Friday, 3 August 2018

தினம் ஒரு மாற்றம் (02/08/2018) A change of day

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (02/08/2018)

கணினி, மடிக்கணினி அலைபேசி ஆகிய  பயன்பாட்டை குறைப்பதும், அறவே விடுவதும் குழந்தைகளுக்கு நன்மை தரும்.

குழந்தைகள் விளையாட அலைபேசியில் Games பதிவிறக்கம் செய்கிறீர்களா?? எவ்வளவு நேரம் அனுமதிக்கிறீர்கள்?
வெளியே ஓடி ஆடி விளையாட  காற்றோட்டமான இடத்தில்  அனுமதிப்பது நல்லது.

ஒருவருக்கு  உதவி செய்யவும்,,  ஒரு பொருளை உருவாக்கவும் அவர்கள் அறிவு, படைப்புத்திறன் கொண்டவையாக, புதிது புதிதாக ஒன்றை உருவாக்க அவர்களது அறிவை ஆக்கவழியில்  செயல்படுத்தத் தூண்ட வேண்டும்.

எந்த பொருளையும், உயிரையும் மதிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டியது பெற்றோரின்/ ஆசிரியரின் கடமையாகும்.

பெற்றோர்கள்/ ஆசிரியர்கள் பேசுவது, செய்வது, நடந்து கொள்வது அனைத்தையும் குழந்தைகள் கண்காணிக்கிறது.. பெற்றோருடைய குணம்,  பண்பு, பிறருக்கு பெற்றோர் அளிக்கும் மரியாதை..... இவைகள்....  குழந்தைகளின் குணநலன்களிலும் பண்புநலன்களிலும் காண முடியும்.

குழந்தைகளுக்கு ஆரம்ப காலத்திலேயே Junk foods  க்கு பதில் ஆரோக்கிய உணவை வீட்டிலேயே பழக்கி விட்டால் வெளியே எதையுமே நாடமாட்டார்கள்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் வளர்ப்பில் அதிக கவனம் செலுத்தி அவர்கள் உடல்நலன், மனநலனில் அக்கறை கொண்டு சாத்வீக உணவை பழக்கப்படுத்துதல் நல்லது.  கீரை, முளைப்பயிர், பச்சைக் காய்கறி மற்றும் கனிகளில் சத்து முழுமையாகக் கிடைக்கும்.

அது அவர்களின்  எதிர்காலத்திற்கு உடல்நலன், மன அமைதியை கொடுக்கக் கூடியதாகும். சிந்திக்கும் திறனைத் தூண்டும்.

வேலைக்குப் போய் சம்பாதிக்கும் பெற்றோர்கள் சற்றே வீட்டில்  குழந்தைகளிடம் அக்கறை கொண்டு அவர்களுக்கென்று நேரம் ஒதுக்கினால் அவர்கள் மனது மகிழ்ச்சியான சூழலில் வளரும்.

*எதிர்கால சமுதாயம் அமைதிப் பூங்காவாக நறுமணம் வீச, பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோரிடத்திலும், ஆசிரியர்களிடத்திலும், பொறுப்பும், கடமையும் உள்ளது.*

அன்புடன் ஜெ.கே

"May the whole world enjoy happiness, Good health, long life, enough wealth, prosperity, wisdom and peace."

* A change of day * (02/08/2018)

Reducing or totally avoiding the usage of mobiles, laptops and computer are more beneficial for children .

Do Kids Play a Play Downloading Games ?? How much time do you allow.
It's good to run outside and ventilate it to play.

To help someone, create an object. They need to create knowledge, creativity, innovate to create their own in order to create something new.

It is the obligation of the parent / teacher to teach any thing and life to respect.

Parents / teachers talk, do and do things that are overseen by children. Parents' character, character, parental respect for others ... These can be seen in the character and qualities of children.

Junk foods are replaced by health food at home.

Parents are more focused on their children's care and they are well aware of their health and mental health and practice good food. Spinach, sprout, green vegetables and fruits are available in full.

It can give health and peace of mind to their future. To stimulate thinking ability.

If the parents earning a job and get some time to care for their children at home, their hearts will grow in a happy environment.

Future community is a peacekeeping park and has responsibilities and responsibilities in the Parents and Teachers who raise their children.

With JK

No comments: