Thursday, 20 September 2018

தினம் ஒரு மாற்றம் (10/09/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (10/09/2018)

குறள் 279: 

கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன 
வினைபடு பாலால் கொளல்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: 

நேராகத் தோன்றும் அம்பு, கொலைச் செயல் புரியும். வளைந்து தோன்றும் யாழ், இசை, இன்பம் பயக்கும். அது போலவே மக்களின் பண்புகளையும் அவர்களது செயலால் மட்டுமே உணர்ந்து கொள்ள வேண்டும்.

மு.வரதராசனார் உரை:

நேராகத் தோன்றினும் அம்பு கொடியது; வளைவுடன் தோன்றினாலும் யாழின் கொம்பு நன்மையானது. மக்களின் பண்புகளையும் செயல்வகையால் உணர்ந்துகொள்ள வேண்டும்.

Translation: 
Cruel is the arrow straight, the crooked lute is sweet, 
Judge by their deeds the many forms of men you meet.

Explanation: 
As, in its use, the arrow is crooked, and the curved lute is straight, so by their deeds, (and not by their appearance) let (the uprightness or crookedness of) men be estimated.

ஒருவர் பிறரிடம் நிறைவான மனதையும், எண்ணங்களையும், பார்க்க ஆரம்பித்துவிட்டால், அவர்களிடம் நல்லவைகளை மட்டுமே பார்க்கத் தோன்றும். ஆனால் அதே சமயம் அவர் நல்லவரா?? மற்றவரா?? என்பதிலும் விழிப்புணர்வும் அவசியம் வேண்டும்.

ஆனால் ஒருவர்,  பிறர் குறைகளை பற்றி மட்டுமே சிந்திக்கத்  தொடங்கினால், ஒருவர் மெய்யுணர்வு பெறவும், தன்னிலை உணரவும், நீண்ட காலம் ஆகிவிடும். இன்னும் பலபிறவிகளை எடுக்க நேரிடும்.

தன்னிலை உணரத்தான் பிறவி எடுத்திருக்கிறோம். அதன் மூலம்,  தனது கடமைகளிலும், பொது நலத்தொண்டிலும் ஈடுபட்டு, தூய்மையும், மேன்மையும், அடைய முற்பட வேண்டும்.

வந்த வேலையை பார்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்தினால் *அல்லது* என்பது தானே சென்றுவிடும்.

எது தனக்கு வேண்டும் என்பதில் தான் முழு கவனம் இருக்க வேண்டும்.

பிறரின் கவனம் தன் பக்கம் இழுக்க வேண்டும் என்பதில் நாட்டம் இருப்பதை விடுத்து *தன்னிடம் 'தானே'* நாட்டம் கொண்டால் தனக்கு எப்பொழுதும் லாபமே.. நட்டம் இல்லை.

கவனத்தை ஒருவர்...... பிறரால் அல்லது 'தன்னைத்தானே' சிதறடிக்க அனுமதித்தால் வாழ்க்கையின் பாதையில் இருளே மிஞ்சும்.

கருவிலிருந்து வெளிச்சத்திற்கு வருவதற்காகவே பிறந்தோம்.
வெளிச்சத்தை பலருடைய எண்ணங்களில் படர விட வேண்டுமே தவிர இருளில் மூழ்கக் கூடாது.

மனிதர்களின் குணமறிந்து, பண்பு அறிந்து, அறவழியில்   நடப்பதே சிறப்பு.

மனதை செம்மையாக வைக்கப்பழகினால் மனம் விரிந்து அகண்டாகாரமாகும்.

அன்பு பேரன்பாகும்.

அன்புடன் ஜே.கே

No comments: