வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!
*தினம் ஒரு மாற்றம்* (06/09/2018)
மதிக்கத் தெரிந்தவர்கள் முன் பணிவோடும், மதிக்கத் தெரியாதவர்களை புறக்கணிப்பதை விட, அவர்களை *வாழ்க வளமுடன்* வாழ்த்து கூறியும், மன்னித்தும், விடுவதே நல்லது.
செயலுக்குரிய விளைவில் இருந்து யாருமே தப்பவே முடியாது.. ஆனால் அதை அந்த பாவத்திலிருந்து குறைத்துக் கொள்ள முடியும். நற்செயல்கள் செய்வதன் மூலமாக.
*மதியாதார் தலை வாசல் மிதியாதே* என்பது உலகநீதி.
*ஊருடன் கூடி வாழ்* என்று ஆத்திச்சூடி கூறுகிறது.
எப்பொழுதும் பெருந்தன்மையுடையவர்கள் மன்னிக்கத் தெரிந்தவர்கள்.
தவறு செய்தவர்களை மன்னித்தும் மறந்தும் விடுவார்கள்.
குற்றம், குறை பேசுபவர்களால் மட்டுமே யாரையும், எதையும், பொறுத்துக் கொள்ள முடிவதில்லை.
என்ன காரணம் என்றால் அவர்கள் எதிர்மறை எண்ணங்களை ஈர்ப்பதினால்.
நேர்மறை எண்ணங்களை ஈர்க்க ஆரம்பித்து விட்டால் அன்பும், மனவிரிவும், தானாகவே மனதில் விட்டுக் கொடுத்தலும், சகிப்புத்தன்மையும், தியாகமும், மனதில் குடிகொள்ள ஆரம்பிக்கும்..
*அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் எதிரியையும் மனந்திருந்தி நல்வாழ்வு வாழ கருணையோடு வாழ்த்துவோம் என்கிறார்கள்..* ஏன்???
ஒவ்வொருவரின் மனதில் இருக்கும் அழுக்குகளின் வடிவம் தான் இந்த சமுதாயத்தின் சீர்குலைவுக்கான காரணம்.
அந்த சமுதாயப் பாவப்பதிவுகளை போக்குவதற்கும் புண்ணியம் தரும் நல்ல எண்ணங்களை, சிந்தனைக்குள், மனதிற்குள், அனுமதித்துக் கொண்டே இருந்தோம் என்றால் தரமற்ற, குறையுள்ள, குற்றமுள்ள எண்ணங்கள் காணாமல் போகும். மேலும் நற்செயல்களை அதிகம் செய்யச் செய்ய மனம் தூய்மையாகும். அதற்கு *மனதில் தரமுள்ள, ஒழுக்கமுள்ள எண்ணங்களை ஒருவர் அனுமதிக்க வேண்டும்.*
இதை புரிந்து கொண்டால் *'நான்'* என்பது போய் *'நாம்'* என்ற எண்ணம் மலரும்.
பெருந்தன்மையை மனதில் அனுமதிப்போம்.
அனைவரும் இறைவனின் குழந்தைகள். இறைவன் முன்னால் அனைவரும் சமமே.. இதில் வேற்றுமை எதற்கு? பகையுணர்வு எதற்கு?
அனைத்தும், அனைவரும் அணுக்களின் வடிவம் தானே!
சுயமாய் சிந்தித்தேத் தெளிவோம்.
அன்புடன் ஜே.கே
No comments:
Post a Comment