Tuesday, 31 March 2020

உலக சமாதானம் முதற் பாகம் பாடல் : 21 ரசாயன அமைப்பும் மாற்றமும்



https://m.facebook.com/story.php?story_fbid=611808849677651&id=100025456231980

உலக சமாதானம்
முதற் பாகம் 
பாடல் : 21 ரசாயன அமைப்பும் மாற்றமும் 

    கரு அமைப்பு, உணவுவகை எண்ணம், செய்கை   
        ககனத்தில் கோள்கள் நிலை, சந்தர்ப்பத்தால் 
    வரும் இயற்கை நிகழ்ச்சிகளின் மோதல்-எல்லாம் 
        வாழும் உயிற்கடிக்குப் பல ரசாயனங்கள் 
    தரும், மாற்றும், தரமோக்க இன்ப துன்பம்,
        தகுந்த அளவாம். இதிலோர் சக்திமீறி 
    பெருகி ரத்தச் சுழல் தடுக்க நோயாய் மாறி 
        பின்னும் அதிகரித்துவிட மரணம் ஆகும்.

    கருவமைப்பாலும், ஆகாரங்களாலும், எண்ணங்களாலும், செயல்களாலும், ஆகாயத்தில் அண்டங்களின்   
சஞ்சாரங்களாலும், சந்தர்ப்ப சந்திப்புகளாகிய இயற்கையின் வேக விளைவாலும் , உடல் காந்த சக்தியின் அலைகள் கூடிக் குறைவதால் உயிரினங்களின் உடலில் இருக்கும் பலவிதமான ரசாயானங்களின்  அளவுகள் அதிகரிக்கின்றன அல்லது குறைந்து விடுகின்றன. 

    அந்த மாற்றத்துக்கு ஏற்றபடி ரத்த ஓட்டத்தின் அளவும் தரமும் உடலில் மாறுபடுகின்றன. இம்மாற்றங்களால் அறிவுக்கும் உடலுக்கும் இன்பமோ துன்பமோ விளைகிறது .
 மாறுபட்டால், ரத்த ஓட்டத்தில் சிறுதடையோ குழப்பமோ ஏற்பட, அது நோயாகிறது. அத்தடையே அதிகமாகிவிட்டால் இருதயம் நின்றுவிடும்; இரத்தக்குழல் வெடித்துவிடும்; இவை போல்வன பல நிகழும். அவைகளால் மரணம் நேர்கின்றது. 


உலக சமாதானப் பாடல் – 22         தொடரும் ....

No comments: