Thursday, 9 August 2018

தினம் ஒரு மாற்றம் (09/08/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (09/08/2018)

குறள் 75: 

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து 
இன்புற்றார் எய்தும் சிறப்பு.

கலைஞர் மு.கருணாநிதி உரை: 

உலகில் இன்புற்று வாழ்கின்றவர்க்கு வாய்க்கும் சிறப்பு, அவர் அன்புள்ளம் கொண்டவராக விளங்குவதன் பயனே என்று கூறலாம்.

மு.வரதராசனார் உரை:

உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்கையின் பயன் என்று கூறுவர்.

ஒருவர் தன்னைப்பற்றி ஆராய்ந்து தன்னகத்தே இருக்கும் குறைகளை ஆய்ந்து தெளியும் போது மட்டுமே வினைப்பயன் தீரும்.

பிறரைப் பற்றி ஆராய்வதனால் ஒருபோதும் ஒருவருக்கு மேன்மை கிட்டாது.

எவ்வளவோ பெரியவர்கள், சித்தர்கள், மகான்கள், எவ்வளவோ விஷயங்களை எடுத்து உரைத்திருக்கிறார்கள்.

அதில் எல்லாம் *நான் யார்?* என்கிற தத்துவமும், இறையுணர்வு மற்றும் அறநெறி எனும் சிந்தனையும் அதிகம் மேலோங்கி இருக்கும். அதற்குக் காரணம் ஒருவர் தன்னை அறியவும், உணரவும், முற்பட்டால் மனிதனின் மனதில் அன்பு சுரக்கும். அந்த அன்பு மட்டுமே பிறரிடத்திலும் காண்பிக்கும் போது அது தனக்கும் பிறருக்கும் மட்டும் அல்ல.. அது அனைத்து இடங்களிலும் ஊடுருவி பிரதிபலித்துக் கொண்டே இருக்கும்.
அன்பு மேலோங்கும். அறநெறியில் வாழ்க்கை கடைபிடிப்பர்.

அன்பானது தன்பால் அனைத்தையும் ஈர்க்கும்.

அன்பால் கல்லான மனதைக் கூட கரைக்க முடியும். அன்புக்கு அவ்வளவு வல்லமை உண்டு.

மன்னிக்கும் மனம் அன்புள்ள இடத்திலே மட்டும் இருக்கும்.

அன்பும் அறனும் உலகில் அனைவரிடமும் இயல்பில் உள்ளது.. அந்த அலைநீளத்திற்கு  சென்றால் அனைத்தும் நிலையாக இருப்பதை உணர முடியும்.

அன்புடன் ஜெ.கே

No comments: