வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!
*தினம் ஒரு மாற்றம்* (02/07/2018)
குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர் கற்றுத்தருவதும், யாருடைய பொறுப்பில், வளர்ப்பில் பெரும்பாலும் குழந்தைகள் வளர்க்கப்படுகிறதோ.. அவர்களின் இயல்பு அக்குழந்தைக்கு இயற்கையாகவே வரும்.
சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை என்று கூறுவார்கள்.
பெற்றோர் நடவடிக்கை, பேச்சு, பண்பு, அனைத்தும் குழந்தையின் கருமையத்தில் இயல்பாகப் பதிந்து அதுவே பெற்றோரிடம் திரும்பும்.
ஆகவே பெற்றோர் எவ்வளவு இனிமையாகவும், கண்டிப்பாகவும், கண்டிப்பைக் கூட அக்கறையாக, அன்பாகக் கூறும்போது அது அவர்களின் மனதில் ஆழமாகப் பதிந்து அக்குழந்தைகளின் ஆளுமைத்திறனாக மலர்ந்து வெளிவருகிறது.
நல்ல நட்பு, உயர் பண்பு அடிப்படையில் பெரியவர்களுக்கு மரியாதை..... அக்குழந்தையின் பெற்றோர்கள் அக்குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் நல்லதொரு சூழ்நிலை, அவர்கள் மனதில் பதிகிறது சிறுவயதிலேயே.
Basement strong என்று கூறுவார்களே... அவ்வாறு கூறப்படும் அனைத்துவகை நற்பண்புகளும் அக்குழந்தையின் பெற்றோர் அவர்களின் பெற்றோரை மதித்து அன்புடன் நடத்துவதை பார்க்கும் போது, அக்குழந்தைகள் 'தான்' பெரியவர்களாகி வளரும் போது தங்களது பெற்றோரை அன்புடன் மதித்து வாழ்கின்றனர்.
70. மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.
இவனைப் பெற பெற்றோர் என்ன தவம் செய்தார்கள் என்ற சொல்லைப் பெற்றோர் கேட்கும்படி செய்வதே பெற்றோர்க்கு மகன் செய்யும் உதவி.
'பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.'
அறிவுடைய குழந்தைகள் தவிர நான் அடைய வேண்டியது வேறு இல்லை.
அன்புடன் ஜெ.கே
No comments:
Post a Comment