வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!
*தினம் ஒரு மாற்றம்* (03/09/2018)
நேரம், காலம் மதித்து செயல்படுவோர்களுக்கு காலம் அவர்களை மதிக்கிறது.
நேரத்தை முழுமையாக பயனுள்ள முறையில் பயன்படுத்தி மகிழ முடியும்.
ஒருவருக்கு ஒரு முழு நாள் கையில் உள்ளது.
தனக்கென்று ஒரு மணி நேரம், காயகல்பப் பயிற்சி 5 நிமிடம், உடற்பயிற்சி 1/2 மணி நேரம், தியானம் 20 நிமிடம், இரவில் இன்று செய்த நல்ல செயல்கள் என்ன, யார் யாருக்கெல்லாம் நன்றி கூறினோம். யார் மனதை வேதனைப் பட வைத்தோம்? அதில் நம் பங்கு என்ன? ஏன் கோபப் பட்டோம்? எங்கே தவறு நேர்ந்தது? தவறை திருத்திக் கொள்ள என்ன முயற்சிகள் எடுக்க வேண்டும். என்று தன்னைத் தானே சுய பரிசீலனை செய்து கொள்ள ஒரு 15 நிமிடம் ஒதுக்கி நன்றி கூற வேண்டியவர்களுக்கு மனதால் நன்றி கூறிக் கொண்டு, மன்னிப்புக் கேட்க வேண்டியவர்களிடம் மன்னிப்புகேட்டுக் கொண்டும், மன்னிக்க வேண்டியவர்களை மன்னித்தும் குடும்ப உறவுகளுடன் ஒரு வேளை ஒன்றாக அமர்ந்து உணவு உண்டு, ஒரு மணி நேரம் அவர்களுடன் கலந்து பேசி குடும்பத்தை மேம்படுத்த என்ன செய்யலாம் என்று முடிவுகளை எடுத்துக் கொண்டு, அன்றாடக் கடமைகளை முழு மனதுடன் நிறைவேற்றினால் வாழ்க்கையே சொர்க்கம் தான்.
பிறருக்கென்று (கடமை நிமித்தமாக) குடும்பத்தில் செலவிடும் நேரம், பணத்தை கையாளும் விதம் சிக்கனம், சிந்தனை, சீர்திருத்தம் கொண்டு நேரத்தை குடும்பத்தினருடன் விடுமுறை நாட்கள் மகிழ்ச்சிப் பயணம் குறைந்த பட்சம் ஆண்டுக்கு ஒரு முறை அல்லது ஆண்டில் இருமுறை செலவிடலாம்.
இல்லாதவர்களுக்கும் இயலாதவர்களின் தேவை பூர்த்தி செய்யலாம்.
எண்ணத்தினால் தூய்மையை கடைபிடித்துக் கொண்டு முடிந்த நன்மைகளை செய்யலாம்.
பெற்றோருக்கு ஆற்ற வேண்டிய கடமைகளுக்கும் முன்னுரிமை கொடுத்து நிறைவேற்ற, அவர்களின் ஆசிகளைப் பெற, நேரம் காலம் பார்க்க அவசியம் இல்லை.
சொர்க்கம் நரகம் என்பது அவரவர் செய்யும் செயலிலே விளைவாக இருப்பது.
முதல் கடமை ஒருவர் தன்னையும், தன்னை சார்ந்தவர்களின் உடல்நலம் மனநலம் உயிர்வளம் காப்பது பேணுவது.
எந்தக் கடமையாக இருந்தாலும் அதை முழுமனதுடன் அன்புடன் ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும்.
இதுவே கர்மயோகம்.
அன்புடன் ஜே.கே
No comments:
Post a Comment