வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!
*தினம் ஒரு மாற்றம்* (05/07/2018)
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண்.
மு.வ உரை:அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும், அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும் ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம், பகைவராலும் அழிக்க முடியாத உட்கோட்டை.
எந்த ஒரு விஷயத்தையும், எந்த கோணத்தில் பார்த்தால் சரியாக இருக்குமோ, அந்தக் கோணத்தில் மட்டுமே பார்க்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
அணுகுமுறையும், வார்த்தைகளும் பிறர் மனதிற்கு இதமானதாகவும் பதமானதாகவும் இருக்குமாறு தேர்ந்தெடுத்த இனிமையான சொற்களை பயன்படுத்த வேண்டும்.
தொ
பிறர் மனம் வருத்தா மாநெறிகளை பின்பற்றி வாழ்ந்தால், வருத்த அலைகளே இந்த சமுதாயத்தில் இருந்திருக்காது..
சமுதாயத்தில் ஏற்படும் நல்ல மாற்றம் நல்லவர்களால் நினைக்கப்பட்ட எண்ணங்களும் அதன் விளைவுகளும்.
சமுதாயத்தில் ஏற்படும் தரம் குறைவான விஷயங்கள் எல்லாம்... சில பேரின் முரண்பாடான, எதிர்மறையான எண்ணங்களுக்கு, வலிமை கொடுத்ததன் விளைவு ஆகும்..
சமுதாய மாற்றம் யாரிடம் வர வேண்டும்??
ஒவ்வொரு மனிதனின் எண்ணத்தில் தூய்மையும், நேர்மறையான சிந்தனையும் இருந்தால் மட்டுமே அது நிகழும்.
அந்த அறிவு எவ்வாறு சாத்தியம்??
*மனவளக்கலையில் தீர்வுகள் உள்ளன.*
அன்புடன் ஜெ.கே
No comments:
Post a Comment