Thursday, 9 August 2018

தினம் ஒரு மாற்றம் (09/08/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (09/08/2018)

குறள் 75: 

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து 
இன்புற்றார் எய்தும் சிறப்பு.

கலைஞர் மு.கருணாநிதி உரை: 

உலகில் இன்புற்று வாழ்கின்றவர்க்கு வாய்க்கும் சிறப்பு, அவர் அன்புள்ளம் கொண்டவராக விளங்குவதன் பயனே என்று கூறலாம்.

மு.வரதராசனார் உரை:

உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்கையின் பயன் என்று கூறுவர்.

ஒருவர் தன்னைப்பற்றி ஆராய்ந்து தன்னகத்தே இருக்கும் குறைகளை ஆய்ந்து தெளியும் போது மட்டுமே வினைப்பயன் தீரும்.

பிறரைப் பற்றி ஆராய்வதனால் ஒருபோதும் ஒருவருக்கு மேன்மை கிட்டாது.

எவ்வளவோ பெரியவர்கள், சித்தர்கள், மகான்கள், எவ்வளவோ விஷயங்களை எடுத்து உரைத்திருக்கிறார்கள்.

அதில் எல்லாம் *நான் யார்?* என்கிற தத்துவமும், இறையுணர்வு மற்றும் அறநெறி எனும் சிந்தனையும் அதிகம் மேலோங்கி இருக்கும். அதற்குக் காரணம் ஒருவர் தன்னை அறியவும், உணரவும், முற்பட்டால் மனிதனின் மனதில் அன்பு சுரக்கும். அந்த அன்பு மட்டுமே பிறரிடத்திலும் காண்பிக்கும் போது அது தனக்கும் பிறருக்கும் மட்டும் அல்ல.. அது அனைத்து இடங்களிலும் ஊடுருவி பிரதிபலித்துக் கொண்டே இருக்கும்.
அன்பு மேலோங்கும். அறநெறியில் வாழ்க்கை கடைபிடிப்பர்.

அன்பானது தன்பால் அனைத்தையும் ஈர்க்கும்.

அன்பால் கல்லான மனதைக் கூட கரைக்க முடியும். அன்புக்கு அவ்வளவு வல்லமை உண்டு.

மன்னிக்கும் மனம் அன்புள்ள இடத்திலே மட்டும் இருக்கும்.

அன்பும் அறனும் உலகில் அனைவரிடமும் இயல்பில் உள்ளது.. அந்த அலைநீளத்திற்கு  சென்றால் அனைத்தும் நிலையாக இருப்பதை உணர முடியும்.

அன்புடன் ஜெ.கே

The change of day (09/08/2018)

"May the whole world enjoy happiness, Good health, long life, enough wealth, prosperity, wisdom and peace."

Be blessed!!

* The change of day * (09/08/2018)

Smile 75 :

It is important to take pleasure in the loneliness of the wedding 
.

Description 1:
It is the benefit of living in a world that is enjoying the pleasure of living in a world of pleasure and love.

Description 2:
Those who live in this world will find that the best thing they can do is love and love.

English Couplet 75:
Sweetness on earth and rarest bliss above 
These are the fruits of tranquil life of love

Couplet Explanation:
These are the fruits of tranquil life of love

Only one person can analyze himself and examine the weaknesses of his own.

Never will anyone have an advantage over the study of others.

Many adults, siddhars, sages, and many things have been taken up.

It's all about * who am I? * The philosophy, the knowledge of God and morality are much more prevalent. Because the one who knows and feels for himself is the love of man in the mind. When that love only shows up in other people it is not just for himself and for others. It will be reflected in everywhere. Love will prevail. Living in morality.

Love will attract everything.

The love also could break the mind of the stone.  Love is so powerful.

The forgiveness will be only in a loving place.

Love and charity are in the nature of all in the world .. If you go to that wavelength, you can feel that everything is stable.

With JK

Wednesday, 8 August 2018

The change of day (08/08/2018)

"May the whole world enjoy happiness, Good health, long life, enough wealth, prosperity, wisdom and peace."

Be blessed!!

The Change of Day (08/08/2018)

The Lesson 102 :

Thanks to the time 
and the shortness of time is a great student.

Description 1:
Even if one of the help he has done in his lifetime, it is much bigger than the world, knowing its nature.

Description 2:
While helping us at the critical time, the smallest of the time, the time that it helped to count is much bigger than the earth.

English Couplet 102:
A timely benefit,-though thing of little value, 
The gift itself, -in excellence transcends the earth

Couplet Explanation:
A favour conferred in the time of need, though it is small (in itself), is (in value) much bigger than the world

When someone is in good condition and when it is low, it is impossible to say that the quality of one's personality can be improved.

Nowadays, the media, the Internet, are using good and / or for other things to publish. It is good if you think that it will benefit you and others.

* Appreciation * is very important for humans.

God gives us all the food, the clothes, the living house, the relationships that you live in. It is insufficient to protect. Thank you for everything you get.

How many people are grateful for food (such as fowl, rice, lentils, etc.) from a cooker (whether it's wife, mother, or other person)?

Thank you ...
Giving, cultivating and giving parents their duty properly and providing security.

How many people are grateful to save their parents during the elderly period when their children grow up?

All life came from God. Thanks to it and fulfill its obligation.

Whatever help you receive, the lender will not fail to show the gratitude when the time comes.

Similarly, if a person apologizes for forgiveness, he should not be allowed to reappraise him.

Only forgiveness and forgetfulness will make relationships better. Unity can be saved.

With JK

தினம் ஒரு மாற்றம் (08/08/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

தினம் ஒரு மாற்றம் (08/08/2018)

குறள் 102:
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

விளக்கம் 1:
உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்.

விளக்கம் 2:
நமக்கு நெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி, அளவில் சிறியது என்றாலும், உதவிய நேரத்தை எண்ண அது இந்தப் பூமியை விட மிகப் பெரியதாகும்.

English Couplet 102:
A timely benefit, -though thing of little worth,
The gift itself, -in excellence transcends the earth

Couplet Explanation:
A favour conferred in the time of need, though it be small (in itself), is (in value) much larger than the world

ஒருவர்  நல்ல நிலையில் இருக்கும் போது போற்றுவதும், தாழ்ந்த நிலையில் இருக்கும்  போது தூற்றுவதும், ஒருவரின் நற்பண்புகளை மேம்படுத்தும் பண்பு என்று கூற இயலாது.

தற்காலத்தில்  ஊடகங்கள், இணையம், வாயிலாக  நல்ல/ மற்றும் பிற விஷயங்களையும் வெளியிடப் பயன்படுத்துகின்றனர். அது தனக்கும்,  பிறருக்கு நலம் விளைவிக்குமா என்று சிந்தித்து வெளியிட்டால் நல்லது.

*நன்றியுணர்வு* மனிதருக்கு மிகவும் முக்கியம்.

வாழ்நாளில் உண்ணும் உணவு, உடுத்தும் உடை, இருக்கும் வீடு, உறவுகள் என்று அனைத்தையும் இறைவன் பாரபட்சம் பார்க்காமல் கொடுக்கிறார். அதை பேணிக் காப்பது அறிவுடைமை. கிடைத்த அனைத்திற்கும் நன்றி கூறுவது சிறப்பு.

உணவு (பஞ்ச பூதங்கள், அரிசி, பருப்பு, காய்கனி முதலிய அனைத்துமே)  உற்பத்தி செய்பவரிலிருந்து சமைத்துக் கொடுக்கும் நபர் வரை ( அது மனைவியோ, தாயோ, அல்லது வேறு நபரோ) நன்றியை எத்தனை பேர் கூறுகின்றனர்?

நன்றியுணர்வு ...
பெற்று,   வளர்த்து ஆளாக்கி பெற்றோர்கள் ஒழுங்காக அவர்களது கடமையை  செய்கிறார்கள், பாதுகாப்பையும் அளிக்கிறார்கள்.

பிள்ளைகள் வளர்ந்தபின்  வயதான காலத்தில் பெற்றோரை காப்பாற்ற, நன்றியுணர்வை எத்தனை பேர் செலுத்துகின்றனர்?

அனைத்து உயிரும் இறைவனால் வந்தது. அதை நன்றி செலுத்தி தனது கடமையை நிறைவேற்ற வேண்டும்.

எந்த உதவி யாரிடம் பெற்றாலும் அதற்கு நன்றிக் கடன் படுகிறவர் உரிய நேரம் வரும் போது அந்த நன்றியை காட்டத் தவறக் கூடாது.

அதே போல் மன்னிப்பு ஒருவர் மனம் திருந்திக் கேட்டால் அவருக்கு மறு வாய்ப்பளிக்கவும் மறுக்கக் கூடாது.

மன்னிப்பும் மறப்பதும் மட்டுமே உறவுகளை தக்க வைக்கும். ஒற்றுமையை காக்க முடியும்.

அன்புடன் ஜெ.கே

The change of day (07/08/2018)

"May the whole world enjoy happiness, Good health, long life, enough wealth, prosperity, wisdom and peace."

Be blessed!!

* The change of  day * (07/08/2018)

"Anyone who knows everything from the Lord to the first life will be the same magnet."
- Vedathiri Maharshi

Choosing pleasant relationships is only a matter of great satisfaction.

If you look at a few you will have to talk to him. It seems that you should talk to some people. This is also the reason for gravity. Magnetic energy will attract similar people.

Sunflower Sun will be attracted to the direction of the sun.

will begin to respond to them and to the others and in the universe.

Repulsive energy will attract those who go away. Magnet has the ability to attract and exert power. But attract those who have similar ideas.

If you think that's an idea, it's important to understand how it works.

If magnetic oscillation, everyone will start to attract positive. They understand that the unity is strength.

If you get positive thoughts and gain the pleasure of your heart, you will find that the positive thoughts in the universe are more likely to reflect.

The only idea, the unity of thought, is to join everyone to join the band from the cosmic energy. That's the solution. The world peace will come soon.

With JK

தினம் ஒரு மாற்றம். (07/08/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (07/08/2018)

"எந்த ஒன்று அறிந்திடில் இறைவன் முதல் உயிர் வரை எல்லாவற்றையும் உணர்த்துமோ அதுவே காந்தமாம்."
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

இனிமையான உறவுகளை தேர்ந்தெடுப்பது ஒருவரின் கருமையப் புண்ணிய பலனால் மட்டுமே.

ஒரு சிலரை பார்த்தால் அவரிடம் பேச வேண்டும் என்று தோன்றும். ஒரு சிலரிடம் பேச வேண்டுமா என்று தோன்றும். இதற்கும் ஈர்ப்பு விதியே காரணம். காந்த ஆற்றல் ஒத்த பண்புடையவர்களை ஈர்க்கும்.

சூரியகாந்திப் பூ சூரியன்  வரும் திசைக்கேற்றவாறு ஈர்க்கப்பட்டுத் திரும்பும்.

உறவுகள்  வேண்டாம், எதுவும் வேண்டாம்  என்று நினைப்பவர்களிடம்,   *வேண்டாம்* என்கிற அலை அவர்களிடமும், பிறரிடமும், பிரபஞ்சத்திலும் மோதி மோதி பிரதிபலிக்க ஆரம்பித்து விடும்.

விலக்கும் ஆற்றல் விலகிச் செல்பவர்களை ஈர்த்துக் கொள்ளும். காந்தம் ஈர்க்கும் ஆற்றலும், விலக்கும் ஆற்றலும் கொண்டது. ஆனால் ஒத்த எண்ணம் உடையவர்களை ஈர்க்கும்.

ஒரு எண்ணம் தான் என்று நினைத்தால் அது எவ்வளவு வேலை செய்கிறது என்பது புரிந்து கொள்ள வேண்டும்.

காந்த அலையியக்கம் புரிந்தால் அனைவரும் நேர்மறைகளை மட்டுமே ஈர்க்க ஆரம்பிப்பார்கள். ஒற்றுமையே வலிமை என்பதை புரிந்து கொள்வார்கள்.

நேர்மறை எண்ணங்களை ஈர்த்து வாழ்க்கையில் மேன்மை அடைந்து மனதில் நற்சிந்தனைகளை வலம் வர விட்டால் பிரபஞ்சத்திலும் அந்த நேர்மறை எண்ணங்கள் மோதி பிரதிபலிக்கும் வாய்ப்பு அதிகம்..

ஒரே எண்ணம், ஒற்றுமையான எண்ணம், ஒன்று சேர சேர வான்காந்தத்திலிருந்து அனைவருக்கும்  ஒரு பிணைப்பை ஏற்படுத்தும். அதுவே  தீர்க்கமாகும். உலக அமைதியும் விரைவில் வந்துவிடும்.

அன்புடன் ஜெ.கே

Monday, 6 August 2018

The Change of day (06/08/2018)

May the whole world enjoy Prosperity, happiness, long life, enough wealth and peace.

Be Blessed.

The Change of day (06/08/2018)

Short 380 :
The scene in the 
scene is the same.

Description 1:
There is something else that is stronger than the coward, and the other way to prevent the exclusion of the hull.

Description 2:
If we act in a different way to defeat the destiny, it will come to us in a different way than that. So what's more powerful than destiny?

English Couplet 380:
What powers so great as that of Destiny? Man's skill 
Some other thing contrives; but fate's beforehand still.

Couplet Explanation:
What is stronger than fate? If we think of an expedient, it will be with us before (the thought).

Why should one support nature or why it should be in harmony with friendship? Nature is the rule. That's the effect.

He who sows the vine  will reap.
He who sows the seed will cut it.

Natural is everything. Nature is the environment we live in, from the dust and the man to all ... the magnetic waves coming from it .... consequences ....

Everything is happened and designed  by the actions of one person, the life, the mind, the nature, the nature of everything ...

By man's knowledge, it transforms the nature and transfers it (creates the standard of its quality without altering quality from its quality).

People who think of creative will never want to reduce their quality.

In today's time, knowledge is developed, developed, and served by others.

The natural nature of the nature of nature follows the nature of one's character, the nature of the character.

Only nature will be helpful to everyone if it respects nature.

The radiation waves of the planets near the Earth make each chemical effect and feel the effect of one's perception.

If the man realizes it and understands its magnetism, its impact will be favored by someone when it's friendly.

It is enough to respect nature. Its friendship is naturally available to one.

With JK

தினம் ஒரு மாற்றம் (06/08/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (06/08/2018)
குறள் 380:

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.

விளக்கம் 1:
ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றோரு வழியை ஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும்.

விளக்கம் 2:
விதியை வெல்ல வேறொரு வழியை எண்ணி நாம் செயற்பட்டாலும், அந்த வழியிலேயோ வேறு ஒரு வழியிலேயோ அது நம்முன் வந்து நிற்கும்‌; ஆகவே விதியை விட வேறு எவை வலிமையானவை?.

English Couplet 380:
What powers so great as those of Destiny? Man's skill
Some other thing contrives; but fate's beforehand still.

Couplet Explanation:
What is stronger than fate ? If we think of an expedient (to avert it), it will itself be with us before (the thought).

இயற்கையை ஒருவர் ஏன் ஆதரிக்க வேண்டும் அல்லது அதனுடன் நல்லிணக்கத்துடன், நட்புடன் ஏன் இருக்க வேண்டும்?? இயற்கை தான் விதி.. அதுவே செயல்விளைவு.

*வி* னை விதைத்தவன் வினை அறுப்பான்.
*தி* னை விதைத்தவன்  தினை அறுப்பான்.

இயற்கையே அனைத்துமாக இருக்கிறது.  இயற்கை என்பது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலை, தூயவெளி முதல் மனிதன் வரை அனைத்துமே..... அதிலிருந்து வரும் காந்த அலைகள்.... விளைவுகள்....

ஒருவரின் உடல், உயிர், மனம், மட்டும் அல்ல, இயற்கை ஒவ்வொன்றையும் இப்படித்தான்.... என்று வடிவமைத்து, தீர்மானித்து அனைத்தையும் ஒருவரின் செயல்களுக்கேற்ப விளைவைத் தருகிறது.

மனிதன் அறிவால்,  இயற்கையை உருமாற்றி, தரமாற்றி (தரத்தை அதன் தரத்தில் இருந்து மாற்றாமல்  அதன் தரத்தை அவ்வாறே இயல்பாகக் கொடுப்பது) ஆக்கப்பூர்வமாக அதை பயன்படுத்தினர்.

ஆக்கவழியில் சிந்திக்கும் மனிதர்கள் ஒரு போதும் தனது தரத்தை குறைத்துக் கொள்ள விரும்புவதில்லை. 

இன்றைய காலத்தில் அறிவை பலபேர் ஆக்க வழியில் தான் செயல்படுத்தி, முன்னேற்றம் கண்டு, அதை பிறரும் பயன்படுத்தும் வண்ணம் சேவை செய்தும் வருகிறார்கள்.

இயற்கையின் ஆற்றலால் இயற்கை வழியை பின்பற்றினால் ஒருவரின் குணநலன், பண்புநலன், காக்கப்படும்.

இயற்கையை மதித்து வாழ்ந்தால் மட்டுமே அனைவருக்கும் இயற்கை ஒத்தும் உதவியுமாக இருக்கும்.

பூமிக்கு அருகே வரும் கோள்களின் கதிர் அலைகள் ஒருவரின் எண்ணத்திற்கேற்ப ஒவ்வொரு ரசாயனத்தன்மையை உருவாக்கி விளைவை உணர வைக்கிறது. 

அதை மனிதன் உணர்ந்து அதன் காந்தத் தன்மையை புரிந்து, அதன் ஆற்றலை நட்புணர்வுடன் ஈர்க்கும் பொழுது அதன் தாக்கம் ஒருவருக்கு சாதகமாகவே இருக்கும்.

இயற்கையை மதித்தாலே போதும். அதன் நட்புறவு ஒருவருக்கு இயல்பாகக் கிடைக்கும்.

அன்புடன் ஜெ.கே

Sunday, 5 August 2018

தினம் ஒரு மாற்றம் (05/08/2018)The Change of day

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (05/08/2018)

குறள் 782: 

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் 
பின்னீர பேதையார் நட்பு.

மு.வரதராசனார் உரை: 
அறிவுடையவரின் நட்பு பிறை நிறைந்து வருதல் போன்ற தன்மையுடையது, அறிவில்லாதவரின் நட்பு முழுமதி தேய்ந்து பின் செல்லுதல் போன்ற தன்மையுடையன.

சாலமன் பாப்பையா உரை: 

பிறை, நாளும் வளர்வதுபோல, அறிவுடையார் நட்பு வளரும்; முழு நிலவு தேய்வது போலப் பேதைகளின் நட்பு தேயும்.

தனக்குக் கிடைக்கும் நட்பினை தேர்ந்தெடுப்பது கூட ஒருவரது கருமையம் தான்.

ஒருவரின் உயர்நட்பு கிடைப்பதற்குக் கூட ஒரு புண்ணியம் வேண்டும்.

நட்பு என்பது நண்பர்கள் வழியில் தான் கிடைப்பது  என்பது இல்லை. பெற்றோரிடம், உறவினர்களிடம் கூட கிடைப்பது உண்டு.

ஒருவர் எதை நினைக்கிறாரோ அதுவாகவே ஆகிறார் என்பது ஒருவரின் எண்ணம் பொறுத்தது.

எந்த எண்ணம் எதைத் தேடுகிறதோ அதுவே கிடைக்கப் பெறுவார்கள்.

நல்ல சிந்தனை, பிறர் நலனில் அக்கறை, மக்கள் நலனில் அக்கறை, இது போன்று தன்னலம் கருதாது பிறர் நலனில் அக்கறை உள்ளோர்கள் தொண்டு புரிவதற்கு ஏற்ற சூழ்நிலையை தானே உருவாக்கி செயல்படுவர்.

வாய்ப்பு என்பது ஒருவர் தானாகவும் தேடி வரும். சுயமாகவும் ஏற்படுத்திக் கொள்ளவும் முடியும். ஆனால் ஒரு நல்வாய்ப்பை சிலருக்கு சூழ்நிலையே.. ஏற்படுத்தித் தரும்.  அதை பயன்படுத்திக் கொள்வது ஒருவரின் அறிவுடைமை ஆகும். நல்வாய்ப்பு என்பது நல்ல அறிவுடையவர்களின் நட்பு மேன்மைக்கு வித்திடும்.

கல்வியறிவு எவ்வளவு அறிவை பெருக்குகிறதோ அவ்வளவு பண்பு பெருக வேண்டும். பிறருடன் நட்பு செய்யும் போது நல்ல நட்பா.. என்று ஆராய்ந்து   நட்புறவு கொள்வது நல்ல பாதைக்கு வழி வகுக்கும். 

நேர்மறை சிந்தனை உடையவர்களின் நட்பு முன்னேற்றத்தைக் கொடுக்கும். நட்பை ஆராய்ந்து தேர்ந்தெடுக்க வேண்டும்.

அன்புடன் ஜெ.கே

''May the whole world enjoy Prosperity, happiness, long life, enough wealth and peace.''

Be Blessed.

The change of day (05/08/2018)

Friendship

782 :

The water is full of the honeycomb 
.
Description 1:
The intellectual's friendship is like the filling of the crescent, and the friendship of the ignorant is like the fullness of the mind.

Description 2:
As the crescent, as the day progresses, the intellectual friendship develops; The friendship of the beats like the whole moon wander.

English Couplet 782:
Friendship with men fulfilled of good waxes like the crescent moon; 
Friendship with men of foolish mood, Like the full orb, waneth soon.

Couplet Explanation:
The friendship of the waxes like the new moon; (but) that of fools wanes like the full moon.

Choosing the nature of his own is also the one's dream.

There is a great way to get someone's high quality.

Friendship is not just about getting in the way of friends. Parents are also available to relatives.

One's opinion depends on what one thinks.

Any idea what they're looking for will get it.

Good thinking, concern for the well-being of the people, the interest in the people's welfare, the self-consciousness of the minds of others and the creation of the environment in which people are concerned.

The possibility is that someone will be looking for it automatically. Can be self and self. But for some people the situation is a situation. It is the intelligence of one's use. Good fortune can result in the goodwill of good intellectuals.

As literacy increases knowledge, the quality must be multiplied. When you are friendly with others, good friendships can be a good way to explore friendships.

The friendship of the positive minded people will improve. You need to explore and select friendship.

With JK

Friday, 3 August 2018

அருட்காப்பு ஓர் விளக்கம்

வாழ்க வளமுடன்

அருட்காப்பு விளக்கம் :

“அருட்பேராற்றல் இரவும் பகலும், எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும், எல்லா தொழில்களிலும், உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும், வழி நடத்துவதாகவும் அமையுமாக” என்பது அருட்காப்பு ஆகும்.

அருட்காப்பின் விளக்கம் பின்வருமாறு :

அருட்பேராற்றல் எங்கும் நிறைந்திருந்தாலும், அது தேங்கியும், அந்த இடத்தை விட்டு விலகாமலும் இருக்க, அத்தூய காந்த ஆற்றல் பாதுகாப்பு வளையமாக அமையட்டும் என்று எண்ணத்தால் அருட்காப்பு  கொடுத்துப் பயன்களை அடைவது பலர் அனுபவத்தில் கண்டு கையாளும் வழக்கம் ஆகும்.

எந்த நோக்கத்தோடு காப்பு கொடுக்கிறார்களோ அதற்கேற்ப பயன் விளையும். எடுத்த காரியத்தில் முயற்சியையும், வெற்றியையும் அது கூட்டுவிக்கும். இதனால் உயிராற்றலின் செலவு தடுக்கப்படுகிறது. ஆற்றல் பெருகி கொண்டே இருக்கிறது. முடிக்கவேண்டிய செயல்கள் தடையின்றி நிறைவேறுகின்றன.

இரவில் தூங்கச் செல்லும் போது அருட்காப்பு தன்னைச் சுற்றிலும், தனது வீட்டை சுற்றிலும் இட்டுக்கொள்ளலாம். தூக்கத்தின்போது தனக்கோ, இல்லத்திற்கோ எவ்வித தீங்கும் ஏற்படாது.

வாகனங்களில் பயணம் செய்கின்ற போது அருட்காப்பை வாகனத்தைச் சுற்றிலும் இட்டுக் கொண்டால், பயணம் மேற்கொள்ள இருக்கின்ற உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ, அவர்கள் விடை பெறுகின்றபோது அருட்காப்பு இட்டு அனுப்பலாம். ஊருக்கு நலமாக சென்றடைவார்கள்.

தன்னை விட வயதில் மூத்தவர்களாக இருந்தால் அவர்களுக்கு மௌனமாக அருட்காப்பு சொல்வது நலம். சிறியவர்களாக இருந்தால் வாய்விட்டு சொல்லி அனுப்பி வைக்கலாம். இன்னும் எத்தனையோ விதங்களில் இந்த அருட்காப்பை மெய்யுணர்வாளர்கள் பயன்படுத்திப் பலன் காணலாம்.

புகழுக்காகவோ, பணத்திற்காகவோ இந்த அருட்காப்பை மற்றவர்க்கு அளிக்கக்கூடாது. உயிர்க்கு உதவியாக, ஒரு கருணை செயலாக, உள்ளம் உவந்து அருட்காப்பிட வேண்டும்.

குருவே துணை.

தினம் ஒரு மாற்றம் (03/08/2018) A Change of day

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (03/08/2018)

*அறிவே தெய்வம்*

"உள்ள தனைத்திலும் உள்ளொளி யாகி
ஒளிர்ந்திடும் ஆன்மாவே-இங்கு,
கொள்ளற் கரிய பிரமமென் றேமறை
கூவுதல் கேளீரோ?" -

*பாரதியார்*

நன்மை செய்பவர்கள் சோதிக்கப்படுகிறார்கள். ஏன் என்றால் அவர்கள் மேலும் மேலும் தன்மை தூய்மை வழிப்பாதையில் செயல்பட தன்னை  அனுமதிக்கும் போது, அவர்களிடம் துன்பம் நீங்குவதற்கு இப்படி சோதனைகள் வருகிறது..

துன்பங்கள் குறைய ஆரம்பிக்கின்றன. செய்த  புண்ணியங்கள் மேலோங்குகின்றன.

உண்மை வழி என்பது இயற்கை வழியாகும். அதை கடக்கும் போது ஒருவரின் தூய்மை மிகவும் அவசியமாகிறது.

எப்படி அன்றாடம் காலையில் குளித்துவிட்டு  அன்றைய நாள் வேலைக்குத் தயாராகிறோமோ அவ்வாறே முழுமைப்பேறு அல்லது முக்தி அல்லது ஒருவரின் கர்மவினை தீர தன் அகத்தை தூய்மை செய்தே பெற முடியும்.

தூய்மை, ஒழுக்கம், உண்மை, நேர்மை என்று ஒருவர் கடைபிடிக்க, தன்னலன் கருதாமல், பிறரின் நலன் கருதி செய்யும் செயலிலே இறைவனே விளைவாக நிற்பார்.

இறைவன் அனைவரிடமும் அறிவாற்றலாக, இருப்பாக உள்ளார். அதை உணர உணர உள்ளொளி பூரித்து உண்மை வழிப் பாதை மட்டும் கண்களிலே தெரிய வரும்.

அதன் பாதையில் செல்லும் போது இறைவனே உற்ற துணையாக எல்லாவற்றையும் தீர்க்கும் வல்லமையை கொடுத்து மேலே தூக்கி விடுவார்.

இறைவன் உண்மைக்கு உடன் இருப்பவர்.

அதை அனைவரும் உணர முற்பட்டால் புலன்வழிப் பாதை மறையும் அறிவுப்பாதை திறக்கும்.

அன்புடன் ஜெ.கே

"May the whole world enjoy Prosperity, happiness, long life, enough wealth and peace."

Be blessed

* A change of day * (03/08/2018)

Knowledge of the god

Is the soul in the light of the inner soul 
-here, the 
crying of the 
Lord?

Bharathiyar

The beneficiaries are being tested. When they allow themselves to act more in the purity of the path, these tests come to relieve them.

Suffering begins to decline. The praises made by them prevail.

The true path is a natural way. When it passes, one's purity becomes more necessary.

How to bathe in the morning and get ready to work on that day, so you can get the whole thing, or clean up your body of salvation or a karma.

Purity, morality, truth and honesty will be the result of a person who does not consider self-interest, regardless of the interests of others.

God is intelligent and intelligent. The real way to see the real way is to see it.

When it goes in the path of God, God will give him the power to solve everything as a supporter.

God is with the truth.

If you try to realize it, the intelligence path will open the disappearing intelligence.

With JK

தினம் ஒரு மாற்றம் (02/08/2018) A change of day

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (02/08/2018)

கணினி, மடிக்கணினி அலைபேசி ஆகிய  பயன்பாட்டை குறைப்பதும், அறவே விடுவதும் குழந்தைகளுக்கு நன்மை தரும்.

குழந்தைகள் விளையாட அலைபேசியில் Games பதிவிறக்கம் செய்கிறீர்களா?? எவ்வளவு நேரம் அனுமதிக்கிறீர்கள்?
வெளியே ஓடி ஆடி விளையாட  காற்றோட்டமான இடத்தில்  அனுமதிப்பது நல்லது.

ஒருவருக்கு  உதவி செய்யவும்,,  ஒரு பொருளை உருவாக்கவும் அவர்கள் அறிவு, படைப்புத்திறன் கொண்டவையாக, புதிது புதிதாக ஒன்றை உருவாக்க அவர்களது அறிவை ஆக்கவழியில்  செயல்படுத்தத் தூண்ட வேண்டும்.

எந்த பொருளையும், உயிரையும் மதிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டியது பெற்றோரின்/ ஆசிரியரின் கடமையாகும்.

பெற்றோர்கள்/ ஆசிரியர்கள் பேசுவது, செய்வது, நடந்து கொள்வது அனைத்தையும் குழந்தைகள் கண்காணிக்கிறது.. பெற்றோருடைய குணம்,  பண்பு, பிறருக்கு பெற்றோர் அளிக்கும் மரியாதை..... இவைகள்....  குழந்தைகளின் குணநலன்களிலும் பண்புநலன்களிலும் காண முடியும்.

குழந்தைகளுக்கு ஆரம்ப காலத்திலேயே Junk foods  க்கு பதில் ஆரோக்கிய உணவை வீட்டிலேயே பழக்கி விட்டால் வெளியே எதையுமே நாடமாட்டார்கள்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் வளர்ப்பில் அதிக கவனம் செலுத்தி அவர்கள் உடல்நலன், மனநலனில் அக்கறை கொண்டு சாத்வீக உணவை பழக்கப்படுத்துதல் நல்லது.  கீரை, முளைப்பயிர், பச்சைக் காய்கறி மற்றும் கனிகளில் சத்து முழுமையாகக் கிடைக்கும்.

அது அவர்களின்  எதிர்காலத்திற்கு உடல்நலன், மன அமைதியை கொடுக்கக் கூடியதாகும். சிந்திக்கும் திறனைத் தூண்டும்.

வேலைக்குப் போய் சம்பாதிக்கும் பெற்றோர்கள் சற்றே வீட்டில்  குழந்தைகளிடம் அக்கறை கொண்டு அவர்களுக்கென்று நேரம் ஒதுக்கினால் அவர்கள் மனது மகிழ்ச்சியான சூழலில் வளரும்.

*எதிர்கால சமுதாயம் அமைதிப் பூங்காவாக நறுமணம் வீச, பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோரிடத்திலும், ஆசிரியர்களிடத்திலும், பொறுப்பும், கடமையும் உள்ளது.*

அன்புடன் ஜெ.கே

"May the whole world enjoy happiness, Good health, long life, enough wealth, prosperity, wisdom and peace."

* A change of day * (02/08/2018)

Reducing or totally avoiding the usage of mobiles, laptops and computer are more beneficial for children .

Do Kids Play a Play Downloading Games ?? How much time do you allow.
It's good to run outside and ventilate it to play.

To help someone, create an object. They need to create knowledge, creativity, innovate to create their own in order to create something new.

It is the obligation of the parent / teacher to teach any thing and life to respect.

Parents / teachers talk, do and do things that are overseen by children. Parents' character, character, parental respect for others ... These can be seen in the character and qualities of children.

Junk foods are replaced by health food at home.

Parents are more focused on their children's care and they are well aware of their health and mental health and practice good food. Spinach, sprout, green vegetables and fruits are available in full.

It can give health and peace of mind to their future. To stimulate thinking ability.

If the parents earning a job and get some time to care for their children at home, their hearts will grow in a happy environment.

Future community is a peacekeeping park and has responsibilities and responsibilities in the Parents and Teachers who raise their children.

With JK

தினம் ஒரு மாற்றம். (01/08/2018) The change of day

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (01/08/2018)

குறள் 994:
நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு.

விளக்கம் 1:
நீதியையும் நன்மையையும் விரும்பிப் பிறர்க்குப் பயன்பட வாழும் பெரியோரின் நல்லப் பண்பை உலகத்தார் போற்றிக் கொண்டாடுவர்.

விளக்கம் 2:

நீதியையும் அறத்தையும் விரும்பிப் பிறர்க்கும் பயன்படுபவரின் பண்பினை உலகத்தவர் சிறப்பித்துப் பேசுவர்.

English Couplet 994:
Of men of fruitful life, who kindly benefits dispense,
The world unites to praise the 'noble excellence'.

Couplet Explanation:
The world applauds the character of those whose usefulness results from their equity and charity.

மனிதன் தனது தூய்மையையும் பண்பையும்  நோக்கி பயணிக்கும் போது மேடு பள்ளம்  எல்லாம் கடக்க நேரிடும்.

அந்த நேரத்தில் மனதை திட சங்கல்பமாக எண்ணத்தை ஒரே நேர்கோட்டில் மனதை வைத்து அதிலேயே  பயணிக்க வேண்டும்.

மனம் ஒடுங்கும் இடமெல்லாம் சீவகாந்தம் குவியும். ஆகவே அது நேர்மறை எண்ணங்களில் மனதை செலுத்த வழிவிடும்.

மனதை ஒருமுகப்படுத்தும்.

திசைமாற விடாது. முயற்சியை திருவினையாக்கும்.

மனம் போன போக்கெல்லாம் மனதை போக விட்டால் மனம் புலன்வயப்பட்ட நிலையிலேயே வைக்கத் தயார் நிலையில் எப்பொழுதுமே இருக்கும்.. அறிவு வழியில் சிந்திக்க ஒருவர் தயாராக மாட்டார்.

மனம் அறிவை நாட தியானமும்,  திசை மாறாமல் நேர்பாதையில் பயணிக்க தற்சோதனையும் மிக மிக அவசியம் இக்காலக்கட்டத்தில்.

பதின்ம பருவ வயது மற்றும் அனைத்து வயது  ஆண்/பெண்களுக்கு இந்த மனவளக்கலை யோகக் கல்வி மனதை கட்டுப்பாட்டிற்குள் வைக்கும் ஒரு பொக்கிஷமாகத் திகழும் என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை.

இக்காலத்தில் நடக்கும் நிகழ்வுகள் அனைவரும் அறிந்ததே.. அதற்கு எல்லாம் தீர்வு தான் மனவளக்கலை யோகா..

அன்புடன் ஜெ.கே

"May the whole world enjoy happiness, Good health, long life, enough wealth, prosperity, wisdom and peace."

Be blessed!!

* A change of the day * (01/08/2018)

994:
Thank you very much
World of character

Description 1:
The world will appreciate the good nature of the elderly people who want to use justice and goodness.

Description 2:

The world will highlight the character of the one who desires justice and righteousness.

English Couplet 994:
Of men of fruitful life, who kindly benefits dispense,
The world unites to praise the 'noble excellence'.

Couplet Explanation:
The world applauds the character of those whose usefulness results from their equity and charity.

When the man travels towards its purity and character, the upstairs will be overcome.

At that time, the mind must be able to travel in the same line of mind as well as in the same direction.

Everywhere where the mind melts, it will accumulate. Therefore, it will give way to positive thoughts.

Concentrate the mind.

Do not render direction. Makes the effort.

When the mind is gone, the mind will always be ready to keep it in mind.

The meditation is the most essential of the day to meditate on the knowledge, and it is very necessary to travel straight in the direction of the straight path.

There is no substantiation in the fact that the yoga education of the teenager and the male / female of all ages is a treasure that controls the mind.

All of the events happening in this period are known to all .. the solution is the mental health yoga ..

With JK