Friday, 3 August 2018

தினம் ஒரு மாற்றம். (01/08/2018) The change of day

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (01/08/2018)

குறள் 994:
நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு.

விளக்கம் 1:
நீதியையும் நன்மையையும் விரும்பிப் பிறர்க்குப் பயன்பட வாழும் பெரியோரின் நல்லப் பண்பை உலகத்தார் போற்றிக் கொண்டாடுவர்.

விளக்கம் 2:

நீதியையும் அறத்தையும் விரும்பிப் பிறர்க்கும் பயன்படுபவரின் பண்பினை உலகத்தவர் சிறப்பித்துப் பேசுவர்.

English Couplet 994:
Of men of fruitful life, who kindly benefits dispense,
The world unites to praise the 'noble excellence'.

Couplet Explanation:
The world applauds the character of those whose usefulness results from their equity and charity.

மனிதன் தனது தூய்மையையும் பண்பையும்  நோக்கி பயணிக்கும் போது மேடு பள்ளம்  எல்லாம் கடக்க நேரிடும்.

அந்த நேரத்தில் மனதை திட சங்கல்பமாக எண்ணத்தை ஒரே நேர்கோட்டில் மனதை வைத்து அதிலேயே  பயணிக்க வேண்டும்.

மனம் ஒடுங்கும் இடமெல்லாம் சீவகாந்தம் குவியும். ஆகவே அது நேர்மறை எண்ணங்களில் மனதை செலுத்த வழிவிடும்.

மனதை ஒருமுகப்படுத்தும்.

திசைமாற விடாது. முயற்சியை திருவினையாக்கும்.

மனம் போன போக்கெல்லாம் மனதை போக விட்டால் மனம் புலன்வயப்பட்ட நிலையிலேயே வைக்கத் தயார் நிலையில் எப்பொழுதுமே இருக்கும்.. அறிவு வழியில் சிந்திக்க ஒருவர் தயாராக மாட்டார்.

மனம் அறிவை நாட தியானமும்,  திசை மாறாமல் நேர்பாதையில் பயணிக்க தற்சோதனையும் மிக மிக அவசியம் இக்காலக்கட்டத்தில்.

பதின்ம பருவ வயது மற்றும் அனைத்து வயது  ஆண்/பெண்களுக்கு இந்த மனவளக்கலை யோகக் கல்வி மனதை கட்டுப்பாட்டிற்குள் வைக்கும் ஒரு பொக்கிஷமாகத் திகழும் என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை.

இக்காலத்தில் நடக்கும் நிகழ்வுகள் அனைவரும் அறிந்ததே.. அதற்கு எல்லாம் தீர்வு தான் மனவளக்கலை யோகா..

அன்புடன் ஜெ.கே

"May the whole world enjoy happiness, Good health, long life, enough wealth, prosperity, wisdom and peace."

Be blessed!!

* A change of the day * (01/08/2018)

994:
Thank you very much
World of character

Description 1:
The world will appreciate the good nature of the elderly people who want to use justice and goodness.

Description 2:

The world will highlight the character of the one who desires justice and righteousness.

English Couplet 994:
Of men of fruitful life, who kindly benefits dispense,
The world unites to praise the 'noble excellence'.

Couplet Explanation:
The world applauds the character of those whose usefulness results from their equity and charity.

When the man travels towards its purity and character, the upstairs will be overcome.

At that time, the mind must be able to travel in the same line of mind as well as in the same direction.

Everywhere where the mind melts, it will accumulate. Therefore, it will give way to positive thoughts.

Concentrate the mind.

Do not render direction. Makes the effort.

When the mind is gone, the mind will always be ready to keep it in mind.

The meditation is the most essential of the day to meditate on the knowledge, and it is very necessary to travel straight in the direction of the straight path.

There is no substantiation in the fact that the yoga education of the teenager and the male / female of all ages is a treasure that controls the mind.

All of the events happening in this period are known to all .. the solution is the mental health yoga ..

With JK

No comments: