Tuesday, 31 March 2020

World Peace Poem 21 Body Chemistry and its Changes

https://m.facebook.com/story.php?story_fbid=611845803007289&id=100025456231980

World Peace Poem 21 

Body Chemistry and its Changes

The basic force of the universe is magnetism which is the joint function of standing force (Static) and the force of whirling motion of the particle. This is the unifying force regulating all the functions of the universe. As magnetism, basically it has two functions: attraction and repulsion. So it makes all physical events to appear and disappear. Its second stage of working mode is electricity, where it emerges as sound and light. The third stage of working mode of magnetism is chemicals: taste and smell. The fourth working mode, added to all other stages is mental and physical feeling, where the conscious- ness becomes 'will'. So all the universal functions can be brought into four stages: Magnetism, Electricity, Chemicals and Organic Emergence (Feeling). 

In living beings all the above four stages are functioning together as support and interaction, one within another as patent and latent. These four stages are convertible one to another and therefore always in fluctuation. 

In man, heredity is the capital accrued from numerous genera- tions. In his living process there are five other factors which can change him according to their forces. They are: food, thought, deeds, planetary influences, and accidents or other natural forces (rain, storms, volcanic eruptions, etc.). 

All these six factors may be taken as six angles which determine the supply of magnetism, electricity and chemicals, appropriately causing the mind to feel pain, pleasure, peace and ecstasy. 

According to the qualities and forces of the above six factors, the magnetic, electric, chemical forces are conditioned to function. As a result the feelings of pain, pleasure, peace and ecstasy arise accordingly.
If any one of the six factors becomes abnormal it will affect the body and mind, even to the culmination of deterioration which is death, Below are some such examples. 

Heredity: 

All five factors may be normal but if there is a hereditary defect of body or mind beyond adjustment or cure, the body will perish.

Food: 

Similarly, when the other five factors are normal if foodt improper or incompatible with the body, the physical functions w collapse (food includes medicines such as drugs, metals and chemicals.

Thought: 

Our thoughts are directly converting the bio-magnetism into shapes and images (character and mood). Sometimes by extreme happiness, fear or anger the blood pressure will be raised, affecting the heart and eventually result in death. 

Deeds: 

Every deed also affects the body proportionately. Our own acts may prove beneficial, harmful or even suicidal. 

Planetary influences: 

Every planet in our solar system is of particular chemical compounds and emits magnetic rays. According to the planetary positions on the date of one's birth, the magnetism in the solar field is conditioned. Thereafter every minute the positions of the planets relative to earth are changing. Relative to the positions which prevailed at birth, the changes of planetary distances and angles affect each of us. Also from time to time the conjunction of two or more planets in one angle or when any planet moves in particular zodiac house results in a change of radiation. This will continually affect man. When it affects him beyond his ingrained hereditary immunity level , or does so in addition to effects of other four factors, death ultimately results. 

Accidents and Natural Forces:

Regarding these, it is obvious that man is often affected when such forces exceed his immunity.

Maintaining the body and mind well in condition by a systematic inner travel practice of mind and normally disciplined deeds will save the bio-magnetism to be sufficiently in stock which will increase the immunity level to some extent to withstand the fluctuations and forces of all the six factors detailed above.

உலக சமாதானம் முதற் பாகம் பாடல் : 21 ரசாயன அமைப்பும் மாற்றமும்



https://m.facebook.com/story.php?story_fbid=611808849677651&id=100025456231980

உலக சமாதானம்
முதற் பாகம் 
பாடல் : 21 ரசாயன அமைப்பும் மாற்றமும் 

    கரு அமைப்பு, உணவுவகை எண்ணம், செய்கை   
        ககனத்தில் கோள்கள் நிலை, சந்தர்ப்பத்தால் 
    வரும் இயற்கை நிகழ்ச்சிகளின் மோதல்-எல்லாம் 
        வாழும் உயிற்கடிக்குப் பல ரசாயனங்கள் 
    தரும், மாற்றும், தரமோக்க இன்ப துன்பம்,
        தகுந்த அளவாம். இதிலோர் சக்திமீறி 
    பெருகி ரத்தச் சுழல் தடுக்க நோயாய் மாறி 
        பின்னும் அதிகரித்துவிட மரணம் ஆகும்.

    கருவமைப்பாலும், ஆகாரங்களாலும், எண்ணங்களாலும், செயல்களாலும், ஆகாயத்தில் அண்டங்களின்   
சஞ்சாரங்களாலும், சந்தர்ப்ப சந்திப்புகளாகிய இயற்கையின் வேக விளைவாலும் , உடல் காந்த சக்தியின் அலைகள் கூடிக் குறைவதால் உயிரினங்களின் உடலில் இருக்கும் பலவிதமான ரசாயானங்களின்  அளவுகள் அதிகரிக்கின்றன அல்லது குறைந்து விடுகின்றன. 

    அந்த மாற்றத்துக்கு ஏற்றபடி ரத்த ஓட்டத்தின் அளவும் தரமும் உடலில் மாறுபடுகின்றன. இம்மாற்றங்களால் அறிவுக்கும் உடலுக்கும் இன்பமோ துன்பமோ விளைகிறது .
 மாறுபட்டால், ரத்த ஓட்டத்தில் சிறுதடையோ குழப்பமோ ஏற்பட, அது நோயாகிறது. அத்தடையே அதிகமாகிவிட்டால் இருதயம் நின்றுவிடும்; இரத்தக்குழல் வெடித்துவிடும்; இவை போல்வன பல நிகழும். அவைகளால் மரணம் நேர்கின்றது. 


உலக சமாதானப் பாடல் – 22         தொடரும் ....

Friday, 20 March 2020

WORLD PEACE POEM – 19 FURTHER SECRETS IN HERIDITY

https://www.facebook.com/100025456231980/posts/603997520458784/

WORLD PEACE POEM – 19
FURTHER SECRETS IN HERIDITY

     Let us think over heredity still more deeply. In addition to all qualities of imprints in the chromosomes of parents, relative changes in offspring also are determined by the health, age, and psychic moods of both parents at the time of conceiving a child. Also the planetary positions condition a specific magnetic wave at the particular time when the chromosomes join to form a child, and thus proportionately affect the heredity.

Poem No.20 will continue…….

உலக சமாதானம் முதற் பாகம் பாடல் : 19 – கருவமைப்பால் மாத்திரம் வரும் மாறுதல்கள்

https://www.facebook.com/100025456231980/posts/603986280459908/

உலக சமாதானம்
முதற் பாகம்
பாடல் : 19   –  கருவமைப்பால் மாத்திரம் வரும் மாறுதல்கள்

    ஆராய்வோம் கருவமைப்பைப்பற்றி, அப்போ
        ஆண்பெண்கள் அறிவு, செல்வம், வயது, ஆரோக்கியம்,
    நீராய நாதவிந்து அளவு, சக்தி,
        நிலையாது சுற்றி ஒன்றை ஒன்று ஈர்க்கும்,
    பாராதி அண்டங்கள் சூழல் சஞ்சாரப்
        படிபஞ்ச பூதங்கள் பரிணமித்து,
    சீராக அடையும் ரசாயன மாற்றங்கள்,
        சேர்ந்த முறை கருவமைப்பின் தன்மையாகும்.

    கருவமைப்பு என்றால் என்ன? ஆராய்வோம். நாதமும் விந்தும் கூடும்போது, அவற்றின் மூல உடல்கள் ஆகிய ஆண் பெண்  இருவர்களின் வயது, சரீர சுகம், அறிவின் உயர்வு, செல்வத்தால்-பொருளாதாரத்தால்-பெற்றிருக்கும் வாழ்க்கை வசதிகள், அன்று கூடிய நாதவிந்தின் சக்தி-அளவு, எழுச்சி, கவர்ச்சி, ஒலி , ஒளி, வெட்பதட்பங்களைத் தாக்கி, பிரதிபலித்துக்  கொண்டிருக்கும் பூமி, சூரியன் முதலிய கோள்களின் ஆகாயத்தில் சஞ்சரித்துக் கொண்டே ஒன்றை ஒன்று நெருங்கியும், விலகியும், ஈர்த்தும் சுழன்று வரும்போது, ஏற்படும் ஒலி, ஒளி வெப்பம், தட்பம், கவர்ச்சி முதலியவற்றால் அணு முதல் அண்டங்கள் பெறும் பரிணாம மாறுபாடுகள், ரசாயன மாற்றங்கள் என்ற இவைகளில் அப்போது அமையும் அமைப்புக்கு ஏற்றபடி கருவமைப்பு ஆகும்.


உலக சமாதானப் பாடல் – 20         தொடரும் ....

உலக சமாதான பாடல் :19 'கருவமைப்பால் மாத்திரம் வரும் மாறுதல்கள்' : பேரா.கலைச்செல்வி சிவகுமார் அம்மா அவர்கள்


Wednesday, 18 March 2020

WORLD PEACE POEM – 18 DIFFERENCES BETWEEN MEN

https://www.facebook.com/100025456231980/posts/602577427267460/

WORLD PEACE POEM – 18
DIFFERENCES BETWEEN MEN

    To make successful research and plan on the noble subject of World Peace, we must know how man’s values and characters are formed. What are the differences between men and can we bridge them for bringing universal brotherhood?

     There are apparently seven values in man. They are
1. Bodily structure
2. Character of personality
3. Advancement of knowledge or intellectual clarity
4. Fame of service
5. Physical strength
6. Physical Health
7. Financial Status.

     All people in the world are different from one another only in these seven values. These are conditioned bu the following sixteen factors :
1. Hearedity
2. Food
3. Historical Age
4. Place of living
5. Education
6. Work
7. Government
8. Art
9. Effort
10. Physical Age
11. Friendship
12. Opportunity
13. Research
14. Practice
15. Accepted sentiments of the society
16. Morality
Heredity  plays a great role in the life of every living being, from one sense plant life to six-sense man. For example, think of a man. How has he come into being? Only from the joining of chromosomes of his parents. In the chromosome all the imprints of structure of the physical body and the characters of both father and mother are latent. In the process of growth of the child in the womb of mother and after birth all such imprints gradually and specifically blossom into physical appearance. Similarly, parents also got the imprints in this way if we go back through the heredity it will pass on millions of generations and end in the first man who started life on the Earth, not only that, our heredity goes further from man to his orgin, crossing millions and millions of generations of different species and ending with one sense, the plant life. From that time up to the present, through all the ages and generations, the imprints of actions and clashes are continuously recorded without missing by the marvellous universal wave system.

Here I have to explain my concept of the universal wave system, for such a phenomenon is mentioned in several places in my writing. The whole universe is of energy particles and space. All appearances are only the significance of associations of energy particles is a whirling of their moments. In relation to space the particle is a whirling wave, being a fraction (broken piece) of the space (Static or Premordial State). By its own inherent force from the primordial state the energy particle emerged with a radiated constantly. Already the space around the particle is greater in power. The spreading wave of the particle clashes and penetrates into the greater force. Static State, and two forces now contrast one another, becoming a resultant force. This is called Universal Magnetism.

The Universal Magnetism is to be visualised as a superstring encompassing the seen universe and all unseen forces. It penetrates and fills in, in everything and make move in order. Devoid of this phenomenon, a super-string universal magnetisk, there will be no universe existing. The joint function or standing force of static state and the force of spreading wave of the particles in the universal magnetism is much wonderful. This can be compared with a mother and her child. Mother gives birth to the child, but the child by its new force plays mischief. Mother happily embraces the child with pure love because, in fact, the child is a fraction of her own self. Mother helps the child to play at its will and grow and enjoy its life. Similarly we have to think of the static standing force as mother and the wave of whirling motion of the particle as child. Mother and child are enjoying a divine love. Such is the universal magnetism. Mother-force absorbs the child-force. Up to a certain extent mother allows the child to play. Whenever the child-force becomes weak, the mother-force is seen predominant because it is ever-existing. This joint wave functions in five ways: clash, reflection, refraction, penetration and interaction. Every action of wave gives an imprint in all energy particles and their associations. Such imprints are going on increasing to condition the character of each and everything. The results of these five functions are conversion of the universal magnetism into the five phenomena : pressure, sound. Light, taste and smell. The degree varies according to the intensity and force of clashes.

One more wonder in the function of the universal wave system is that a wave which starts from the same character from the thing on which it clashes. In this way the universal wave system has all the characteristics of all the things in the universe and precisely supply the suitable required substance to everything. So the universal wave system is the reservoir for all substances, magnetic, electrical, chemical, physical, spiritual, mental and everything of the Universe, signifying precise results for every movement, clash and wilful action.

So in any research on the actions and results of inorganic or organic principles, we should keep in mind these systems of nature :

1) The space, incomparable Static Force
2) The energy particle; whirling motion of static as a broken piece.
3) Universal Magnetism : joint result of spreading wave of the particle and static or standing force, Universal Being.
4) Converted states of universal magnetism into pressure, sound, light, taste and smell. Any pressure comprises of two forces, standing force and moving force. When converted into electricity the sound the light are significant. When converted into chemicals, the taste and smell are significant.
5) The main difference between inorganic matter and organic is the formation of polarity between the cells and bio-magnetism is regularly charged, certain quantity is kept in stock and conversion of magnetism does all physical and mental routines. In man all these secrets are ingrained and followed from generation to generation through the hereditary link.

     Such is the wonder of heredity. As the physical form changes in the living being according to the addition of moving forces or deeds, the character also invisibly is changing according to the addition of mental behaviour and following the physical structure as its inside shadow. So the character is the fourth dimension in all living beings developed from the energy particle up to the present state of any living being. Therefore in man heredity as the first principle in his existence.

     Heridity is the capital for man at birth. Then his physical structure and mental behaviour are being changed appropriately by the other sixteen factors explained above.

     According to the sixteen factors, the seven values are formed in man. Hereditary quality has a deep imprint in the structure and behaviour than can be gradually changed by the other sixteen factors in a few generations of proper planning and living. Those who get the enlightment of consciousness and follow tolerance, adjustment and sacrifice may enjoy the universal brotherwood even among all kinds of differences between men.


Poem No.19 will continue…….

Tuesday, 17 March 2020

உலக சமாதானம் முதற் பாகம் பாடல் : 18 – மனிதருள் வேறுபாடுகள்

https://m.facebook.com/story.php?story_fbid=601715307353672&id=100025456231980

உலக சமாதானம்
முதற் பாகம்
பாடல் : 18   –  மனிதருள் வேறுபாடுகள்

    கருவமைப்பு, உணவுவகை காலம், தேசம்,
      கல்வி, தொழில், அரசாங்கம், கலை, முயற்சி,
    பருவம், நட்பு, சந்தர்ப்பம், பல ஆராய்ச்சி,
      பழக்கம், வழக்கம், ஒழுக்கம், இவற்றிற்கேற்ப ,
    உருவமைப்பு, குணம், அறிவின் உயர்வு, கீர்த்தி,
      உடல் வலிவு, சுகம், செல்வம், மனிதர்க்குண்டாம்
    தரும் இவற்றில் மாறுதலால் ஒவ்வொருவருக்கும்,
      தனித்தனியே அவ்வவற்றில் வேறுபாடு.

    உலகில் இன்று ஏறக்குறைய ஐநூறு கோடி மக்கள் இருப்பதாக அறிகிறோம். இவர்கள் ஒருவருக்கொருவர் பலவிதத்தில் அதாவது உருவ அமைப்பில், குணத்தில், அறிவின் உயர்வில், உடல் பலத்தில், சுகாதார நிலையில், செல்வத்தில், கீர்த்தியில் மாறுபாட்டே இருக்கிறார்கள். இதற்குக் காரணம் இங்கு விளக்கப்பட்டிருக்கிறது.
1. தாய், தந்தை விந்துநாத சேர்க்கையின் அமைந்த சிறப்புத் தன்மையான கருவமைப்பு .
2. கர்ப்பத்திலும், பிறந்த பின்னும் உடலில் சேர்ந்த-உடல் உட்கொண்ட-உணவு.
3. ஆதி மனிதன் தோற்றம் முதல் இன்று வரையில் மனித இனத்தின் அறிவின் கூர்மை, செயல் திறமை இவைகளால் அடைந்து வரும் மாறுதல்களைக் குறிக்கும் காலங்களில் ஒருவனுக்கு அமையும் காலம். அதாவது (கற்காலம், இரும்புக் காலம் முதலான காலங்களில் ஒன்று).
4. வாழும் தேசத்தின் சீதோஷ்ண நிலைகள், மக்கள் அறிவுநிலை, பழக்க வழக்கங்கள், விளைபொருள்கள் மாற்றுமுள்ள வாழ்க்கைச் சூழ்நிலைகள்.
5. அறிவையும், உடல் பலத்தையும் உபயோகித்துப் பயன் அடையும்-பயன் பேருக்கும்-கல்வி முறைகளில் அவன் கற்கும்-கற்ற-அளவு.
6. அறிவுத் திறமை, உடல் பலம் என்ற இவற்றைக் கொண்டு செய்து வரும் தொழில்கள்.
7. அரசாங்கச் சட்டதிட்ட ஆட்சி முறை அமைப்புகளும் அதனால் ஏற்படும் விளைவுகளும்.
8. அறிவையும், உடற்கருவிகளையும் ஒன்று படுத்தி, வாழ்வில் பலவிதத்திலும் பயனையும் இன்பத்தையும் அளிக்கின்ற அவன் பெற்றிருக்கும் திறமையும் அவைகளை ரசிக்கும் ஆர்வமும்.
9. தான் அடைந்த, அடையவேண்டிய, பலன்களை நினைவில் கொண்டு, அவன் அறிவு உடல் ஆற்றல்களைப் பயன்படுத்தும் வகையில் எடுக்கின்ற முயற்சியின் அளவும் தன்மையும்.
10. பூமி அண்டகோளங்களின் சஞ்சாரம் இவைகளால் மாறிக் கொண்டே இருக்கும் அவன் வயது.
11. பண்புக்கும், வாழ்க்கைத் தொடர்புக்கும் ஏற்ற நட்பு, அந்த நட்பினால் ஏற்படும் விளைவுகள்.
12. பிறந்தது முதல் அன்று வரையில் வாழ்வில் ஏற்பட்ட-குறுக்கிட்ட-வாழ்க்கையின் போக்கையே மாற்றிவிட்ட-சந்தர்ப்பங்கள்.
13. அறிவின் உழைப்பான சிந்தனை வேகம், விளைவு, பெருக்கம், ஆகிய ஆராய்ச்சித் திறமை.
14. அறிவுக்கும், உடலுக்கும் ஏற்பட்டிருக்கும் பழக்க, வழக்க ஒழுக்கங்கள். இவைகள் ஒவ்வொன்றின் அமைப்புக்கேற்ப ஏற்றத் தாழ்வுகளுக்கு ஏற்ப-ஒவ்வொரு மனிதனுக்கும் உருவமைப்பு, குணம், அறிவின் மேன்மை, உடல்நலம், வலிவு, செல்வம், புகழ் இவற்றில் வேறுபாடும், சிறப்புகளும் உண்டாகின்றன.
உலக சமாதானப் பாடல் – 19         தொடரும் ....

Saturday, 14 March 2020

உலக சமாதானம் முதற் பாகம் பாடல் : 17 – குறுகிய நோக்கம் மாற வேண்டும்

https://www.facebook.com/100025456231980/posts/599972727527930/

உலக சமாதானம்
முதற் பாகம்
பாடல் : 17   –  குறுகிய நோக்கம் மாற வேண்டும்

    ஊன்உருவில் சிறப்பான மனித வர்க்கம்
           உயிர் வாழ வசதிஎலாம்  மிகுந்திருந்தும்,
     நான்-எனது, என்றறிவில் குறுகி நின்று,
          நல்நினைவில் பொன், பொருளைப் பெரிதாய்ப்பற்றி,
     ஏன் நமக்கு இது என்றும் ஆராயாமல் ,
          இன்று அணுக் குண்டுவரை பெருக்கிவிட்டான்.
     ஆன்மநிலை யறிந்து அதற்கு ஏற்ப வாழ,
            அனைத்துலக ஆட்சி கண்டு அச்சம் தீர்ப்போம்.

     உலகில் இயற்கையின் பரிணாம வேகத்தால் தோன்றியுள்ள கோடானுகோடி உடலுருவங்களிலும், அறிவிலும், அங்க அமைப்பிலும், திறமையிலும் சிறந்த மனிதர்கள், நலமுடன் வாழ்வதற்கு இயற்கையாகவும், செயற்கையாகவும் பலவிதமான வசதிகள் இருக்கும்போது பொன்னையும், பொருளையும் மாத்திரம் பெரிதாக நினைவில் கொண்டு ‘நான்-எனது’ என்ற குறுகிய நோக்கத்தாலும், மனிதர் உண்மையாகப் பண்போடு வாழ, எது தேவை? எது தேவையில்லை என்னும் ஆராய்ச்சியில்லாமையினாலும், பல அழிவுக் கருவிகளையும் அணுக்குண்டையும் கூட, கண்டுபிடித்து வாழ்வில் அச்சத்தைப் பெருக்கிக்கொண்டார்கள்.

    உருவத்தால் பல வேறுபாடுகள் இருந்த போதும், உயிர், அறிவு, இயற்கை, இன்பதுன்பம் என்னும் நிலையில் அனைவரும் ஒன்றே என்று அறிந்து கொள்ளத்  திறமை யூட்டும் ஆன்மீக ஞானத்தை தன்னறிவு விளக்கத்தை-மனிதர்கள் பெற வேண்டும்.

    அதற்கேற்றபடி ஒருவருக்கொருவர் சாதகமான முறையில் எண்ணம், சொல், செயல்களைப் பிரயோகித்து, ஒற்றுமையாய் வாழத் தகுந்த ஒரே உலக ஆட்சி ஏற்படுத்தி, எதிர்நோக்கி நிற்கும் அபாயங்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

     
உலக சமாதானப் பாடல் – 18         தொடரும் ....

WORLD PEACE POEM – 17 LIBERATION FROM SELFISHNESS

https://m.facebook.com/story.php?story_fbid=600003047524898&id=100025456231980

WORLD PEACE POEM – 17
LIBERATION FROM SELFISHNESS

     By natural providence man is blessed with a worthy body and valuable knowledge. The resources for life on earth are surplus, but selfishness and temperamental moods developed by unchecked ego are spoiling the life.

     In fact, the life and knowledge of man are fractional functions of Universe. The physical body is given birth, raised, nurtured, given protection and educated by society. By forgetting the part played by nature and society in his existence man separates himself from others over the possession of wealth, strength, education, power and influence. By such short-sighted conditioning and vanity two psychic attitudes. ‘I’ and ‘Mine’ stands to posses more and more materials and properties. These two psychic channels give birth to six temeperaments : 1) Greed, 2) Anger, 3) Miserliness, 4) Immoral Sexual Passion, 5) Inferiority / Superiority Complex, and 6) Vengeance. Any deed committed by man under these temperaments will result in only pain and miseries to self and others.

     It is a question  in the minds of many intellectuals as to why such ego and its temperaments emerge and give trouble to man.

     Let me explain. Everything in the Universe is the fraction of Totality, the Universal Being. In man the fractional consciousness has the potential to develop to its fullness to get identified with the Totality, Rarely some persons get automatic development of consciousness by a proper way of life. For others who are bound with material attachment someone should induce the consciousness to develop in the right direction. Otherwise the inherent force of consciousness is directed only in excessive attachment to material enjoyment. Thus the natural force of consciousness gets stagnation for lack of proper guidance into two split lines; one towards power and the other towards possession. When a spiritual Master gives the opportunity to the human consciousness to do inner travel and introspection in the proper age, the obstruction is removed and diversion of consciousness rectified to go towards the goal of protection.

     The obstruction, stagnation, and diversion of consciousness in its evolutionary journey have resulted in ego and the six temperamental moods causing all kinds of ruination to humanity, culminating in the danger of atomic weapons. Only a World Federation formed by all countries will be the proper solution for mankind.


Poem No.18 will continue…….

Tuesday, 10 March 2020

World Peace Poem :16 Best use of force and knowledge

https://www.facebook.com/100025456231980/posts/597069844484885/

WORLD PEACE POEM – 16
BEST USE OF FORCE AND KNOWLEDGE

     Rain pours sufficiently in season and the flood of water may be forceful. We build dams and store the water and use it properly for irrigation and other facilities of life. By such planned action we are able to control the flood to a great extent to benefit people and agricultural lands. Yet, like a flood, the physical and mental forces of mankind are flowing in chaos without control or streamlining. The results are disturbances, problems, pains and miseries. We have to build a reservoir to store the valuable labour forces and intellectual forces of mankind so as not to go waste or astray. Also we have to channel them by proper planning to streamline the forces in creative ways. Then only the fields or religion, health, economics, politics and science will do good to the people, maintaining their serenity and purpose.

     Clear knowledge about the energy particle. “AKASH”, is science. If we understand energy particle and its phenomenal activities clearly, we can realise about the two inherent forces in the energy particle (i.e) attraction and repulsion. Because of the association of the energy particles, various masses and the magnetism in the masses gets developed. That magnetism only gets transformed as Pressure, Sound, Light, Taste, and Smell. According to their ratio of combination, all the actions, shapes, masses, living etc., do result in.


Poem No.17 will continue…….

உலக சமாதான பாடல் : 16 'அறிவு, உடல் ஆற்றல்களைப் பயன்படுத்துதல்'

https://m.facebook.com/story.php?story_fbid=597060121152524&id=100025456231980

உலக சமாதானம்
முதற் பாகம்
பாடல் : 16   –  அறிவு, ஆற்றல்களைப் பயன்படுத்துதல்

  வெறிபோன்று பாய்ந்து ஓடும் நதிவெள்ளத்தின்
    வேகத்தை, அணைக்கட்டி பயன் கொள்ளல்போல்,
  பொறி புலன்களில்  சிறந்த மனிதர் ஆற்றல்,
    புத்தி நுட்பம், கூட்டுறவால் ஒன்று சேர்த்து,
  அறிவோடு சுகாதாரம், பொருளாதாரம்,
    ஆட்சி முறையால் உயர்த்தி, உலகோர்  எல்லாம்,
  நெறியாக அன்பு, இன்பம், அமைதியோடு
    நில உலகில் வாழாவைக்க ஒத்துழைப்பீர் .

    பயங்கரமான வேகம் கொண்டு பாயும் நதியின் வெள்ளத்தை, அணைகள் மூலம் தடுத்து ஒரு தக்க இடத்தில் தேக்கி, அந்தத் தண்ணீரை நமக்கு வேண்டிய இடத்திலும், நமக்கு வேண்டிய அளவிலும் உபயோகித்தும் பயன் பெறுகிறோம். புலன்கள், உடற் கருவிகள், அறிவின் ஆற்றல் என்ற இவற்றில் சிறந்த மனிதர்களின் உடல் பலமும் அறிவின் நுட்பமும் இக்காலத்தில் கவலையில்லாது ஓடிப் பாயும் வெள்ளம்போல் பல்வேறு துறைகளில் அழிவைச் செய்து விடுகிறது. அவைகள் அவ்வாறு செய்யாது, வாழ்க்கைத் துறைகளாகிய மனோதத்துவம், சுகாதாரம், பொருளாதாரம், அரசியல், விஞ்ஞானம்  என்ற ஐந்து துறைகளிலும் நன்றாகப் பயன்படும்படிச்  செய்து, அப்பயங்களின் உதவியால் உலக மக்கள் அனைவரையும் நீதி, அன்பு, அமைதி, இன்பம் என்னும் குறிக்கோளுடன் வாழச்  செய்ய முயற்சி செய்வோம்.
*மனோதத்துவம் என்றால் என்ன?*
  உடலில், அரூபமாய் நல்லது-கெட்டது, இன்பம்-துன்பம், உயர்வு-தாழ்வு, விருப்பு-வெறுப்பு என்பன உணர்ச்சிகளாய் மனத்திலே எழுகின்றன. அறிவின் பண்பாட்டினால் இவையனைத்தும் கடந்த நடுவு-நிலைமையும், அந்த மனத்திலேதான்  ஏற்படுகின்றது.

கடந்தகால, எதிர்கால, சம்பவங்களை யூகித்துப் பார்த்து அறிவின் இயல்பு, இருப்பிடம், இயக்கம் என்பனவற்றை நன்றாய் உணர்ந்து, அறிவின் மூலமும் முடிவும், அதன் இயல்பினையும் செவ்வனே உணர்ந்து, வளர்த்துப் பயன்படுத்தும் கலைதான் மனோதத்துவம் ஆகும்.

  *சுகாதாரம்*
  உடலின் உற்பத்தி, இயக்கம், வளர்ச்சி, தளர்ச்சி என்ற இவைகளிலும், கருவமைப்பு, ஆகாரம், செயல்கள், எண்ணங்கள் என்ற இவைகளினாலும், வெட்ப தட்ப தாக்குதல், சந்தர்ப்ப மோதல் என்ற இவைகளாலும், நம் உடலிலுள்ள ரசாயனங்கள் மாற்றமடைகின்றன. இவைகளால் நம் உடல் ரசாயனங்கள் அளவிலும் செறிவிலும் குறைந்து விடுகின்றன. அல்லது அதிகரித்து விடுகின்றன. அவைகளால் ரத்த ஓட்டச்  தன்மையும், அதனால் ஏற்படும் உடலியக்க அறிவியக்க நிலைகளும் மாற்றமடைந்து விடுகின்றன. இத்தகைய மாற்றங்களைச் செயற்கை முறைகளினால் தகுந்தபடி சமநிலைக்குக் கொண்டுவரும் முயற்சியே மருத்துவமாகும். அளவுக்கு மிஞ்சி ஏற்பட்டிருக்கும் ரசாயன அதிகரிப்பையும், இரத்த ஓட்டத்தையும், இரத்த ஓட்ட தளர்ச்சியையும்-மருந்து, உணவு, பட்டினி, நீராடல், ஓய்வு, உடற்பயிற்சி முதலியவற்றால் சமநிலைக்குக் கொண்டு வரும் முயற்சியே சுகாதார முறை எனப்படும்.

*பொருளாதாரம்*
  மனிதர் வாழ்வதற்கு அவசியமான உணவு, இடம், உடை முதலியவைகளையும், இயற்கையில் ஏற்படும் துன்பங்களை எதிர்க்கும் பல வசதிகளையும், உற்பத்தி செய்தல், சேமித்தல், பாதுகாத்தல், நிரவுதல், அனுபவித்தல்  என்பன எல்லாம் சேர்ந்த ஒன்றே பொருளாதாரம் எனப்படும்.

*அரசியல்*,
  பொதுவாக எல்லோருக்கும் வாழ்க்கையின் இன்பத்தைப் பாதுகாக்கவும், அதிகரிக்கவும், துன்பத்தைக் குறைக்கவும்-போக்கவும் திட்டமிட்டுச் செயலாற்றவும் தனி மனிதனால் ஆகாத காரியத்தைப் பலரின் சக்தி கொண்டு நிறைவேற்றவும், பலமுடையான் பலமில்லானைத் துன்புறுத்தாதபடி பாதுகாக்கவும், ஏற்படுத்திக் கொண்ட கூட்டு வாழ்க்கை ஒப்பந்தமே-கட்டுப்பாடு விதிமுறைகளே அரசியல்.

*விஞ்ஞானம்*
  விண் என்றால் அணு, ஞானம் என்றால் அறிவு. விஞ்ஞானம் விண் + ஞானம் அணுவின் தத்துவம் அறிந்து கொண்ட அறிவின் தெளிவே விஞ்ஞானம்.    அணுவையும், அணுவின் தத்துவத்தையும் அறிந்தால், அணுவில் உள்ள எழுச்சி கவர்ச்சி எனும் சக்தியை அறியலாம். அணுக்கள் ஒன்றுடன் ஒன்று, பலவுடன் பல கூடுவதால் உருவங்களும் அவற்றில் காந்த சக்தியும் ஏற்படுகின்றது. அக்காந்த சக்தியே ஒலியாய், ஒளியாய், வெட்பதட்ப மாறுபாடுகளாய், குவிதல், பரவுதல், கவர்தல், விலகுதல், கூடுதல், பிரிதல் என்னும் பல்வேறு இயக்கங்களாகி, அதன் விளைவாக ஒவ்வொரு பொருளிலும் ரசாயனம் தோன்றி கூடி – குறைந்து – மாறி உருவங்களாய், உலகங்களாய், பல கோள்களாய், பொருட்களாய், ஜீவராசிகளாய் உருவாகி இருக்கும் இயல்பறிந்துகொள்வதே விஞ்ஞானம் எனப்படும். 



உலக சமாதானப் பாடல் – 17         தொடரும் ....

உலக சமாதானப் பாடல் :16 - 'ஆற்றல்களைப் பயன்படுத்துதல்' புதுமுயற்சியாய் கலந்துரையாடல் : தாயும் மகளும். பேரா.கோதை கோவிந்தராஜன் அம்மா மற்றும் து/பேரா.அனிதா சங்கர் அம்மா.

https://m.facebo

Friday, 6 March 2020

World Peace Poem :15 'An appeal to all Leaders'

https://www.facebook.com/100025456231980/posts/594265731431963/

WORLD PEACE POEM – 15
AN APPEAL TO ALL LEADERS

     Oh research scholars, enlightened brothers and sisters, leaders of political administrations and religions! Hear me! Think about the ruination of men and materials in the past wars. How horribly the victims of wars suffered on both sides. Never did a war bring permanent peace to any nation. By suppression, inability and fear brought by the barbarous war, peace may temporarily prevail. What is the eventual result? On one side the winner will develop ego and prepare his country for another ferocious war; on the other side, the victims who were defeated with an incurable wound of hatred will be preparing to attact their enemy with vengeance. Where is the end? The end is onlyto humanitarian behaviour!

     Therefore for the modern age the policy of governments fighting with other governments must be changed from habit to wisdom. For this achievement, all nations should join and establish one World Federal Government to safeguard the welfare of all nations and people.


Poem No.16 will continue…….

உலக சமாதான பாடல் :15 - 'உலக அறிவாளிகளே ஒன்று சேருங்கள்'

https://www.facebook.com/100025456231980/posts/594259958099207/

*உலக சமாதானம்*
*முதற் பாகம்*                *பாடல் : 15   –  உலக அறிவாளிகளே  ஒன்று சேருங்கள்*

    ஆராய்ச்சியுடையோர்கள், அறிஞர்கள், நல்
      அரசியலார், மதத்தலைவர், அனைவோர் கேளீர்!
    போராட்சிமுறை ஒன்றால் இது வரைக்கும்
      பூவுலகில் மனிதர்கண்ட துன்பம் ஆய்வீர்!
    வீராப்புப்பேசி சில வீணர் இப்போ
       விஞ்ஞான முறையில் அழிவைக் கண்டுள்ளார்!
    “ஓராட்சி” உலகிணைந்து வகுத்தாலன்றி ,
      உலக சமாதானமில்லை. விளைவு என்னாம் ?

    ஆராய்ச்சியுடையோரே, அறிவாளிகளே, அரசியல் நிபுணர்களே, கட்சித் தலைவர்களே, மதங்களின் தலைவர்களே, அனைவரும் கவனியுங்கள்.

    தன் நாட்டைப் பாதுகாக்கவும், பிற நாட்டைத் தாக்கவும், ராணுவத்தால் ஆட்சியைப் பலப்படுத்திக் கொண்டு யுத்தம் என்ற பலாத்கார-அநாகரீக நம்பிக்கை முறையைக் கையாளுகிற அரசியல் முறையால் உலகில் எல்லா நாடுகளிலும் மனிதர்கள் இதுவரையில் பட்ட துன்பங்களையும் எண்ணற்ற நாடுகளும், பொருள்களும், மக்களும், உயிரினங்களும் அழிவுற்றதையும் நினைவுக்குக் கொண்டு வந்து ஆழ்ந்து ஆராய்ந்து பாருங்கள். பகை நாடுகள் நம்மைத் தாக்கி விடுமே என்ற பயத்தினாலோ, அறியமையாலோ, தங்களிடம் செலவபலம், ஆயுதபலம், ஆள்பலம், படைபலம் இவைகள் அதிகமாக இருக்கின்றன என்ற தன்முனைப்பினாலோ, அயல் நாடுகளைச் சமயம் வாய்த்தால் தாக்க, எதிர்க்க, விஞ்ஞான முறையிலே அழித்து விட, அணுகுண்டு முதலான பயங்கர விளைவுகளைத் தரும் ஆயுதங்களைத் – கருவிகளை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

    அறிவறிந்த மனித இனத்தின் வாழ்க்கைத் தத்துவமறிந்த அறிவாளிகள், இயற்கைத் தத்துவமறிந்த விஞ்ஞானிகள், பிறப்பு-இறப்பு, உடல் இயக்க ரத்த ஓட்ட வளர்ச்சி-தளர்ச்சி, வியாதி-சுகம் என்ற இவைகளை அறிந்த நிபுணர்களான வைத்தியர்கள், மனித இனக்கூட்டு வாழ்க்கைத் தத்துவமறிந்த அரசியல் தலைவர்கள், மனித இன வாழ்விற்கு அவசியமான பொருள்களின் தேவை அளவு, உற்பத்தி முறை, சேகரம், பங்கீடு என்ற இவைகளைப் பற்றி உணர்ந்திருக்கும் பொருளாதார நிபுணர்கள் அனைவரும் ஆங்காங்கு கூடி ஆலோசனை செய்து, உலகம் பூராவிலும் உள்ள மனிதர்கள் ஒரே ஆட்சியின் கீழ் அச்சமின்றி சுதந்தரமாக வாழும் முறை ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.

    இத்தகைய ஒரு ஆட்சியை ஏற்படுத்துவதில் தவறினாலும், தாமதித்தாலும் உலகில் யுத்தம் வந்தே ஆகி விடும். அப்படித் தோன்றிவிட்டால், இன்றைய நிலையில் எந்த அளவில் கொடுமைகளை உலக மக்கள் அனுபவிக்க நேரிடும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

    மனிதன் என்ற முறையில் உலகில் உள்ள ஒவ்வொருவரும் இதைப் பற்றிச் சிந்தித்தே ஆக வேண்டும்.


*உலக சமாதானப் பாடல் – 16         தொடரும் ....*

உலக சமாதான பாடல் :14 'மனிதனின் முன்னேற்றம்'

https://www.facebook.com/100025456231980/posts/592895588235644/

*உலக சமாதானம்*
*முதற் பாகம்*
*பாடல் : 14   –  மனிதனின் முன்னேற்றம்*

    விருப்பு வெறுப்பு உணர்ச்சி மிக்க மனிதன், அன்று
      விலங்குகளைப் போல், காட்டில் குகையில் வாழ்ந்தான்.
    நெருப்பு கண்டபின், வாழ்வில் வேகம் கொண்டான்.
      நேற்று இன்று நாளை என்றான். பொருள் சேமித்தான்.
    துருப்பிடிக்கும் இரும்புடன் மின்சாரம் கண்டு,
      துரிதமாக வாழ்வில் முன்னேற்றம் கண்டான்.
    திருப்பம் வந்துளது அணுக்குண்டால் வாழ்வில்
      தீர்க்க இவ்வபாயத்தை முயற்சி செய்வோம்.

    விருப்பு வெறுப்பு உணர்ச்சிகளில் அதிக வன்மையும், வேகமும் உடைய மனிதன், விலங்குகளைப் போல்,  காட்டிலும் குகையிலும் வாழ்ந்திருந்த காலம் உண்டு.

    நெருப்பைக் கண்டு பிடித்து, அதை உபயோகிக்கக் கற்றபின், வேகவைத்து ஆகாரம் உண்ணக் கற்றுக் கொண்டான். செயற்கையில் ஒளி ஏற்படுத்திக் கொண்டான். நேற்று இன்று நாளை எனக் கடந்த, நிகழ், எதிர், காலங்களை சுட்டும் முன்னேற்றம் அடைந்தான். பொருட்களைச் சேமித்தல், பாதுகாத்தல் என்பனவற்றையும் கற்றுக் கொண்டான்.

    இரும்பையும் மின்சாரத்தையும் கண்டுபிடித்த பின், பல துறைகளிலும் வேகமாக முன்னேறி வாழ்வை வளமாக்கிக் கொண்டான். அறிவு மேலும் உயர்ந்து அனுசக்தியைக் கண்டுபிடித்த பின், வாழ்வில் முன்னேறிக் கொண்டே இருக்கும் பாதையில், ஒரு திருப்பம் வந்திருக்கிறது.

    அதாவது அவன் அடைந்த முன்னேற்றங்கள்  யாவும் பயனற்றே போகும் அளவுக்கு அனுசக்தியைத் தவறாக மனித இன வாழ்விற்கும் பாதகமாக உபயோகிக்க ஆரம்பித்து விட்டதால், மனித இனமே அழிந்து விடக் கூடிய அபாயம் தோன்றிவிட்டது.

    இத்தகைய விபரீத விளைவுகளைத் தடுத்து மனித இனத்தைக் காப்பாற்ற எல்லோரும் பேரு முயற்சி கொள்ள வேண்டும்.


*உலக சமாதானப் பாடல் – 15        தொடரும் ....*

World Peace poem :14 'Progress of Mankind'

https://www.facebook.com/100025456231980/posts/594187118106491/

WORLD PEACE POEM – 14
PROGRESS OF MANKIND

     Man began his life with the changing experiences of pain and pleasure. With the ambition of enjoying sensory pleasure more and more, accordingly he had to face pains and miseries. By practical experiences or by imaginary expectations of pain and pleasure he developed the mental attitudes of liking something, some actions and some persons, and hating something, some actions and some system, man lived in caves and jungles as did other animals.

     When man found fire for overcoming the cold and for cooking, his life became a little more comfortable. After discovering metals and electricity and their application, a great change came in his life to enjoy comfort and withstand natural forces and climatic fluctuations. His knowledge advanced towards sciences to utilise natural resources for better living. Then only he learned to count the days and have developed very much to help us enjoy life to the full extent. A great danger has developed by atomic poisons and bombs. Mankind must be saved from this kind of danger, otherwise all the advancement of sciences, knowledge and resources can be destroyed in minutes. No man in the world will be spared. So all people jointly should take immediate steps to avoid the dangers of atomic poisons.


Poem No.15 will continue…….

உலக சமாதான பாடல் :15 'உலக அறிவாளிகளே ஒன்று சேருங்கள்' - பேரா.கோதை கோவிந்தராஜன் அம்மா அவர்கள்