Sunday, 2 September 2018

தினம் ஒரு மாற்றம் 01/09/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (01/09/2018)

குறள் 266:.
தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.

Tamil meaning
அடக்கமும், அன்பு நெறியும், துன்பங்களைத் தாங்கும் பொறுமையும் வாய்ந்த தவம் மேற்கொண்டவர்கள் மட்டுமே தமது கடமையைச் செய்பவர்கள்; அதற்கு மாறானவர்கள், ஆசையால் அலைக்கழிக்கப்பட்டு வீணான செயல்களில் ஈ.டுபடுபவர்கள்.

Translation:.
Commentary:.
Those discharge their duty who perform austerities; all others accomplish their own destruction, through the entanglement of the desire (of riches and sensual pleasure).

எது தேவை?  எது தேவையில்லை? எங்கே யாரிடம் எப்படிப் பேச வேண்டும்? யாரிடம் அளவுமுறை காக்க வேண்டும்? என்கிற அடிப்படை அறிவு அனைவருக்குமே உள்ளது.

இதை துல்லியமாகக் கணிப்பதற்கும், சரியான முறையில், அதாவது அளவுமுறையோடு நடந்து கொள்ளவும், பேசவும்,  நல்ல பதிவுகளை குழுவில் போடுவதற்கும் கூட அந்த அடிப்படை அறிவு அவசியமாகிறது.

அதற்குத் தான் கவனம் தேவை.  மனதை ஒருமுகப்படுத்துதல் தேவை. (Focussing mind )

ஒரு செயல் செய்யும் போதும், பேசும் போதும் யார் மனதிற்கும் இதமாக இருக்க வேண்டும். அதே சமயம் தர்ம சங்கடம் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும். மனதை இதமாக நடத்துபவனே மனிதன் என்பார்கள் அருட்தந்தை அவர்கள். அது தன்னுடைய மனதையும் பிறருடைய மனதையும் இதமாக அனைவரும் நடத்த முடிகிறதா??
மனவளக்கலைக்கு வந்த பின்னர் தான் அந்த பயிற்சியில் தன்னை மேம்படுத்துகிறோம்.

இதையே ஒழுக்கம் எனலாம்.  எண்ணம் சொல் செயலால் ஒருவருக்கு நன்மை/ இன்பம் தரும் செயல்கள்.. எல்லாம் புண்ணியச் செயலாகும்.

தவம் செய்பவர்களால் மனதில் தோன்றும் எண்ணங்களை ஆராய்ந்து விழிப்புநிலையில் அந்த எண்ணங்களை சீர் செய்ய இயலும். பிறரின் மனதை இதமாக நடத்தவும் கையாளவும் முடியும்.

யாரிடம் பேச வேண்டும், யாரிடம் மௌனம் காக்க வேண்டும் என்ற புரிதல் வரும்.

வேண்டியதை ஈர்க்கும் வல்லமையும் ஓங்கும். வேண்டாததை தவிர்க்கும் சுயசிந்தனையும் ஓங்கும்.

அனைவரையும் எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்றும், தன்னை எந்த இடத்தில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் புலப்படும்.

அன்புடன் ஜே.கே

No comments: