வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!
*தினம் ஒரு மாற்றம்* (06/07/2018)
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் காயகல்பப் பாடலில்
"பிணிகள் நீங்கும் புத்துணர்வும், இறையருளும் ஊற்றெடுக்கும் மாயமென வித்தமுத ரசமாய் மாறி *மரணமிலாப் பெருவாழ்வு சித்தியாகும்*" என்று கூறுகிறார்கள்.
இப்பாடலில் காயகல்பம் பயிற்சியை உயர்சஞ்சீவி என்று கூறுவதை பார்க்க முடியும்.
இதை ஆண் பெண் இருபாலரும் பயில்வதால், நோய் எதிர்ப்பாற்றலும், இளமை நோன்பு காக்கவும், முதுமையை தள்ளிப் போடவும் முடியும் இயற்கையாக.
எந்த ஒரு சிக்கல் உடலிலே வந்தாலும் அதை சரிசெய்யக் கூடிய ஆற்றல் இயல்பாக உடலுக்கு உண்டு என்பது எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும்??
ஒரு நோய் என்றால் உடனே மருத்துவரிடம் சென்று இன்னும் நோயையே விலைகொடுத்து வாங்குகிற மக்கள் மத்தியில் யோகப்பயிற்சியை செய்து தன்னை சரிபடுத்திக் கொள்ளும் மக்களும் இருக்கிறார்கள்.
மனவளக்கலை எளியமுறை பயிற்சி முறைகள், உணவு ஒழுக்கமுறை என்று அனைத்தும் தன்னைத் தேடி வந்து இறைவன் கொடுத்து அதை பல பேர் மதித்து அன்றாடம் செய்கிறார்கள். பின்பற்றுகிறார்கள்.
பின்பற்றுகிறவர்கள் உடல்நலம் பேணுகிறார்கள். மனநலம் பேணுகிறார்கள்.
அனைவரும் பூரண உடல்நலம், மனநலம், உயிர்வளம், பெறுவோம் யோகக் கலை பயின்று.
அன்புடன் ஜெ.கே
No comments:
Post a Comment