https://m.facebook.com/story.php?story_fbid=597060121152524&id=100025456231980
உலக சமாதானம்
முதற் பாகம்
பாடல் : 16 – அறிவு, ஆற்றல்களைப் பயன்படுத்துதல்
வெறிபோன்று பாய்ந்து ஓடும் நதிவெள்ளத்தின்
வேகத்தை, அணைக்கட்டி பயன் கொள்ளல்போல்,
பொறி புலன்களில் சிறந்த மனிதர் ஆற்றல்,
புத்தி நுட்பம், கூட்டுறவால் ஒன்று சேர்த்து,
அறிவோடு சுகாதாரம், பொருளாதாரம்,
ஆட்சி முறையால் உயர்த்தி, உலகோர் எல்லாம்,
நெறியாக அன்பு, இன்பம், அமைதியோடு
நில உலகில் வாழாவைக்க ஒத்துழைப்பீர் .
பயங்கரமான வேகம் கொண்டு பாயும் நதியின் வெள்ளத்தை, அணைகள் மூலம் தடுத்து ஒரு தக்க இடத்தில் தேக்கி, அந்தத் தண்ணீரை நமக்கு வேண்டிய இடத்திலும், நமக்கு வேண்டிய அளவிலும் உபயோகித்தும் பயன் பெறுகிறோம். புலன்கள், உடற் கருவிகள், அறிவின் ஆற்றல் என்ற இவற்றில் சிறந்த மனிதர்களின் உடல் பலமும் அறிவின் நுட்பமும் இக்காலத்தில் கவலையில்லாது ஓடிப் பாயும் வெள்ளம்போல் பல்வேறு துறைகளில் அழிவைச் செய்து விடுகிறது. அவைகள் அவ்வாறு செய்யாது, வாழ்க்கைத் துறைகளாகிய மனோதத்துவம், சுகாதாரம், பொருளாதாரம், அரசியல், விஞ்ஞானம் என்ற ஐந்து துறைகளிலும் நன்றாகப் பயன்படும்படிச் செய்து, அப்பயங்களின் உதவியால் உலக மக்கள் அனைவரையும் நீதி, அன்பு, அமைதி, இன்பம் என்னும் குறிக்கோளுடன் வாழச் செய்ய முயற்சி செய்வோம்.
*மனோதத்துவம் என்றால் என்ன?*
உடலில், அரூபமாய் நல்லது-கெட்டது, இன்பம்-துன்பம், உயர்வு-தாழ்வு, விருப்பு-வெறுப்பு என்பன உணர்ச்சிகளாய் மனத்திலே எழுகின்றன. அறிவின் பண்பாட்டினால் இவையனைத்தும் கடந்த நடுவு-நிலைமையும், அந்த மனத்திலேதான் ஏற்படுகின்றது.
கடந்தகால, எதிர்கால, சம்பவங்களை யூகித்துப் பார்த்து அறிவின் இயல்பு, இருப்பிடம், இயக்கம் என்பனவற்றை நன்றாய் உணர்ந்து, அறிவின் மூலமும் முடிவும், அதன் இயல்பினையும் செவ்வனே உணர்ந்து, வளர்த்துப் பயன்படுத்தும் கலைதான் மனோதத்துவம் ஆகும்.
*சுகாதாரம்*
உடலின் உற்பத்தி, இயக்கம், வளர்ச்சி, தளர்ச்சி என்ற இவைகளிலும், கருவமைப்பு, ஆகாரம், செயல்கள், எண்ணங்கள் என்ற இவைகளினாலும், வெட்ப தட்ப தாக்குதல், சந்தர்ப்ப மோதல் என்ற இவைகளாலும், நம் உடலிலுள்ள ரசாயனங்கள் மாற்றமடைகின்றன. இவைகளால் நம் உடல் ரசாயனங்கள் அளவிலும் செறிவிலும் குறைந்து விடுகின்றன. அல்லது அதிகரித்து விடுகின்றன. அவைகளால் ரத்த ஓட்டச் தன்மையும், அதனால் ஏற்படும் உடலியக்க அறிவியக்க நிலைகளும் மாற்றமடைந்து விடுகின்றன. இத்தகைய மாற்றங்களைச் செயற்கை முறைகளினால் தகுந்தபடி சமநிலைக்குக் கொண்டுவரும் முயற்சியே மருத்துவமாகும். அளவுக்கு மிஞ்சி ஏற்பட்டிருக்கும் ரசாயன அதிகரிப்பையும், இரத்த ஓட்டத்தையும், இரத்த ஓட்ட தளர்ச்சியையும்-மருந்து, உணவு, பட்டினி, நீராடல், ஓய்வு, உடற்பயிற்சி முதலியவற்றால் சமநிலைக்குக் கொண்டு வரும் முயற்சியே சுகாதார முறை எனப்படும்.
*பொருளாதாரம்*
மனிதர் வாழ்வதற்கு அவசியமான உணவு, இடம், உடை முதலியவைகளையும், இயற்கையில் ஏற்படும் துன்பங்களை எதிர்க்கும் பல வசதிகளையும், உற்பத்தி செய்தல், சேமித்தல், பாதுகாத்தல், நிரவுதல், அனுபவித்தல் என்பன எல்லாம் சேர்ந்த ஒன்றே பொருளாதாரம் எனப்படும்.
*அரசியல்*,
பொதுவாக எல்லோருக்கும் வாழ்க்கையின் இன்பத்தைப் பாதுகாக்கவும், அதிகரிக்கவும், துன்பத்தைக் குறைக்கவும்-போக்கவும் திட்டமிட்டுச் செயலாற்றவும் தனி மனிதனால் ஆகாத காரியத்தைப் பலரின் சக்தி கொண்டு நிறைவேற்றவும், பலமுடையான் பலமில்லானைத் துன்புறுத்தாதபடி பாதுகாக்கவும், ஏற்படுத்திக் கொண்ட கூட்டு வாழ்க்கை ஒப்பந்தமே-கட்டுப்பாடு விதிமுறைகளே அரசியல்.
*விஞ்ஞானம்*
விண் என்றால் அணு, ஞானம் என்றால் அறிவு. விஞ்ஞானம் விண் + ஞானம் அணுவின் தத்துவம் அறிந்து கொண்ட அறிவின் தெளிவே விஞ்ஞானம். அணுவையும், அணுவின் தத்துவத்தையும் அறிந்தால், அணுவில் உள்ள எழுச்சி கவர்ச்சி எனும் சக்தியை அறியலாம். அணுக்கள் ஒன்றுடன் ஒன்று, பலவுடன் பல கூடுவதால் உருவங்களும் அவற்றில் காந்த சக்தியும் ஏற்படுகின்றது. அக்காந்த சக்தியே ஒலியாய், ஒளியாய், வெட்பதட்ப மாறுபாடுகளாய், குவிதல், பரவுதல், கவர்தல், விலகுதல், கூடுதல், பிரிதல் என்னும் பல்வேறு இயக்கங்களாகி, அதன் விளைவாக ஒவ்வொரு பொருளிலும் ரசாயனம் தோன்றி கூடி – குறைந்து – மாறி உருவங்களாய், உலகங்களாய், பல கோள்களாய், பொருட்களாய், ஜீவராசிகளாய் உருவாகி இருக்கும் இயல்பறிந்துகொள்வதே விஞ்ஞானம் எனப்படும்.
உலக சமாதானப் பாடல் – 17 தொடரும் ....

No comments:
Post a Comment