Wednesday, 5 September 2018

தினம் ஒரு மாற்றம் (05/09/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (05/09/2018)

Dr. சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக இன்று கொண்டாடப்படுகிறது.

குறள் 391:

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

விளக்கம் 1:
கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.

விளக்கம் 2:
கற்கத் தகும் நூல்களைப் பிழை இல்லாமல் கற்க; கற்ற பிறகு கற்ற கல்விக்கு ஏற்ப நல்ல வழிகளில் வாழ்க

English Couplet 391:
So learn that you may full and faultless learning gain,
Then in obedience meet to lessons learnt remain.

Couplet Explanation:

Let a man learn thoroughly whatever he may learn, and let his conduct be worthy of his learning.

ஆசிரியராக இருக்கும் ஒருவர் எப்படி இருக்க வேண்டும்?

கடமை உணர்வோடும் பொறுப்புணர்வோடும் வருங்கால  நல்ல சமுதாயத்தை உருவாக்கும் உணர்வோடும் தான் கற்ற கல்வியை  மாணவர்களுக்கு
தரமோடும், (Quality)
புரிதலோடும்,  அர்ப்பணிப்புணர்வோடும் கல்வி புகட்ட வேண்டும்..

மாணவர்களிடையே நல்லிணக்கம் மற்றும் நட்புணர்வு  பேண வேண்டும்.

நல்ல படிக்கும் மாணவரை ஊக்கப்படுத்தியும், கல்வியில் போதிய கவனம் செலுத்த முடியாமல் குடும்ப சூழல் காரணமாக இருக்கும் ஒரு சில  மாணவர்களை மேலே உயர்த்தி சமூகத்தின் முன் தலைநிமிரச் செய்ய வேண்டும்.
அதை சவாலாக ஏற்று சாதிப்பதே நல்லாசிரியரின் கடமை.

அவரது கல்வியை முழுமையாகக் கற்றுத் தேர்ந்து அதில் மேலும் தன்னை, தனது அறிவை, மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

மாணவர்களுக்கு கற்றுத் தரும் போது  எண்ணம், சொல் செயல்களினால் பிழைகளற்று தான் கூறும் விளக்கத்தினை புரிந்து கொள்ளும்படி தரத்துடன் கூடிய உதாரணங்களோடு தெளிவாக எடுத்துக்கூற வேண்டும்.

அந்த மாணவர்களின் புரிதலை புரிந்து கொண்டு மேலும் விளக்கம் தேவைப்பட்டால் விளக்கத் தயங்கக் கூடாது. தெளிவான புரிதலை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

தனது உயர்ந்த பண்பினால் மாணவர்களை ஈர்க்க வேண்டும்.

நல்வழிப்பாதையை அமைத்துக் கொடுக்கும் ஒழுக்கமுள்ள ஆசிரியராக மட்டுமே ஒருவர் இருக்க வேண்டும்.

ஆசிரியர் என்பவர் மேன்மை பொருந்திய எடுத்துக்காட்டாக வாழ வேண்டும்.

அன்புடன் ஜே.கே

No comments: