ளைகள் உள்ளபடியே செல்வமாவது அவரவர் செய்யும் நற்செயல்களால் அமையும்.

English Couplet 63:
'Man's children are his fortune,' say the wise;
From each one's deeds his varied fortunes rise

Couplet Explanation:
Men will call their sons their wealth, because it flows to them through the deeds which they (sons) perform on their behalf

வளர்ந்த ஆண்/பெண் பிள்ளைகள், தாங்கள் சம்பாதிப்பதில் அதிக கவனம், திருமணத்திற்குக் காத்திருப்பது..... திருமணமாகிய பின்.. பெற்றோருக்கு மரியாதை கொடுப்பது,  தனது ஆளுமைத்திறன்  வெளிக் கொண்டு வர வேண்டும் என்கிற வேகம் இருக்கும் அளவிற்கு, அதிகக் கவனமும் அன்பும்,  அக்கறையும், பெற்றோரிடம் செலுத்துகிறார்களா?  அவர்களின் ஆசை என்ன? அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? அவர்களது உடல்நிலையில் அக்கறை காட்டும் பிள்ளைகளாக 'தான்' இருக்கிறோமா??
என்று பிள்ளைகள் தங்களுக்குள் கேட்க வேண்டும்.

பிள்ளைகளுக்காக அனைத்தையும் தியாகம் செய்யும் பெற்றோர்கள், பிள்ளைகள் 'தங்கள்' கடமைகளை ஒழுங்காக செய்ய பெற்றோர்கள் அக்கறை காட்டுகிறார்களா?? கற்றுத்தருகிறார்களா??

பெற்றோரை மதிக்கும் பிள்ளைகளாக வளர்த்தால்,  பிள்ளைகள் தாங்கள் பெற்றோராகும் போது தங்களை மதிக்கும்படியான ஒரு வளர்ப்பினை தங்கள் பிள்ளைகளுக்கு நல்குவார்கள்.

குடும்பத்தில், திருமண பந்தத்தில், இணையும் பெண் புக்ககம் செல்லும் போது கணவரது  குடும்பத்தை பாரபட்சம் கருதாது  அன்புடன் பேணிக் காப்பது, ஒவ்வொரு பெண்ணின் கடமையும் பொறுப்புமாகும். அதே போல் மனைவியின் உறவுகளை தன் குடும்ப உறவுகளைப் போல பாரபட்சம் இல்லாமல் காப்பது ஒவ்வொரு கணவரது கடமையாகும்.

இவ்வாறு தங்களது கடமைகளை ஒழுங்காக செய்தால் பிணக்கு ஏன் வரப் போகிறது?

Ego and Partiality.... தேவையில்லை உறவுகளிடம். உலகில் அனைவரும் நம் சொந்தங்களே என்ற உணர்வு இருந்தால்  'நான்' மறைந்து அன்பு மலரும். அங்கே அமைதி ஓங்கும்.

அன்புடன் ஜெ.கே

Tuesday, 3 July 2018

தினம் ஒரு மாற்றம் (03/07/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (03/07/2018)

துன்பம் ஏன் வருகிறது??
அதை போக்குவது எப்படி?

குறள் 115:
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.

விளக்கம்: தீமையும் நன்மையும் எல்லார்க்கும் முன்பே குறிக்கப்பட்டு விட்டன; இதை அறிந்து நெஞ்சத்தால் நீதி தவறாது இருப்பது சான்றோர்க்கு அழகாகும்.

kural 115:

Explanation:  Loss and gain come not without cause; it is the ornament of the wise to preserve evenness of mind (under both)

*எந்த ஒன்றிலும் அளவுமுறை மீறும் போது இன்பத்தையே துன்பமாக உணர்கிறோம். எதிலும் சமநிலை நோக்கு இருந்தால் சிக்கலிலிருந்து தப்பிக்கலாம்.*

எதில் எல்லாம் அளவுமுறை காக்க வேண்டும்??
எதை எல்லாம் நினைக்கிறோமோ, அனுபவிக்கிறோமோ அதில் எல்லாம் அளவுமுறை காக்க வேண்டும்.
நமது அருட்தந்தை அவர்கள் எளிமையாக ஐந்தில் அளவுமுறை .... உணவு, உழைப்பு, உறக்கம், உடலுறவு மற்றும் எண்ணம் இவற்றில் காத்தால் போதும் என்று கூறிவிட்டார்கள். அதில் எல்லாம் அடங்கி விடுகிறது.

உயிரற்ற சடப்பொருட்களான சூரிய குடும்ப உறுப்பினர்கள், இயக்கஒழுங்கமைப்பில், அந்தந்த இடைவெளியில்,  ஆக்கத்திற்கு தனது ஆற்றலை பயன்படுத்துகிறார்கள். அவை துல்லியமாக இயங்கிக் கொண்டிருக்கிறது, காலம் கடத்தாமல், ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளாமல்.

ஆறறிவு உள்ள மனிதன் , இயற்கையோடு இணைந்து வாழும் போது, சடப்பொருளின் இயக்க ஒழுங்கை பின்பற்றுகிறார்களா??? ஆக்கத்துறையில் அறிவை செலுத்துகிறார்களா???
பிணக்கு எங்கு வருகிறது???

பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் தான் காரணம்.

*இவைகளில் எல்லாம் தன்னிடமும், பிறரிடமும், அனைத்திலும், அளவுமுறை காக்க மறப்பதும், மதித்து வாழ மறுப்பதும் தான் காரணம்.*

*சடப்பொருளுக்கு இருக்கும் அறிவு  மனிதர்கள் சிலருக்கு  இருந்தால், அவரவர் கடமைகளை செய்து கொண்டே இருப்பார்கள். பலனை எதிர்பார்க்க மாட்டார்கள்.*

*விழிப்புநிலையில் அளவுமுறையுடன் அறிவை ஆக்கத்துறையில் செயல்களாற்ற மனதில் சமநிலை வந்துவிடும்.*

அன்புடன் ஜெ.கே

Monday, 2 July 2018

Vethathiri maharishi speeches


தினம் ஒரு மாற்றம் (02/07/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (02/07/2018)

குழந்தைகள் வளர்ப்பில்  பெற்றோர் கற்றுத்தருவதும், யாருடைய பொறுப்பில், வளர்ப்பில் பெரும்பாலும்  குழந்தைகள் வளர்க்கப்படுகிறதோ.. அவர்களின் இயல்பு அக்குழந்தைக்கு இயற்கையாகவே வரும்.

சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை என்று கூறுவார்கள்.

பெற்றோர் நடவடிக்கை, பேச்சு, பண்பு, அனைத்தும்  குழந்தையின் கருமையத்தில் இயல்பாகப் பதிந்து அதுவே பெற்றோரிடம் திரும்பும்.

ஆகவே பெற்றோர் எவ்வளவு இனிமையாகவும், கண்டிப்பாகவும், கண்டிப்பைக் கூட அக்கறையாக, அன்பாகக் கூறும்போது அது அவர்களின் மனதில் ஆழமாகப் பதிந்து அக்குழந்தைகளின் ஆளுமைத்திறனாக மலர்ந்து வெளிவருகிறது.

நல்ல நட்பு, உயர் பண்பு அடிப்படையில் பெரியவர்களுக்கு மரியாதை.....  அக்குழந்தையின் பெற்றோர்கள் அக்குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் நல்லதொரு சூழ்நிலை, அவர்கள் மனதில் பதிகிறது சிறுவயதிலேயே.

Basement strong என்று கூறுவார்களே... அவ்வாறு கூறப்படும் அனைத்துவகை நற்பண்புகளும் அக்குழந்தையின் பெற்றோர் அவர்களின் பெற்றோரை மதித்து அன்புடன் நடத்துவதை பார்க்கும் போது, அக்குழந்தைகள் 'தான்' பெரியவர்களாகி வளரும் போது தங்களது பெற்றோரை அன்புடன் மதித்து வாழ்கின்றனர்.

70. மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.

இவனைப் பெற பெற்றோர் என்ன தவம் செய்தார்கள் என்ற சொல்லைப் பெற்றோர் கேட்கும்படி செய்வதே பெற்றோர்க்கு மகன் செய்யும் உதவி.

'பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.'

அறிவுடைய குழந்தைகள் தவிர நான் அடைய வேண்டியது வேறு இல்லை.

அன்புடன் ஜெ.கே

தினம் ஒரு மாற்றம் (01/07/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (01/07/2018)

*கடவுளை வணங்கும் போது கருத்தினை உற்றுப்பார்* என்று நமது ஆசான் அருட்தந்தை அவர்கள் கூறுவார்கள்.

கோயிலுக்கு சென்றால் என்ன நினைக்கிறோம். அந்த எண்ணம் ஈடேற தன்னை தகுதிப்படுத்திக் கொள்ள ஒருசிலர் சிந்திக்கின்றனர்.

அந்த சிந்தனையின் விளைவுதான் யோகநெறி வாழ்க்கை கிடைப்பது.

ஆனால் பக்தியிலேயே ஒருவர் மூழ்கினால்,  அவரிடம் தேடல், தன்னை அறிதல், முயற்சியில் இறங்குவதில்லை.

பக்தியில் மனம் திளைத்து ஞானம் வர மறுக்கின்றது.

முழுமைப்பேறு என்பது ஒருவர் தன்னை தன் மூலத்தை உணர்ந்து அதன் வழியில் செல்வது.

மூலம் என்பது இறைநிலை உணர்வு. அதன் வழி நடப்பது என்பது அறநெறி வாழ்க்கையை கடமையுணர்ந்து செயல்களாற்றுவது.

பக்தியில் பக்தன் இறைவனிடம் சரணடைந்து அன்புவழியில், அறநெறி வழியில், அனைத்துயிர்களிடத்தும் பாரபட்சம் இல்லாமல்  வாழ்ந்தால் அதுவே ஞானம்.
அறிவே முழுமையாகும் போது முக்தியாகிறது.

அன்புடன் ஜெ.கே