வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!
*தினம் ஒரு மாற்றம்* (08/07/2018)
நல்ல மாற்றங்களை நம்மிடமும், சமுதாயத்திடமும், நாம் வரவேற்கத் தயாராகிறோம். ஏனென்றால் தன்னை மேம்படுத்திக் கொள்ள அனைவரும் தயாராகவே உள்ளனர்.
தனது எண்ணம், தரம், மதிப்பு, பண்பு இவைகளை நன்முறையில் பின்பற்றவே முயல்கின்றனர்.
ஆனால் 'யார்' பின்பற்றுவது என்பதில் சற்று முரண்பாடு வருகிறது. அதற்குக் காரணம் Egoism.
*தான்* , *தனது* என்கிற உரிமைகளிலும் பற்றுதல்களிலும் சிக்குண்டு அதிலிருந்து மீளத்தெரியாமல் இருப்பதால் தான்.
அனைவருக்கும் ஆறறிவு உண்டு. ஆனால் சில நேரங்களில் தனது திறத்தையும், தரத்தையும், பல்வேறு யுக்திகளை பயன்படுத்தி, பல்வேறு துறையில், முன்னேற்றம் காண்கிறார்கள்.
வெற்றி காணாத ஒருசிலர் மனதளவில் ஏதோ ஒரு வெறுமை சூழ அனுமதித்து விடுகின்றனர். தான் நினைப்பது சரி என்று எண்ணி வாழ்வது தான் அதற்குக் காரணமாகின்றது.
உண்மையில் சரி என்பது சரியா? தவறா? என்று முடிவுகளை தேர்ந்து
எடுக்கும் போது, அதன் விளைவுகளை, பல பேர், ஆராய்வதில் கவனம் கொள்வதில்லை.
அதன் விளைவுகளை ஆராய்ந்து பார்த்து தனக்கும் பிறருக்கும் நன்மையுண்டு என்றால் அதை அனுமதிக்கலாம்.
"தப்புக்கணக்கிட்டுத் தான் ஒன்று எதிர்பார்த்தால் ஒப்புமோ இயற்கை விதி?, ஒழுங்கமைப்புக்கேற்றபடி, அப்போதைக்கப்போதே அளிக்கும் சரி விளைவு,
எப்போதும் கவலையுற்று இடர்படுவார் இதை உணரார்".
*அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்*
அன்புடன் ஜெ.கே
No comments:
Post a Comment