Saturday, 8 September 2018

தினம் ஒரு மாற்றம். (08/09/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

தினம் ஒரு மாற்றம் (08/09/2018)

குறள் 652:
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.

விளக்கம் 1:
புகழையும் அறத்தையும் தாராத (தூய்மை அற்ற) செயல்களை எக்காலத்திலும் ஒருவன் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும்.

விளக்கம் 2:
இம்மைக்குப் புகழையும் மறுமைக்கு நன்மையையும் தராத செயல்களை எந்தக் காலத்திலும் விட்டுவிட வேண்டும்.

English Couplet 652:

From action evermore thyself restrain
Of glory and of good that yields no gain.

Couplet Explanation:
Ministers should at all times avoid acts which, in addition to fame, yield no benefit (for the futur

கடமையில் சிறப்பவர்கள் எப்பொழுதும் நன்றியுணர்வுடன் இருப்பார்கள்.

எந்த ஒரு செயலுக்குமான மூலத்தை உணர்வார்கள்.

யாரினால் இதைப் பெற்றோம் என்பதை உணர்ந்து நன்றி கூறுவர்.

தனது குறைகளையும் திருத்திக் கொண்டும்,  தவறு செய்பவர்களை மன்னித்தும், அவர்கள் விரைவில் தன்னை உணர வேண்டும் என்றும்,  அவர்களுடைய  குறைகளை அகற்ற வேண்டும் என்றும் நினைத்து மனதில் பிறரை வாழ்த்துவார்கள்.

அவர்களை நினைந்து மனம் இரக்கம் கொள்வர்.

சமுதாயத்தின் தாக்கமும், ஒருவருடைய கர்மாவும் இணைந்தே அவர்களை புலன்வயப்பட்ட செயல்கள் செய்ய தூண்டுகின்றன. சிறிது விழிப்புணர்வுடன் இருந்தால் அதை தகர்த்தெறிய முடியும்.

அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம் ஒருவர் கண்களை மறைக்க அனுமதிக்கக் கூடாது. அறிவை அறிவதே சிறப்பு.

அறிவு அறிவுறுத்தலை கேட்க வேண்டும்.
தன் போக்கில் செல்ல மனதிற்கு இடம் கொடுத்தால் அது நன்மை பயக்காது.

யார் எதைச் சொன்னாலும் அதில் தனக்கு நலம் தரும் விஷயம் என்ன என்பதை மட்டுமே எடுத்துக் கொண்டு அல்லதை விடுத்தால் தீயவைகள் மனதிற்குள் நுழையாது. விளைவறிந்த விழிப்புநிலை இங்கு தான் தேவை.

மனிதனின் கடமை என்ன? பிறப்பின் நோக்கம் என்ன?  தன்னை அறிந்து கடமையில் முழு ஈடுபாட்டுடன், நன்றியுணர்வுடன், அன்பில் அனைவருடனும் ஒத்தும் உதவியுமாக வாழ்வது.
அதில் மட்டுமே கவனம் வேண்டும்.

*கடமையை செய், பலனை எதிர்பாராதே.*

அன்புடன் ஜெ.கே

No comments: