Thursday, 5 July 2018

தினம் ஒரு மாற்றம் (04/07/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (04/07/2018)

குறள் 63:
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.

விளக்கம் 1:
தம்மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும்.

விளக்கம் 2:
பிள்ளைகளைத் தம் செல்வம் என்று அறிந்தோர் கூறுவர். அப்பிள்ளைகள் உள்ளபடியே செல்வமாவது அவரவர் செய்யும் நற்செயல்களால் அமையும்.

English Couplet 63:
'Man's children are his fortune,' say the wise;
From each one's deeds his varied fortunes rise

Couplet Explanation:
Men will call their sons their wealth, because it flows to them through the deeds which they (sons) perform on their behalf

வளர்ந்த ஆண்/பெண் பிள்ளைகள், தாங்கள் சம்பாதிப்பதில் அதிக கவனம், திருமணத்திற்குக் காத்திருப்பது..... திருமணமாகிய பின்.. பெற்றோருக்கு மரியாதை கொடுப்பது,  தனது ஆளுமைத்திறன்  வெளிக் கொண்டு வர வேண்டும் என்கிற வேகம் இருக்கும் அளவிற்கு, அதிகக் கவனமும் அன்பும்,  அக்கறையும், பெற்றோரிடம் செலுத்துகிறார்களா?  அவர்களின் ஆசை என்ன? அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? அவர்களது உடல்நிலையில் அக்கறை காட்டும் பிள்ளைகளாக 'தான்' இருக்கிறோமா??
என்று பிள்ளைகள் தங்களுக்குள் கேட்க வேண்டும்.

பிள்ளைகளுக்காக அனைத்தையும் தியாகம் செய்யும் பெற்றோர்கள், பிள்ளைகள் 'தங்கள்' கடமைகளை ஒழுங்காக செய்ய பெற்றோர்கள் அக்கறை காட்டுகிறார்களா?? கற்றுத்தருகிறார்களா??

பெற்றோரை மதிக்கும் பிள்ளைகளாக வளர்த்தால்,  பிள்ளைகள் தாங்கள் பெற்றோராகும் போது தங்களை மதிக்கும்படியான ஒரு வளர்ப்பினை தங்கள் பிள்ளைகளுக்கு நல்குவார்கள்.

குடும்பத்தில், திருமண பந்தத்தில், இணையும் பெண் புக்ககம் செல்லும் போது கணவரது  குடும்பத்தை பாரபட்சம் கருதாது  அன்புடன் பேணிக் காப்பது, ஒவ்வொரு பெண்ணின் கடமையும் பொறுப்புமாகும். அதே போல் மனைவியின் உறவுகளை தன் குடும்ப உறவுகளைப் போல பாரபட்சம் இல்லாமல் காப்பது ஒவ்வொரு கணவரது கடமையாகும்.

இவ்வாறு தங்களது கடமைகளை ஒழுங்காக செய்தால் பிணக்கு ஏன் வரப் போகிறது?

Ego and Partiality.... தேவையில்லை உறவுகளிடம். உலகில் அனைவரும் நம் சொந்தங்களே என்ற உணர்வு இருந்தால்  'நான்' மறைந்து அன்பு மலரும். அங்கே அமைதி ஓங்கும்.

அன்புடன் ஜெ.கே

No comments: