Monday, 17 September 2018

அருட்தந்தை கேள்வி பதில்

கேள்வி:

"சுவாமிஜி, நமக்குத் துன்பம் செய்தவரை நாம் மனதார மன்னித்து விடுகிறோம். அப்பொழுது அவர் செய்த செயலுக்கு விளைவு தோன்றக் கூடாது அல்லவா?"
.

மகரிஷியின் பதில்:

"மற்றவரின் செயலால் துன்பம் அடைந்தவர் பெருந்தன்மையோடு மன்னித்துவிட்டாலும், துன்பம் செய்தவரின் உள்ளுணர்வாக இருக்கும் பேரறிவானது விட்டுவிடாது. அவர் செய்த செயலைப் பதிவு செய்து இருப்பு வைத்து விளைவைக் காலத்தால் அளித்துவிடும்.

தவறு செய்து கொண்டே இருப்பவன் மனிதன். அதைத் திருத்தம் செய்து கொண்டே இருப்பவன் இறைவன். அந்தத் திருத்தம் தான் விளைவாக வந்து துன்பமாகத் தெரிகிறது."
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி..


No comments: