Thursday, 20 September 2018

The change of day (10/09/2018)

''May the whole world enjoy Prosperity, happiness, long life, enough wealth and peace.''

Be Blessed.

*A change of the day * (10/09/2018)

Communion / Imposture

Stanza 279

The lute is bent, the arrow straight: judge men
Not by their looks by acts.

Description 1:
Straight up arrow The horn's horn is good when it comes to the curve. People should also recognize the character of the people.

Description 2:
Array is blurred by the shape of the shape. The neck is bent but the action is no longer the act. So let the human beings weakened by the act.

English Couplet 279:
Cruel is the arrow straight, the crooked lute is sweet, 
Judge by their deeds the many forms of men you meet.

Couplet Explanation:
As it is in their use, the curved lute is straight, so by their deeds, let's be estimated.

If you start to see a person's thoughts and thoughts, you will see only good ones. But at the same time he is good? or oTher ?? And need to be aware.

But if someone starts to think about the faults, it can be a long time for someone to get a sense of consciousness and feel. More and more will be taken.

We have been born to realize our own. Thereby, it is necessary to pursue its duties and public good, to cleanse and to achieve success.

If you focus only on viewing the job * or * will go away.

It should be full attention to what should be done.

If you are interested in pulling people's attention on his side, he will always be lucky for him.

If you let someone distract or 'distort', the attention will be dark in the path of life.

We were born to come from light to light.
Let the light shine in the minds of many, not in darkness.

We have to live in a right way by knowing the nature and characteristics of people.

If we practice to keep our mind clear, our mind will expand to universe.
Love is love.

With Jk (Jayalakshmi Kumaresan)

தினம் ஒரு மாற்றம் (10/09/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (10/09/2018)

குறள் 279: 

கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன 
வினைபடு பாலால் கொளல்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: 

நேராகத் தோன்றும் அம்பு, கொலைச் செயல் புரியும். வளைந்து தோன்றும் யாழ், இசை, இன்பம் பயக்கும். அது போலவே மக்களின் பண்புகளையும் அவர்களது செயலால் மட்டுமே உணர்ந்து கொள்ள வேண்டும்.

மு.வரதராசனார் உரை:

நேராகத் தோன்றினும் அம்பு கொடியது; வளைவுடன் தோன்றினாலும் யாழின் கொம்பு நன்மையானது. மக்களின் பண்புகளையும் செயல்வகையால் உணர்ந்துகொள்ள வேண்டும்.

Translation: 
Cruel is the arrow straight, the crooked lute is sweet, 
Judge by their deeds the many forms of men you meet.

Explanation: 
As, in its use, the arrow is crooked, and the curved lute is straight, so by their deeds, (and not by their appearance) let (the uprightness or crookedness of) men be estimated.

ஒருவர் பிறரிடம் நிறைவான மனதையும், எண்ணங்களையும், பார்க்க ஆரம்பித்துவிட்டால், அவர்களிடம் நல்லவைகளை மட்டுமே பார்க்கத் தோன்றும். ஆனால் அதே சமயம் அவர் நல்லவரா?? மற்றவரா?? என்பதிலும் விழிப்புணர்வும் அவசியம் வேண்டும்.

ஆனால் ஒருவர்,  பிறர் குறைகளை பற்றி மட்டுமே சிந்திக்கத்  தொடங்கினால், ஒருவர் மெய்யுணர்வு பெறவும், தன்னிலை உணரவும், நீண்ட காலம் ஆகிவிடும். இன்னும் பலபிறவிகளை எடுக்க நேரிடும்.

தன்னிலை உணரத்தான் பிறவி எடுத்திருக்கிறோம். அதன் மூலம்,  தனது கடமைகளிலும், பொது நலத்தொண்டிலும் ஈடுபட்டு, தூய்மையும், மேன்மையும், அடைய முற்பட வேண்டும்.

வந்த வேலையை பார்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்தினால் *அல்லது* என்பது தானே சென்றுவிடும்.

எது தனக்கு வேண்டும் என்பதில் தான் முழு கவனம் இருக்க வேண்டும்.

பிறரின் கவனம் தன் பக்கம் இழுக்க வேண்டும் என்பதில் நாட்டம் இருப்பதை விடுத்து *தன்னிடம் 'தானே'* நாட்டம் கொண்டால் தனக்கு எப்பொழுதும் லாபமே.. நட்டம் இல்லை.

கவனத்தை ஒருவர்...... பிறரால் அல்லது 'தன்னைத்தானே' சிதறடிக்க அனுமதித்தால் வாழ்க்கையின் பாதையில் இருளே மிஞ்சும்.

கருவிலிருந்து வெளிச்சத்திற்கு வருவதற்காகவே பிறந்தோம்.
வெளிச்சத்தை பலருடைய எண்ணங்களில் படர விட வேண்டுமே தவிர இருளில் மூழ்கக் கூடாது.

மனிதர்களின் குணமறிந்து, பண்பு அறிந்து, அறவழியில்   நடப்பதே சிறப்பு.

மனதை செம்மையாக வைக்கப்பழகினால் மனம் விரிந்து அகண்டாகாரமாகும்.

அன்பு பேரன்பாகும்.

அன்புடன் ஜே.கே

Monday, 17 September 2018

அருட்தந்தை கேள்வி பதில்

கேள்வி:

"சுவாமிஜி, நமக்குத் துன்பம் செய்தவரை நாம் மனதார மன்னித்து விடுகிறோம். அப்பொழுது அவர் செய்த செயலுக்கு விளைவு தோன்றக் கூடாது அல்லவா?"
.

மகரிஷியின் பதில்:

"மற்றவரின் செயலால் துன்பம் அடைந்தவர் பெருந்தன்மையோடு மன்னித்துவிட்டாலும், துன்பம் செய்தவரின் உள்ளுணர்வாக இருக்கும் பேரறிவானது விட்டுவிடாது. அவர் செய்த செயலைப் பதிவு செய்து இருப்பு வைத்து விளைவைக் காலத்தால் அளித்துவிடும்.

தவறு செய்து கொண்டே இருப்பவன் மனிதன். அதைத் திருத்தம் செய்து கொண்டே இருப்பவன் இறைவன். அந்தத் திருத்தம் தான் விளைவாக வந்து துன்பமாகத் தெரிகிறது."
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி..


Manavalakalai yoga an intro in English


Sunday, 16 September 2018

எண்ணம் ஆராய்தல் - அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் சிந்தனை உரை

இது தெரிந்தால் வாழ்வில் வெற்றி அடையலாம்

எண்ணம் ஆராய்தல் - அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் சிந்தனை உரை

Saturday, 15 September 2018

Shri Vethathiri Maharishi Biography Part 2

*அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாழ்க்கை வரலாறு - பகுதி 2*⬆

Shri Vethathiri Maharishi Biography Part 1

*அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாழ்க்கை வரலாறு - பகுதி 1*⬆

Tuesday, 11 September 2018

மனவளக்கலை எளியமுறை உடற்பயிற்சி - உடல் தளர்த்துதல்


மனவளக்கலை எளியமுறை உடற்பயிற்சி - அக்குபிரஷர் 14 பாயின்ட்ஸ்


மனவளக்கலை எளியமுறை உடற்பயிற்சி - உடல் தேய்த்தல்


மனவளக்கலை எளியமுறை உடற்பயிற்சி - மகராசனம் நிலை 2


மனவளக்கலை எளியமுறை உடற்பயிற்சி - மகராசனம் நிலை 1


மனவளக்கலை எளியமுறை உடற்பயிற்சி - கபாலபதி


மனவளக்கலை எளியமுறை உடற்பயிற்சி - கண்பயிற்சி


மனவளக்கலை எளியமுறை உடற்பயிற்சி - தசைநார் மூச்சுப்பயிற்சி


மனவளக்கலை எளியமுறை உடற்பயிற்சி - தசைநார் மூச்சுப்பிற்சி


மனவளக்கலை எளியமுறை உடற்பயிற்சி - கால்பயிற்சி


மனவளக்கலை எளியமுறை உடற்பயிற்சி - கைப்பயிற்சி


Sunday, 9 September 2018

The change of a day (09/09/2018)

''May the whole world enjoy Prosperity, happiness, long life, enough wealth and peace.''

Be Blessed.

*A change of the day * (09/09/2018)

Man's life is between birth and death.

Everybody knows that when you go, there is nothing going to carry.

Only good people will die in death. Many people live in the name of the good man ... the name of the good man ... only after him will stand.

What is the meaning of who lives in self-reliance, the only thing that lives with his family?

Grandpa,  grandmother, forefathers  did not live in a society where people did not even know, say, listen and know.

All the adults did not seem to know for themselves.

Adults should develop a great atmosphere and develop a good attitude and help in developing children.

Sharing, eating things, and those who do not exist and those who can not afford to volunteer. Only then will they come forward to think about public health without thinking selfishly.

To feel sorry for those who are suffering, you need to be kind to compassion. You need to come back to help yourself.

This is not just in public places. In the house of parents, grandparents, siblings, and relatives, whoever loves to be discouraged, help them to discourage their duty, then tomorrow's society will come to know about solidarity, compromise, tolerance, sacrifice.

When he is older he will save that fruit.

Who is responsible for teaching the children at a young age? Parenting, relationships at home and teacher responsibility. Even the responsibility of society.

Elderly listen to the word.

* Life should be meaningful. *

Let's not only think about the means to live, only to make money.

Living and respecting everything is like doing service to God.

Today's seed is the tree of the day. The tree of the day is to be rooted in the not only the grain, but also the shade and Saving Earth.

With Jk

தினம் ஒரு மாற்றம் (09/09/2018)

[09/09, 5:34 PM] Jayalakshmi Kumaresan: வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

தினம் ஒரு மாற்றம் ( 09/09/2018)

மனிதரின் வாழ்க்கையே பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்டது தான்.

வரும் போதும், போகும் போதும், எதையுமே கொண்டு போகப் போவதில்லை என்பது அனைவரும் அறிந்ததே..

இறப்பில் நல்ல பேர் மட்டுமே நிலைக்கும். எத்தனையோ பேரை வாழ வைச்சார்.. நல்ல மனிதர் என்ற பெயர்...  நல்லது பண்ணினார் என்ற பெயர்...மட்டும் தான் அவருக்குப் பின் நிற்கும்.

சுயநலத்திற்கு வாழ்ந்து, தான், தன் குடும்பம் மட்டுமே என்று வாழ்வதில் யாருக்கு என்ன பயன், பொருள் இருக்கிறது??

தாத்தா பாட்டி,  பூட்டன் பூட்டி பெயர் கூறக் கூட, சொல்லவும், கேட்கவும்,   தெரிந்து கொள்ளவும் கூடத்  தெரியாத சமூகத்தில் நாம் அனைவரும் வாழவில்லை. 

பெரியவர்கள் அனைவரும் தனக்கென்று வாழ்ந்ததினால் தெரிந்து கொள்ளத் தோன்றவில்லை.

பெரியவர்கள் பெருந்தன்மையான சூழலை உருவாக்க நல்லதைப் பேசியும், உதவி செய்யும் மனப்பான்மையை, சிறுவர்களிடையே வளர்க்க வேண்டும்.

பகிர்ந்து அளித்து உண்ணுதல், பொருட்களையும்... இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கும், இயலாதவர்களுக்கும், மனமுவந்து கொடுக்க முன்வருதலை பழக்கப்படுத்த வேண்டும். அப்போது தான் சுயநலமாக சிந்திக்காமல் பொதுநலம் பற்றி யோசிக்க முன் வருவர்.

துன்பப்படுபவர்களைக் கண்டு மனம் இரக்கம் கொள்ள பழக்க வேண்டும். தானே உதவ முன் வர வேண்டும்.

இது பொது இடங்களில் மட்டுமல்ல. வீட்டில் பெற்றோர், தாத்தா பாட்டி, உடன்பிறப்புகள், மற்றும் உறவினர்கள், யாராக இருந்தாலும் பாரபட்சம் பாராமல் நேசிப்பது, உதவுவது... தனது கடமை என்ற மனப்பான்மையை அவர்களிடம் விதைத்தால் தான் நாளைய சமுதாயம் ஒற்றுமை, விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை, தியாகம் என்பவை பற்றி புரிய வரும்.

தான் பெரியவனாகும் போது அந்த பலன் அரணாக காக்கும் என்பது.. தான் பெரியவனாகும் போது புரிய வரும்.

அந்தப் புரிதலை சிறு வயதிலேயே குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டியது யார் பொறுப்பு?? பெற்றோர், வீட்டில் உள்ள உறவுகள் மற்றும் ஆசிரியர் பொறுப்பு. சமுதாயத்தின் பொறுப்பும் கூட.

*மூத்தோர் சொல் கேள்..என்பது ஔவையின் வாக்கு.*

*வாழ்வதில் பொருள் வேண்டும்.*

வாழ்வதற்குப் பொருள், பணம் மட்டுமே வேண்டும் என்று மட்டும் நினைக்க அனுமதித்தல் கூடாது.

அனைத்தையும் மதித்தும், நேசித்தும் வாழ்தல் இறைவனுக்கே தொண்டு செய்வது போன்றது.

இன்றைய விதை தான் நாளைய விருட்சம். நாளைய விருட்சம் தான் அனைவருக்கும் காய்கனி மட்டும் அல்ல நிழலும் கொடுக்கும் பூமியும் வாழும் என்பதை வேரூன்றி பதிய வைக்க வேண்டும்.

அன்புடன் ஜே.கே

Saturday, 8 September 2018

The change of the day (08/09/2018)

''May the whole world enjoy Prosperity, happiness, long life, enough wealth and peace.''

Be Blessed.

*A change of the day * (08/09/2018)

Action / Purity in Action
652 :
Thank you for having a glimpse of thanks.

Description 1:
One should never forget the kindness and charity of the noble and the ungodly.

Description 2:
For the sake of the glory and the benefit of the Hereafter, we must abandon the deeds.

English Couplet 652:
From action evermore thyself restrain 
Of the glory and of good that yields no gain.

Couplet Explanation:
Ministers should at all times avoid acts which, in addition to fame, yield no benefit (for the future).

Those who are in duty are always grateful.

They sense the source of any action.

Thank you for realizing that we have got this.

In the same way, they forgive the wrongdoers and bless others in their minds that they must soon realize themselves and remove their shortcomings.

Remember them and be merciful.

The impact of society and the karma of one person moves them to do what they have done. If you are a bit awkward, it can be broken down.

Ignorance, negligence, emotion should not allow one to hide the eyes. Knowledge is special.

Knowledge of the knowledge should be heard.
It is not good if you go to your path.

Whatever anyone says, it does not take into account what is good for him and does not enter into evil. The resulting awakening is here.

What is the duty of man? What is the purpose of birth? Knowing Himself is full of commitment, gratitude, and love in harmony with everyone.
Only need to focus on it.

Dutifully, and unforeseen results.
Do not expect benefit obligation.

With Jk

தினம் ஒரு மாற்றம். (08/09/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

தினம் ஒரு மாற்றம் (08/09/2018)

குறள் 652:
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.

விளக்கம் 1:
புகழையும் அறத்தையும் தாராத (தூய்மை அற்ற) செயல்களை எக்காலத்திலும் ஒருவன் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும்.

விளக்கம் 2:
இம்மைக்குப் புகழையும் மறுமைக்கு நன்மையையும் தராத செயல்களை எந்தக் காலத்திலும் விட்டுவிட வேண்டும்.

English Couplet 652:

From action evermore thyself restrain
Of glory and of good that yields no gain.

Couplet Explanation:
Ministers should at all times avoid acts which, in addition to fame, yield no benefit (for the futur

கடமையில் சிறப்பவர்கள் எப்பொழுதும் நன்றியுணர்வுடன் இருப்பார்கள்.

எந்த ஒரு செயலுக்குமான மூலத்தை உணர்வார்கள்.

யாரினால் இதைப் பெற்றோம் என்பதை உணர்ந்து நன்றி கூறுவர்.

தனது குறைகளையும் திருத்திக் கொண்டும்,  தவறு செய்பவர்களை மன்னித்தும், அவர்கள் விரைவில் தன்னை உணர வேண்டும் என்றும்,  அவர்களுடைய  குறைகளை அகற்ற வேண்டும் என்றும் நினைத்து மனதில் பிறரை வாழ்த்துவார்கள்.

அவர்களை நினைந்து மனம் இரக்கம் கொள்வர்.

சமுதாயத்தின் தாக்கமும், ஒருவருடைய கர்மாவும் இணைந்தே அவர்களை புலன்வயப்பட்ட செயல்கள் செய்ய தூண்டுகின்றன. சிறிது விழிப்புணர்வுடன் இருந்தால் அதை தகர்த்தெறிய முடியும்.

அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம் ஒருவர் கண்களை மறைக்க அனுமதிக்கக் கூடாது. அறிவை அறிவதே சிறப்பு.

அறிவு அறிவுறுத்தலை கேட்க வேண்டும்.
தன் போக்கில் செல்ல மனதிற்கு இடம் கொடுத்தால் அது நன்மை பயக்காது.

யார் எதைச் சொன்னாலும் அதில் தனக்கு நலம் தரும் விஷயம் என்ன என்பதை மட்டுமே எடுத்துக் கொண்டு அல்லதை விடுத்தால் தீயவைகள் மனதிற்குள் நுழையாது. விளைவறிந்த விழிப்புநிலை இங்கு தான் தேவை.

மனிதனின் கடமை என்ன? பிறப்பின் நோக்கம் என்ன?  தன்னை அறிந்து கடமையில் முழு ஈடுபாட்டுடன், நன்றியுணர்வுடன், அன்பில் அனைவருடனும் ஒத்தும் உதவியுமாக வாழ்வது.
அதில் மட்டுமே கவனம் வேண்டும்.

*கடமையை செய், பலனை எதிர்பாராதே.*

அன்புடன் ஜெ.கே

Thursday, 6 September 2018

The Change of day (06/09/2018)

''May the whole world enjoy Prosperity, happiness, long life, enough wealth and peace.''

Be Blessed.

*A change of the day * (06/09/2018)

It is better to be greeted and forgiven * with the blessings of life * rather than to neglect those who do not know and respect those who do not know.

No one can escape from the outcome of the act. But it can be reduced from that sin By doing good deeds.
*Do not visit the home of those who do not value you* is a Global Justice

*Have a sense of unity among the people you live with.* says  Tamil Aathichudi.

Always the great ones are forgiving.

Forgive and forget the wrongdoers.

Only the offenders can not tolerate anyone, anything.

What is the reason they attract negative thoughts?

When you start to attract positive thoughts, love, mood, self-giving, and endurance and sacrifice begin to Enter into the mind.

*Shri Vedhathiri Maharishi said that they would be happy to live with the enemy and to be happy with their lives* . Why ???

The reason for the disorder of this society is the form of dirt in everybody's mind.

If the good thoughts, thoughts, and minds that are good at helping us to overcome these social misconceptions, the lack of quality, defective and guilty thoughts will disappear. And the mind is cleaner to do more good deeds. * A person should have a good and meaningful mind. *

If you understand this, * 'I' * go and  think * we * blossom.

Let us consider greatness in mind.
Everyone is the children of God. Everybody is equal in front of God .. Why the difference? why Enmity? Everything is a form of atoms!

Self-thinking will give the clarity.

With Jk

தினம் ஒரு மாற்றம் (06/09/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (06/09/2018)

மதிக்கத் தெரிந்தவர்கள் முன் பணிவோடும், மதிக்கத் தெரியாதவர்களை புறக்கணிப்பதை விட,  அவர்களை *வாழ்க வளமுடன்*  வாழ்த்து கூறியும், மன்னித்தும், விடுவதே நல்லது.

செயலுக்குரிய விளைவில் இருந்து யாருமே தப்பவே முடியாது.. ஆனால் அதை அந்த பாவத்திலிருந்து குறைத்துக் கொள்ள முடியும். நற்செயல்கள் செய்வதன் மூலமாக.

*மதியாதார் தலை வாசல் மிதியாதே* என்பது உலகநீதி.

*ஊருடன் கூடி வாழ்* என்று ஆத்திச்சூடி கூறுகிறது.

எப்பொழுதும் பெருந்தன்மையுடையவர்கள் மன்னிக்கத் தெரிந்தவர்கள்.

தவறு செய்தவர்களை மன்னித்தும் மறந்தும் விடுவார்கள்.

குற்றம், குறை பேசுபவர்களால் மட்டுமே யாரையும், எதையும், பொறுத்துக் கொள்ள முடிவதில்லை.

என்ன காரணம் என்றால் அவர்கள் எதிர்மறை எண்ணங்களை ஈர்ப்பதினால்.

நேர்மறை எண்ணங்களை ஈர்க்க ஆரம்பித்து விட்டால் அன்பும், மனவிரிவும், தானாகவே மனதில் விட்டுக் கொடுத்தலும், சகிப்புத்தன்மையும், தியாகமும், மனதில் குடிகொள்ள ஆரம்பிக்கும்..

*அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் எதிரியையும் மனந்திருந்தி நல்வாழ்வு வாழ கருணையோடு வாழ்த்துவோம் என்கிறார்கள்..* ஏன்???

ஒவ்வொருவரின் மனதில் இருக்கும் அழுக்குகளின் வடிவம் தான் இந்த சமுதாயத்தின் சீர்குலைவுக்கான காரணம்.

அந்த சமுதாயப் பாவப்பதிவுகளை போக்குவதற்கும் புண்ணியம் தரும் நல்ல எண்ணங்களை, சிந்தனைக்குள், மனதிற்குள், அனுமதித்துக் கொண்டே இருந்தோம் என்றால் தரமற்ற, குறையுள்ள, குற்றமுள்ள எண்ணங்கள் காணாமல் போகும். மேலும் நற்செயல்களை அதிகம் செய்யச் செய்ய மனம் தூய்மையாகும். அதற்கு *மனதில் தரமுள்ள, ஒழுக்கமுள்ள எண்ணங்களை ஒருவர் அனுமதிக்க வேண்டும்.*

இதை புரிந்து கொண்டால் *'நான்'* என்பது போய்  *'நாம்'*  என்ற எண்ணம் மலரும்.

பெருந்தன்மையை மனதில் அனுமதிப்போம்.
அனைவரும் இறைவனின் குழந்தைகள். இறைவன் முன்னால் அனைவரும் சமமே.. இதில் வேற்றுமை எதற்கு? பகையுணர்வு எதற்கு?

அனைத்தும், அனைவரும் அணுக்களின் வடிவம் தானே!

சுயமாய் சிந்தித்தேத் தெளிவோம்.

அன்புடன் ஜே.கே

Wednesday, 5 September 2018

The change of day (05/09/2018)

''May the whole world enjoy Prosperity, happiness, long life, enough wealth and peace.''

Be Blessed.

The change of day (05/09/2018)

Less 391 :

Learn to learn after learning 
to learn .

Description 1:
Learning to learn good books is to study education, and after learning about it, you have to stand up for the education you have learned.

Description 2:
Learn to read books without error; Live in good ways to learn after learning.

English Couplet 391:
So learn that you are full and faultless learning gain, 
Then in obedience meet to lessons learnt remain.

Couplet Explanation:
Let a man learn thoroughly what he learn, and let his conduct be worthy of his learning.

Dr. Sarvapalli Radhakrishnan's birthday is celebrated as Teacher Day today.

How to be a teacher?

For students who have learned the lessons of education and the sense of responsibility to create a better society
Quality
Educate with understanding and dedication ..

There should be harmony and friendship between students.

To encourage a good study student and to provide enough attention to education, some of the students who are due to the family environment should be raised above the front and forward the community.
It is the duty of the well-wisher to accept it as a challenge.

He must learn to study his education and be able to improve his knowledge of himself.

When teaching students, the idea is to give an explanation of the explanation of the errors by the words, with examples of quality.

Understand the understanding of the students and do not hesitate to explain further explanation. A clear understanding should be made for students.

To attract students with his high profile.

One should have only a moral teacher who sets up a pathway.

The teacher should live with an illustrated example.

With Jayalakshmi Kumaresan (JK)

தினம் ஒரு மாற்றம் (05/09/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (05/09/2018)

Dr. சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக இன்று கொண்டாடப்படுகிறது.

குறள் 391:

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

விளக்கம் 1:
கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.

விளக்கம் 2:
கற்கத் தகும் நூல்களைப் பிழை இல்லாமல் கற்க; கற்ற பிறகு கற்ற கல்விக்கு ஏற்ப நல்ல வழிகளில் வாழ்க

English Couplet 391:
So learn that you may full and faultless learning gain,
Then in obedience meet to lessons learnt remain.

Couplet Explanation:

Let a man learn thoroughly whatever he may learn, and let his conduct be worthy of his learning.

ஆசிரியராக இருக்கும் ஒருவர் எப்படி இருக்க வேண்டும்?

கடமை உணர்வோடும் பொறுப்புணர்வோடும் வருங்கால  நல்ல சமுதாயத்தை உருவாக்கும் உணர்வோடும் தான் கற்ற கல்வியை  மாணவர்களுக்கு
தரமோடும், (Quality)
புரிதலோடும்,  அர்ப்பணிப்புணர்வோடும் கல்வி புகட்ட வேண்டும்..

மாணவர்களிடையே நல்லிணக்கம் மற்றும் நட்புணர்வு  பேண வேண்டும்.

நல்ல படிக்கும் மாணவரை ஊக்கப்படுத்தியும், கல்வியில் போதிய கவனம் செலுத்த முடியாமல் குடும்ப சூழல் காரணமாக இருக்கும் ஒரு சில  மாணவர்களை மேலே உயர்த்தி சமூகத்தின் முன் தலைநிமிரச் செய்ய வேண்டும்.
அதை சவாலாக ஏற்று சாதிப்பதே நல்லாசிரியரின் கடமை.

அவரது கல்வியை முழுமையாகக் கற்றுத் தேர்ந்து அதில் மேலும் தன்னை, தனது அறிவை, மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

மாணவர்களுக்கு கற்றுத் தரும் போது  எண்ணம், சொல் செயல்களினால் பிழைகளற்று தான் கூறும் விளக்கத்தினை புரிந்து கொள்ளும்படி தரத்துடன் கூடிய உதாரணங்களோடு தெளிவாக எடுத்துக்கூற வேண்டும்.

அந்த மாணவர்களின் புரிதலை புரிந்து கொண்டு மேலும் விளக்கம் தேவைப்பட்டால் விளக்கத் தயங்கக் கூடாது. தெளிவான புரிதலை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

தனது உயர்ந்த பண்பினால் மாணவர்களை ஈர்க்க வேண்டும்.

நல்வழிப்பாதையை அமைத்துக் கொடுக்கும் ஒழுக்கமுள்ள ஆசிரியராக மட்டுமே ஒருவர் இருக்க வேண்டும்.

ஆசிரியர் என்பவர் மேன்மை பொருந்திய எடுத்துக்காட்டாக வாழ வேண்டும்.

அன்புடன் ஜே.கே

Tuesday, 4 September 2018

தினம் ஒரு மாற்றம் (04/09/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (04/09/2018)

ஒருவரின் வாழ்க்கை சீராக செல்ல வேண்டுமானால் அதற்கு அந்த குடும்பத்தில் உள்ள நபர்களில் சம்பாதிக்கும் திறமையுள்ளவர்கள், பிறருடன் அன்புடனும், குடும்பத்தை கட்டுக்கோப்புடனும் கொண்டு செல்ல வேண்டும். அவரை மதித்து, பிறரும் அனுசரித்தும், விட்டுக் கொடுத்தும், ஒத்தும் உதவியுமாகவும், உறுதுணையாகவும், இருக்க வேண்டும்.

சூழ்நிலை எப்பொழுதும்  தனது கட்டுப்பாட்டில்....., கட்டுப்பாட்டில் என்றால் குடும்ப நபர்கள் தேவையுள்ள செலவுகளுக்கு இடம் கொடுத்து, அவரின் அனைத்து நற்செயல்களுக்கும்  உறுதுணையுடன்  இருந்து முன்னேற்றப் பாதையில் குடும்பம் செல்ல  ஒத்துழைப்பை நல்க வேண்டும். குடும்ப நபர்கள் வரைமுறையை கைமீறிப் போக அனுமதிக்கக் கூடாது. இது எப்படியென்றால் பட்டம் பறக்க விடுபவன் நூலை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போல்.

எப்பொழுதும் அன்புடனும் அக்கறையுடனும் குடும்ப நலனில் அக்கறை கொண்டு வீட்டில் நடக்கும் விஷயங்களில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டு தீர்வுகளை சிந்தனை செய்ய கலந்தாலோசித்தல், பல சிக்கல்களுக்கு தீர்வு காண  வழி வகுக்கும்.

ஒரு பக்கம் தாயின் அன்பும், அக்கறையும், மறுபக்கம் மனைவியின் அன்பும், அக்கறையும் .., இதில் இருவரிடையே பாரபட்சம் பாராமல்,  இருவருக்கும் இடையில் நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு குடும்பத்தலைவராகிய கணவனுடைய பங்கு தான் மிகப் பொறுமை மிக்கது, பொறுப்பு மிக்கது. பெண்ணாக இருந்தாலும் அவ்வாறு தான்.  நிர்வகிப்பவரும் பிறரும் பொறுப்பு மிக்கவராக இருத்தல் அவசியம்.

ஒருவரைப் பற்றி யார் என்ன சொன்னாலும், தனது தாயையும் மனைவியையும் அனைத்து இடங்களிலும் அன்போடும்,  பண்போடும், மதிப்போடும், மரியாதையோடும் நடத்த வேண்டும்.

அனைவரும் எதிர்பார்ப்பது இனிமையான சொற்களைத் தாங்கிய அன்பு ஒன்றை தான்.

அதில் பாரபட்சம் எதற்கு?

‌அன்பை பெறுவதற்கு மட்டுமே அனைவரும்  தயாராக உள்ளோம். அதிகாரத்தை அல்ல. பின்பு அதை கொடுப்பதற்கு  ஏன் பாரபட்சம்?

சுயமாக சிந்தித்து இனிமையாக வாழ்க்கை நடத்தும் திறமை அனைவரிடமுமே உள்ளது.

அன்புடன் ஜெ.கே

தினம் ஒரு மாற்றம் (03/09/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (03/09/2018)

நேரம், காலம்  மதித்து செயல்படுவோர்களுக்கு காலம் அவர்களை மதிக்கிறது.

நேரத்தை முழுமையாக பயனுள்ள முறையில்  பயன்படுத்தி மகிழ முடியும்.

ஒருவருக்கு ஒரு முழு நாள் கையில் உள்ளது.

தனக்கென்று ஒரு மணி நேரம், காயகல்பப் பயிற்சி 5 நிமிடம்,  உடற்பயிற்சி 1/2 மணி நேரம், தியானம் 20 நிமிடம், இரவில் இன்று செய்த நல்ல செயல்கள் என்ன, யார் யாருக்கெல்லாம் நன்றி கூறினோம். யார் மனதை வேதனைப் பட வைத்தோம்? அதில் நம் பங்கு என்ன? ஏன் கோபப் பட்டோம்?  எங்கே தவறு நேர்ந்தது? தவறை திருத்திக் கொள்ள என்ன முயற்சிகள் எடுக்க வேண்டும். என்று தன்னைத் தானே சுய பரிசீலனை செய்து கொள்ள ஒரு 15 நிமிடம் ஒதுக்கி நன்றி கூற வேண்டியவர்களுக்கு மனதால் நன்றி கூறிக் கொண்டு, மன்னிப்புக் கேட்க வேண்டியவர்களிடம் மன்னிப்புகேட்டுக் கொண்டும், மன்னிக்க வேண்டியவர்களை மன்னித்தும் குடும்ப உறவுகளுடன் ஒரு வேளை ஒன்றாக அமர்ந்து உணவு உண்டு, ஒரு மணி நேரம் அவர்களுடன் கலந்து பேசி குடும்பத்தை மேம்படுத்த என்ன செய்யலாம் என்று முடிவுகளை எடுத்துக் கொண்டு, அன்றாடக் கடமைகளை முழு மனதுடன் நிறைவேற்றினால்  வாழ்க்கையே சொர்க்கம் தான்.

பிறருக்கென்று  (கடமை நிமித்தமாக) குடும்பத்தில் செலவிடும் நேரம்,  பணத்தை கையாளும் விதம் சிக்கனம், சிந்தனை, சீர்திருத்தம் கொண்டு நேரத்தை குடும்பத்தினருடன் விடுமுறை நாட்கள் மகிழ்ச்சிப் பயணம் குறைந்த பட்சம் ஆண்டுக்கு ஒரு முறை அல்லது ஆண்டில் இருமுறை செலவிடலாம்.

இல்லாதவர்களுக்கும் இயலாதவர்களின் தேவை பூர்த்தி செய்யலாம்.

எண்ணத்தினால் தூய்மையை கடைபிடித்துக் கொண்டு முடிந்த நன்மைகளை செய்யலாம்.

பெற்றோருக்கு ஆற்ற வேண்டிய கடமைகளுக்கும் முன்னுரிமை கொடுத்து நிறைவேற்ற, அவர்களின் ஆசிகளைப் பெற, நேரம் காலம் பார்க்க அவசியம் இல்லை.

சொர்க்கம் நரகம் என்பது அவரவர் செய்யும் செயலிலே விளைவாக இருப்பது.  

முதல் கடமை ஒருவர் தன்னையும், தன்னை சார்ந்தவர்களின்  உடல்நலம் மனநலம் உயிர்வளம் காப்பது பேணுவது.

எந்தக் கடமையாக இருந்தாலும் அதை முழுமனதுடன் அன்புடன் ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும்.

இதுவே கர்மயோகம்.

அன்புடன் ஜே.கே

Sunday, 2 September 2018

தினம் ஒரு மாற்றம் (02/09/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (02/08/2018)

சில நேரம் சில சூழ்நிலை ஒருவருக்கு சாதகமாக இருக்கும். ஒரு சில நேரம் சாதகமாக இருக்காது.

இதற்கு என்ன காரணம்??

ஒன்று அது அவருக்குத் தேவைப்படுவதாக இருக்காது. அவருக்கு பதிலாக வாய்ப்பு வேறொருவருக்கு அளிக்கப்படலாம்.

மற்றொன்று கடவுள் அனைவருக்கும் பாதுகாப்பு கொடுப்பதற்காகவே சில சூழ்நிலைகளை தடை செய்கிறார். சிலவற்றை அளிக்கிறார்.

எது கிடைக்கிறதோ அதற்கு நன்றி கூறியும், எது கிடைக்கப்படவில்லையோ அதற்கும் நன்றி கூறியும் சூழ்நிலையை அப்படியே ஏற்றுக் கொண்டு விட்டால் மனம் நேர்நிலை உணர்வில் வைத்துக் கொள்ள இயலும்.

மேலும் இதை விட சிறப்பான ஒரு விஷயம் ஒருவருக்கு நடப்பதற்குக் காரணமாகக் கூட இருக்கலாம்.

எது எப்படியோ, சில பொருட்கள் கிடைக்கவில்லையா?? அது அவருக்கு வேண்டாம் என்று பொருள். அது அவருடைய மனநலத்துக்கோ, உடல் நலத்துக்கோ ஏற்புடையதாக இருக்காது. ஆகவே இறைவன் அதை தடுக்கிறார்...

சில இயல்பாக நடக்கும் விஷயங்களில் ஒருவர் மனதை போட்டுக் குடைந்து இது கிடைக்கவில்லையே என்று ஏங்கவும் தேவையில்லை.. இது தான் கிடைத்ததா என்று வருத்தப்படவும் தேவையில்லை.

*எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது..*
*எது நடக்கின்றதோ அதுவும் நன்றாகவே நடக்கின்றது..*
*எது நடக்கப்போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் ..*
*என்கிறது கீதை...*

ஆகவே ஒருவருக்கு அனைத்து வகையிலும் இறைவன் நன்மையே செய்வார் என்று நம்பிக்கையுடன் ஒருவர் செயல்படலாம். அனைத்தும் நன்மைக்கே...

அன்புடன் ஜெ.கே