வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!
*தினம் ஒரு மாற்றம்* (02/08/2018)
சில நேரம் சில சூழ்நிலை ஒருவருக்கு சாதகமாக இருக்கும். ஒரு சில நேரம் சாதகமாக இருக்காது.
இதற்கு என்ன காரணம்??
ஒன்று அது அவருக்குத் தேவைப்படுவதாக இருக்காது. அவருக்கு பதிலாக வாய்ப்பு வேறொருவருக்கு அளிக்கப்படலாம்.
மற்றொன்று கடவுள் அனைவருக்கும் பாதுகாப்பு கொடுப்பதற்காகவே சில சூழ்நிலைகளை தடை செய்கிறார். சிலவற்றை அளிக்கிறார்.
எது கிடைக்கிறதோ அதற்கு நன்றி கூறியும், எது கிடைக்கப்படவில்லையோ அதற்கும் நன்றி கூறியும் சூழ்நிலையை அப்படியே ஏற்றுக் கொண்டு விட்டால் மனம் நேர்நிலை உணர்வில் வைத்துக் கொள்ள இயலும்.
மேலும் இதை விட சிறப்பான ஒரு விஷயம் ஒருவருக்கு நடப்பதற்குக் காரணமாகக் கூட இருக்கலாம்.
எது எப்படியோ, சில பொருட்கள் கிடைக்கவில்லையா?? அது அவருக்கு வேண்டாம் என்று பொருள். அது அவருடைய மனநலத்துக்கோ, உடல் நலத்துக்கோ ஏற்புடையதாக இருக்காது. ஆகவே இறைவன் அதை தடுக்கிறார்...
சில இயல்பாக நடக்கும் விஷயங்களில் ஒருவர் மனதை போட்டுக் குடைந்து இது கிடைக்கவில்லையே என்று ஏங்கவும் தேவையில்லை.. இது தான் கிடைத்ததா என்று வருத்தப்படவும் தேவையில்லை.
*எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது..*
*எது நடக்கின்றதோ அதுவும் நன்றாகவே நடக்கின்றது..*
*எது நடக்கப்போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் ..*
*என்கிறது கீதை...*
ஆகவே ஒருவருக்கு அனைத்து வகையிலும் இறைவன் நன்மையே செய்வார் என்று நம்பிக்கையுடன் ஒருவர் செயல்படலாம். அனைத்தும் நன்மைக்கே...
அன்புடன் ஜெ.கே
No comments:
Post a Comment