வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!
*தினம் ஒரு மாற்றம்* (07/08/2018)
"எந்த ஒன்று அறிந்திடில் இறைவன் முதல் உயிர் வரை எல்லாவற்றையும் உணர்த்துமோ அதுவே காந்தமாம்."
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
இனிமையான உறவுகளை தேர்ந்தெடுப்பது ஒருவரின் கருமையப் புண்ணிய பலனால் மட்டுமே.
ஒரு சிலரை பார்த்தால் அவரிடம் பேச வேண்டும் என்று தோன்றும். ஒரு சிலரிடம் பேச வேண்டுமா என்று தோன்றும். இதற்கும் ஈர்ப்பு விதியே காரணம். காந்த ஆற்றல் ஒத்த பண்புடையவர்களை ஈர்க்கும்.
சூரியகாந்திப் பூ சூரியன் வரும் திசைக்கேற்றவாறு ஈர்க்கப்பட்டுத் திரும்பும்.
உறவுகள் வேண்டாம், எதுவும் வேண்டாம் என்று நினைப்பவர்களிடம், *வேண்டாம்* என்கிற அலை அவர்களிடமும், பிறரிடமும், பிரபஞ்சத்திலும் மோதி மோதி பிரதிபலிக்க ஆரம்பித்து விடும்.
விலக்கும் ஆற்றல் விலகிச் செல்பவர்களை ஈர்த்துக் கொள்ளும். காந்தம் ஈர்க்கும் ஆற்றலும், விலக்கும் ஆற்றலும் கொண்டது. ஆனால் ஒத்த எண்ணம் உடையவர்களை ஈர்க்கும்.
ஒரு எண்ணம் தான் என்று நினைத்தால் அது எவ்வளவு வேலை செய்கிறது என்பது புரிந்து கொள்ள வேண்டும்.
காந்த அலையியக்கம் புரிந்தால் அனைவரும் நேர்மறைகளை மட்டுமே ஈர்க்க ஆரம்பிப்பார்கள். ஒற்றுமையே வலிமை என்பதை புரிந்து கொள்வார்கள்.
நேர்மறை எண்ணங்களை ஈர்த்து வாழ்க்கையில் மேன்மை அடைந்து மனதில் நற்சிந்தனைகளை வலம் வர விட்டால் பிரபஞ்சத்திலும் அந்த நேர்மறை எண்ணங்கள் மோதி பிரதிபலிக்கும் வாய்ப்பு அதிகம்..
ஒரே எண்ணம், ஒற்றுமையான எண்ணம், ஒன்று சேர சேர வான்காந்தத்திலிருந்து அனைவருக்கும் ஒரு பிணைப்பை ஏற்படுத்தும். அதுவே தீர்க்கமாகும். உலக அமைதியும் விரைவில் வந்துவிடும்.
அன்புடன் ஜெ.கே
No comments:
Post a Comment