வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!
*தினம் ஒரு மாற்றம்* (04/09/2018)
ஒருவரின் வாழ்க்கை சீராக செல்ல வேண்டுமானால் அதற்கு அந்த குடும்பத்தில் உள்ள நபர்களில் சம்பாதிக்கும் திறமையுள்ளவர்கள், பிறருடன் அன்புடனும், குடும்பத்தை கட்டுக்கோப்புடனும் கொண்டு செல்ல வேண்டும். அவரை மதித்து, பிறரும் அனுசரித்தும், விட்டுக் கொடுத்தும், ஒத்தும் உதவியுமாகவும், உறுதுணையாகவும், இருக்க வேண்டும்.
சூழ்நிலை எப்பொழுதும் தனது கட்டுப்பாட்டில்....., கட்டுப்பாட்டில் என்றால் குடும்ப நபர்கள் தேவையுள்ள செலவுகளுக்கு இடம் கொடுத்து, அவரின் அனைத்து நற்செயல்களுக்கும் உறுதுணையுடன் இருந்து முன்னேற்றப் பாதையில் குடும்பம் செல்ல ஒத்துழைப்பை நல்க வேண்டும். குடும்ப நபர்கள் வரைமுறையை கைமீறிப் போக அனுமதிக்கக் கூடாது. இது எப்படியென்றால் பட்டம் பறக்க விடுபவன் நூலை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போல்.
எப்பொழுதும் அன்புடனும் அக்கறையுடனும் குடும்ப நலனில் அக்கறை கொண்டு வீட்டில் நடக்கும் விஷயங்களில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டு தீர்வுகளை சிந்தனை செய்ய கலந்தாலோசித்தல், பல சிக்கல்களுக்கு தீர்வு காண வழி வகுக்கும்.
ஒரு பக்கம் தாயின் அன்பும், அக்கறையும், மறுபக்கம் மனைவியின் அன்பும், அக்கறையும் .., இதில் இருவரிடையே பாரபட்சம் பாராமல், இருவருக்கும் இடையில் நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு குடும்பத்தலைவராகிய கணவனுடைய பங்கு தான் மிகப் பொறுமை மிக்கது, பொறுப்பு மிக்கது. பெண்ணாக இருந்தாலும் அவ்வாறு தான். நிர்வகிப்பவரும் பிறரும் பொறுப்பு மிக்கவராக இருத்தல் அவசியம்.
ஒருவரைப் பற்றி யார் என்ன சொன்னாலும், தனது தாயையும் மனைவியையும் அனைத்து இடங்களிலும் அன்போடும், பண்போடும், மதிப்போடும், மரியாதையோடும் நடத்த வேண்டும்.
அனைவரும் எதிர்பார்ப்பது இனிமையான சொற்களைத் தாங்கிய அன்பு ஒன்றை தான்.
அதில் பாரபட்சம் எதற்கு?
அன்பை பெறுவதற்கு மட்டுமே அனைவரும் தயாராக உள்ளோம். அதிகாரத்தை அல்ல. பின்பு அதை கொடுப்பதற்கு ஏன் பாரபட்சம்?
சுயமாக சிந்தித்து இனிமையாக வாழ்க்கை நடத்தும் திறமை அனைவரிடமுமே உள்ளது.
அன்புடன் ஜெ.கே
No comments:
Post a Comment