வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!
*தினம் ஒரு மாற்றம்* (03/07/2018)
துன்பம் ஏன் வருகிறது??
அதை போக்குவது எப்படி?
குறள் 115:
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.
விளக்கம்: தீமையும் நன்மையும் எல்லார்க்கும் முன்பே குறிக்கப்பட்டு விட்டன; இதை அறிந்து நெஞ்சத்தால் நீதி தவறாது இருப்பது சான்றோர்க்கு அழகாகும்.
kural 115:
Explanation: Loss and gain come not without cause; it is the ornament of the wise to preserve evenness of mind (under both)
*எந்த ஒன்றிலும் அளவுமுறை மீறும் போது இன்பத்தையே துன்பமாக உணர்கிறோம். எதிலும் சமநிலை நோக்கு இருந்தால் சிக்கலிலிருந்து தப்பிக்கலாம்.*
எதில் எல்லாம் அளவுமுறை காக்க வேண்டும்??
எதை எல்லாம் நினைக்கிறோமோ, அனுபவிக்கிறோமோ அதில் எல்லாம் அளவுமுறை காக்க வேண்டும்.
நமது அருட்தந்தை அவர்கள் எளிமையாக ஐந்தில் அளவுமுறை .... உணவு, உழைப்பு, உறக்கம், உடலுறவு மற்றும் எண்ணம் இவற்றில் காத்தால் போதும் என்று கூறிவிட்டார்கள். அதில் எல்லாம் அடங்கி விடுகிறது.
உயிரற்ற சடப்பொருட்களான சூரிய குடும்ப உறுப்பினர்கள், இயக்கஒழுங்கமைப்பில், அந்தந்த இடைவெளியில், ஆக்கத்திற்கு தனது ஆற்றலை பயன்படுத்துகிறார்கள். அவை துல்லியமாக இயங்கிக் கொண்டிருக்கிறது, காலம் கடத்தாமல், ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளாமல்.
ஆறறிவு உள்ள மனிதன் , இயற்கையோடு இணைந்து வாழும் போது, சடப்பொருளின் இயக்க ஒழுங்கை பின்பற்றுகிறார்களா??? ஆக்கத்துறையில் அறிவை செலுத்துகிறார்களா???
பிணக்கு எங்கு வருகிறது???
பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் தான் காரணம்.
*இவைகளில் எல்லாம் தன்னிடமும், பிறரிடமும், அனைத்திலும், அளவுமுறை காக்க மறப்பதும், மதித்து வாழ மறுப்பதும் தான் காரணம்.*
*சடப்பொருளுக்கு இருக்கும் அறிவு மனிதர்கள் சிலருக்கு இருந்தால், அவரவர் கடமைகளை செய்து கொண்டே இருப்பார்கள். பலனை எதிர்பார்க்க மாட்டார்கள்.*
*விழிப்புநிலையில் அளவுமுறையுடன் அறிவை ஆக்கத்துறையில் செயல்களாற்ற மனதில் சமநிலை வந்துவிடும்.*
அன்புடன் ஜெ.கே
No comments:
Post a Comment