Sunday, 5 August 2018

தினம் ஒரு மாற்றம் (05/08/2018)The Change of day

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (05/08/2018)

குறள் 782: 

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் 
பின்னீர பேதையார் நட்பு.

மு.வரதராசனார் உரை: 
அறிவுடையவரின் நட்பு பிறை நிறைந்து வருதல் போன்ற தன்மையுடையது, அறிவில்லாதவரின் நட்பு முழுமதி தேய்ந்து பின் செல்லுதல் போன்ற தன்மையுடையன.

சாலமன் பாப்பையா உரை: 

பிறை, நாளும் வளர்வதுபோல, அறிவுடையார் நட்பு வளரும்; முழு நிலவு தேய்வது போலப் பேதைகளின் நட்பு தேயும்.

தனக்குக் கிடைக்கும் நட்பினை தேர்ந்தெடுப்பது கூட ஒருவரது கருமையம் தான்.

ஒருவரின் உயர்நட்பு கிடைப்பதற்குக் கூட ஒரு புண்ணியம் வேண்டும்.

நட்பு என்பது நண்பர்கள் வழியில் தான் கிடைப்பது  என்பது இல்லை. பெற்றோரிடம், உறவினர்களிடம் கூட கிடைப்பது உண்டு.

ஒருவர் எதை நினைக்கிறாரோ அதுவாகவே ஆகிறார் என்பது ஒருவரின் எண்ணம் பொறுத்தது.

எந்த எண்ணம் எதைத் தேடுகிறதோ அதுவே கிடைக்கப் பெறுவார்கள்.

நல்ல சிந்தனை, பிறர் நலனில் அக்கறை, மக்கள் நலனில் அக்கறை, இது போன்று தன்னலம் கருதாது பிறர் நலனில் அக்கறை உள்ளோர்கள் தொண்டு புரிவதற்கு ஏற்ற சூழ்நிலையை தானே உருவாக்கி செயல்படுவர்.

வாய்ப்பு என்பது ஒருவர் தானாகவும் தேடி வரும். சுயமாகவும் ஏற்படுத்திக் கொள்ளவும் முடியும். ஆனால் ஒரு நல்வாய்ப்பை சிலருக்கு சூழ்நிலையே.. ஏற்படுத்தித் தரும்.  அதை பயன்படுத்திக் கொள்வது ஒருவரின் அறிவுடைமை ஆகும். நல்வாய்ப்பு என்பது நல்ல அறிவுடையவர்களின் நட்பு மேன்மைக்கு வித்திடும்.

கல்வியறிவு எவ்வளவு அறிவை பெருக்குகிறதோ அவ்வளவு பண்பு பெருக வேண்டும். பிறருடன் நட்பு செய்யும் போது நல்ல நட்பா.. என்று ஆராய்ந்து   நட்புறவு கொள்வது நல்ல பாதைக்கு வழி வகுக்கும். 

நேர்மறை சிந்தனை உடையவர்களின் நட்பு முன்னேற்றத்தைக் கொடுக்கும். நட்பை ஆராய்ந்து தேர்ந்தெடுக்க வேண்டும்.

அன்புடன் ஜெ.கே

''May the whole world enjoy Prosperity, happiness, long life, enough wealth and peace.''

Be Blessed.

The change of day (05/08/2018)

Friendship

782 :

The water is full of the honeycomb 
.
Description 1:
The intellectual's friendship is like the filling of the crescent, and the friendship of the ignorant is like the fullness of the mind.

Description 2:
As the crescent, as the day progresses, the intellectual friendship develops; The friendship of the beats like the whole moon wander.

English Couplet 782:
Friendship with men fulfilled of good waxes like the crescent moon; 
Friendship with men of foolish mood, Like the full orb, waneth soon.

Couplet Explanation:
The friendship of the waxes like the new moon; (but) that of fools wanes like the full moon.

Choosing the nature of his own is also the one's dream.

There is a great way to get someone's high quality.

Friendship is not just about getting in the way of friends. Parents are also available to relatives.

One's opinion depends on what one thinks.

Any idea what they're looking for will get it.

Good thinking, concern for the well-being of the people, the interest in the people's welfare, the self-consciousness of the minds of others and the creation of the environment in which people are concerned.

The possibility is that someone will be looking for it automatically. Can be self and self. But for some people the situation is a situation. It is the intelligence of one's use. Good fortune can result in the goodwill of good intellectuals.

As literacy increases knowledge, the quality must be multiplied. When you are friendly with others, good friendships can be a good way to explore friendships.

The friendship of the positive minded people will improve. You need to explore and select friendship.

With JK

No comments: