https://www.facebook.com/100025456231980/posts/603986280459908/
உலக சமாதானம்
முதற் பாகம்
பாடல் : 19 – கருவமைப்பால் மாத்திரம் வரும் மாறுதல்கள்
ஆராய்வோம் கருவமைப்பைப்பற்றி, அப்போ
ஆண்பெண்கள் அறிவு, செல்வம், வயது, ஆரோக்கியம்,
நீராய நாதவிந்து அளவு, சக்தி,
நிலையாது சுற்றி ஒன்றை ஒன்று ஈர்க்கும்,
பாராதி அண்டங்கள் சூழல் சஞ்சாரப்
படிபஞ்ச பூதங்கள் பரிணமித்து,
சீராக அடையும் ரசாயன மாற்றங்கள்,
சேர்ந்த முறை கருவமைப்பின் தன்மையாகும்.
கருவமைப்பு என்றால் என்ன? ஆராய்வோம். நாதமும் விந்தும் கூடும்போது, அவற்றின் மூல உடல்கள் ஆகிய ஆண் பெண் இருவர்களின் வயது, சரீர சுகம், அறிவின் உயர்வு, செல்வத்தால்-பொருளாதாரத்தால்-பெற்றிருக்கும் வாழ்க்கை வசதிகள், அன்று கூடிய நாதவிந்தின் சக்தி-அளவு, எழுச்சி, கவர்ச்சி, ஒலி , ஒளி, வெட்பதட்பங்களைத் தாக்கி, பிரதிபலித்துக் கொண்டிருக்கும் பூமி, சூரியன் முதலிய கோள்களின் ஆகாயத்தில் சஞ்சரித்துக் கொண்டே ஒன்றை ஒன்று நெருங்கியும், விலகியும், ஈர்த்தும் சுழன்று வரும்போது, ஏற்படும் ஒலி, ஒளி வெப்பம், தட்பம், கவர்ச்சி முதலியவற்றால் அணு முதல் அண்டங்கள் பெறும் பரிணாம மாறுபாடுகள், ரசாயன மாற்றங்கள் என்ற இவைகளில் அப்போது அமையும் அமைப்புக்கு ஏற்றபடி கருவமைப்பு ஆகும்.
உலக சமாதானப் பாடல் – 20 தொடரும் ....

No comments:
Post a Comment