https://www.facebook.com/100025456231980/posts/599972727527930/
உலக சமாதானம்
முதற் பாகம்
பாடல் : 17 – குறுகிய நோக்கம் மாற வேண்டும்
ஊன்உருவில் சிறப்பான மனித வர்க்கம்
உயிர் வாழ வசதிஎலாம் மிகுந்திருந்தும்,
நான்-எனது, என்றறிவில் குறுகி நின்று,
நல்நினைவில் பொன், பொருளைப் பெரிதாய்ப்பற்றி,
ஏன் நமக்கு இது என்றும் ஆராயாமல் ,
இன்று அணுக் குண்டுவரை பெருக்கிவிட்டான்.
ஆன்மநிலை யறிந்து அதற்கு ஏற்ப வாழ,
அனைத்துலக ஆட்சி கண்டு அச்சம் தீர்ப்போம்.
உலகில் இயற்கையின் பரிணாம வேகத்தால் தோன்றியுள்ள கோடானுகோடி உடலுருவங்களிலும், அறிவிலும், அங்க அமைப்பிலும், திறமையிலும் சிறந்த மனிதர்கள், நலமுடன் வாழ்வதற்கு இயற்கையாகவும், செயற்கையாகவும் பலவிதமான வசதிகள் இருக்கும்போது பொன்னையும், பொருளையும் மாத்திரம் பெரிதாக நினைவில் கொண்டு ‘நான்-எனது’ என்ற குறுகிய நோக்கத்தாலும், மனிதர் உண்மையாகப் பண்போடு வாழ, எது தேவை? எது தேவையில்லை என்னும் ஆராய்ச்சியில்லாமையினாலும், பல அழிவுக் கருவிகளையும் அணுக்குண்டையும் கூட, கண்டுபிடித்து வாழ்வில் அச்சத்தைப் பெருக்கிக்கொண்டார்கள்.
உருவத்தால் பல வேறுபாடுகள் இருந்த போதும், உயிர், அறிவு, இயற்கை, இன்பதுன்பம் என்னும் நிலையில் அனைவரும் ஒன்றே என்று அறிந்து கொள்ளத் திறமை யூட்டும் ஆன்மீக ஞானத்தை தன்னறிவு விளக்கத்தை-மனிதர்கள் பெற வேண்டும்.
அதற்கேற்றபடி ஒருவருக்கொருவர் சாதகமான முறையில் எண்ணம், சொல், செயல்களைப் பிரயோகித்து, ஒற்றுமையாய் வாழத் தகுந்த ஒரே உலக ஆட்சி ஏற்படுத்தி, எதிர்நோக்கி நிற்கும் அபாயங்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
உலக சமாதானப் பாடல் – 18 தொடரும் ....

No comments:
Post a Comment