வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!
*தினம் ஒரு மாற்றம்* (07/07/2018)
குறள் 71:
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.
சாலமன் பாப்பையா உரை:
அன்பிற்கும் கூடப் பிறர் அறியாமல் தன்னை மூடி வைக்கும் கதவு உண்டோ? இல்லை. தம்மால் அன்பு செய்யப்பட்டவரின் துன்பத்தைக் காணும்போது வடியும் கண்ணீரே அன்பு உள்ளத்தைக் காட்டிவிடும்.
Translation:
And is there bar that can even love restrain?
The tiny tear shall make the lover's secret plain.
Explanation:
Is there any fastening that can shut in love ? Tears of the affectionate will publish the love that is within
ஒருவர் இயல்பு நிலையில் உள்ளவராயின், தான் செய்வது சரி என்று நியாயப்படுத்த விரும்பினால்.. அதில் உண்மையில் நியாயம் உள்ளதா? என்றும் அதனால் தனது அனுபவத்திற்கும் அறிவிற்கும், பிறருக்கும் மனதிற்கும் சரியாக இருக்குமா என்று ஆராய்ந்து பினனரே அதை நியாயப்படுத்த வேண்டும்.
சில பேர் அதை பிறர் மீது எப்படியாவது தான் சொல்வதை ஏற்க வேண்டும் என்று திணிப்பார்கள்.
அந்தத் திணிப்புக்கு ஆளாகாமல் ஒருவர் விழிப்புநிலையோடு இருந்தால் அவரவர் தன்னை பாதுகாத்துக் கொள்வதோடு, திணிப்பவர்களுக்கு புரிய வைக்கலாம்.
ஆனால் சில பேர் அறிவுரைகளை ஏற்க மாட்டார்கள்.
யார் சொல்லி யார் கேட்பது என்று 'தானே உசத்தி' என்று ஒரு கர்வம் இருக்கும்.
அப்படிப்பட்டவர்களிடம் பேசுவதைக் குறைத்துக் கொண்டு அளவோடு உரையாடி விட்டு சென்றுவிடுதல் நலம்.
அவ்வாறு உள்ளவர்கள் இயல்பான நிலையில் எப்போதும் இருப்பது அரிது.
மனதில் எதையாவது கற்பனையாக, தவறாக நினைத்துக் கொண்டு இருப்பார்கள். உண்மையைக் கூட பொய் என்று எண்ணுவார்கள்.
வாழ்த்துவதும், அவ்வாறு உள்ளவர்களை நேசிப்பதும், மன்னித்தும், மறந்தும் விட வேண்டும்.
இயல்பான நிலையில் ஒருவர் இல்லாத நிலையில் மனரீதியாக பாதிப்பு இருப்பது தெரியாமலேயே பேசும் பழக்கம் இருக்கும்.
அன்புக்கு ஏங்குபவர்கள் அவர்கள். அவர்களிடம் அன்பாகப் பழகி வந்தால் இயல்பு நிலைக்கு வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
அன்பைப் பகிர்வோம். அன்புமயமாக்குவோம் இவ்வுலகை. அனைவரும் இறைவனின் அம்சமே!
அன்புடன் ஜெ.கே
No comments:
Post a Comment