Sunday, 9 September 2018

தினம் ஒரு மாற்றம் (09/09/2018)

[09/09, 5:34 PM] Jayalakshmi Kumaresan: வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

தினம் ஒரு மாற்றம் ( 09/09/2018)

மனிதரின் வாழ்க்கையே பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்டது தான்.

வரும் போதும், போகும் போதும், எதையுமே கொண்டு போகப் போவதில்லை என்பது அனைவரும் அறிந்ததே..

இறப்பில் நல்ல பேர் மட்டுமே நிலைக்கும். எத்தனையோ பேரை வாழ வைச்சார்.. நல்ல மனிதர் என்ற பெயர்...  நல்லது பண்ணினார் என்ற பெயர்...மட்டும் தான் அவருக்குப் பின் நிற்கும்.

சுயநலத்திற்கு வாழ்ந்து, தான், தன் குடும்பம் மட்டுமே என்று வாழ்வதில் யாருக்கு என்ன பயன், பொருள் இருக்கிறது??

தாத்தா பாட்டி,  பூட்டன் பூட்டி பெயர் கூறக் கூட, சொல்லவும், கேட்கவும்,   தெரிந்து கொள்ளவும் கூடத்  தெரியாத சமூகத்தில் நாம் அனைவரும் வாழவில்லை. 

பெரியவர்கள் அனைவரும் தனக்கென்று வாழ்ந்ததினால் தெரிந்து கொள்ளத் தோன்றவில்லை.

பெரியவர்கள் பெருந்தன்மையான சூழலை உருவாக்க நல்லதைப் பேசியும், உதவி செய்யும் மனப்பான்மையை, சிறுவர்களிடையே வளர்க்க வேண்டும்.

பகிர்ந்து அளித்து உண்ணுதல், பொருட்களையும்... இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கும், இயலாதவர்களுக்கும், மனமுவந்து கொடுக்க முன்வருதலை பழக்கப்படுத்த வேண்டும். அப்போது தான் சுயநலமாக சிந்திக்காமல் பொதுநலம் பற்றி யோசிக்க முன் வருவர்.

துன்பப்படுபவர்களைக் கண்டு மனம் இரக்கம் கொள்ள பழக்க வேண்டும். தானே உதவ முன் வர வேண்டும்.

இது பொது இடங்களில் மட்டுமல்ல. வீட்டில் பெற்றோர், தாத்தா பாட்டி, உடன்பிறப்புகள், மற்றும் உறவினர்கள், யாராக இருந்தாலும் பாரபட்சம் பாராமல் நேசிப்பது, உதவுவது... தனது கடமை என்ற மனப்பான்மையை அவர்களிடம் விதைத்தால் தான் நாளைய சமுதாயம் ஒற்றுமை, விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை, தியாகம் என்பவை பற்றி புரிய வரும்.

தான் பெரியவனாகும் போது அந்த பலன் அரணாக காக்கும் என்பது.. தான் பெரியவனாகும் போது புரிய வரும்.

அந்தப் புரிதலை சிறு வயதிலேயே குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டியது யார் பொறுப்பு?? பெற்றோர், வீட்டில் உள்ள உறவுகள் மற்றும் ஆசிரியர் பொறுப்பு. சமுதாயத்தின் பொறுப்பும் கூட.

*மூத்தோர் சொல் கேள்..என்பது ஔவையின் வாக்கு.*

*வாழ்வதில் பொருள் வேண்டும்.*

வாழ்வதற்குப் பொருள், பணம் மட்டுமே வேண்டும் என்று மட்டும் நினைக்க அனுமதித்தல் கூடாது.

அனைத்தையும் மதித்தும், நேசித்தும் வாழ்தல் இறைவனுக்கே தொண்டு செய்வது போன்றது.

இன்றைய விதை தான் நாளைய விருட்சம். நாளைய விருட்சம் தான் அனைவருக்கும் காய்கனி மட்டும் அல்ல நிழலும் கொடுக்கும் பூமியும் வாழும் என்பதை வேரூன்றி பதிய வைக்க வேண்டும்.

அன்புடன் ஜே.கே

No comments: