Wednesday, 8 August 2018

தினம் ஒரு மாற்றம் (08/08/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

தினம் ஒரு மாற்றம் (08/08/2018)

குறள் 102:
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

விளக்கம் 1:
உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்.

விளக்கம் 2:
நமக்கு நெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி, அளவில் சிறியது என்றாலும், உதவிய நேரத்தை எண்ண அது இந்தப் பூமியை விட மிகப் பெரியதாகும்.

English Couplet 102:
A timely benefit, -though thing of little worth,
The gift itself, -in excellence transcends the earth

Couplet Explanation:
A favour conferred in the time of need, though it be small (in itself), is (in value) much larger than the world

ஒருவர்  நல்ல நிலையில் இருக்கும் போது போற்றுவதும், தாழ்ந்த நிலையில் இருக்கும்  போது தூற்றுவதும், ஒருவரின் நற்பண்புகளை மேம்படுத்தும் பண்பு என்று கூற இயலாது.

தற்காலத்தில்  ஊடகங்கள், இணையம், வாயிலாக  நல்ல/ மற்றும் பிற விஷயங்களையும் வெளியிடப் பயன்படுத்துகின்றனர். அது தனக்கும்,  பிறருக்கு நலம் விளைவிக்குமா என்று சிந்தித்து வெளியிட்டால் நல்லது.

*நன்றியுணர்வு* மனிதருக்கு மிகவும் முக்கியம்.

வாழ்நாளில் உண்ணும் உணவு, உடுத்தும் உடை, இருக்கும் வீடு, உறவுகள் என்று அனைத்தையும் இறைவன் பாரபட்சம் பார்க்காமல் கொடுக்கிறார். அதை பேணிக் காப்பது அறிவுடைமை. கிடைத்த அனைத்திற்கும் நன்றி கூறுவது சிறப்பு.

உணவு (பஞ்ச பூதங்கள், அரிசி, பருப்பு, காய்கனி முதலிய அனைத்துமே)  உற்பத்தி செய்பவரிலிருந்து சமைத்துக் கொடுக்கும் நபர் வரை ( அது மனைவியோ, தாயோ, அல்லது வேறு நபரோ) நன்றியை எத்தனை பேர் கூறுகின்றனர்?

நன்றியுணர்வு ...
பெற்று,   வளர்த்து ஆளாக்கி பெற்றோர்கள் ஒழுங்காக அவர்களது கடமையை  செய்கிறார்கள், பாதுகாப்பையும் அளிக்கிறார்கள்.

பிள்ளைகள் வளர்ந்தபின்  வயதான காலத்தில் பெற்றோரை காப்பாற்ற, நன்றியுணர்வை எத்தனை பேர் செலுத்துகின்றனர்?

அனைத்து உயிரும் இறைவனால் வந்தது. அதை நன்றி செலுத்தி தனது கடமையை நிறைவேற்ற வேண்டும்.

எந்த உதவி யாரிடம் பெற்றாலும் அதற்கு நன்றிக் கடன் படுகிறவர் உரிய நேரம் வரும் போது அந்த நன்றியை காட்டத் தவறக் கூடாது.

அதே போல் மன்னிப்பு ஒருவர் மனம் திருந்திக் கேட்டால் அவருக்கு மறு வாய்ப்பளிக்கவும் மறுக்கக் கூடாது.

மன்னிப்பும் மறப்பதும் மட்டுமே உறவுகளை தக்க வைக்கும். ஒற்றுமையை காக்க முடியும்.

அன்புடன் ஜெ.கே

No comments: