Monday, 2 July 2018

தினம் ஒரு மாற்றம் (01/07/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (01/07/2018)

*கடவுளை வணங்கும் போது கருத்தினை உற்றுப்பார்* என்று நமது ஆசான் அருட்தந்தை அவர்கள் கூறுவார்கள்.

கோயிலுக்கு சென்றால் என்ன நினைக்கிறோம். அந்த எண்ணம் ஈடேற தன்னை தகுதிப்படுத்திக் கொள்ள ஒருசிலர் சிந்திக்கின்றனர்.

அந்த சிந்தனையின் விளைவுதான் யோகநெறி வாழ்க்கை கிடைப்பது.

ஆனால் பக்தியிலேயே ஒருவர் மூழ்கினால்,  அவரிடம் தேடல், தன்னை அறிதல், முயற்சியில் இறங்குவதில்லை.

பக்தியில் மனம் திளைத்து ஞானம் வர மறுக்கின்றது.

முழுமைப்பேறு என்பது ஒருவர் தன்னை தன் மூலத்தை உணர்ந்து அதன் வழியில் செல்வது.

மூலம் என்பது இறைநிலை உணர்வு. அதன் வழி நடப்பது என்பது அறநெறி வாழ்க்கையை கடமையுணர்ந்து செயல்களாற்றுவது.

பக்தியில் பக்தன் இறைவனிடம் சரணடைந்து அன்புவழியில், அறநெறி வழியில், அனைத்துயிர்களிடத்தும் பாரபட்சம் இல்லாமல்  வாழ்ந்தால் அதுவே ஞானம்.
அறிவே முழுமையாகும் போது முக்தியாகிறது.

அன்புடன் ஜெ.கே

No comments: