Thursday, 25 April 2019

தினம் ஒரு மாற்றம்

*வாழ்க வையகம்!*
*வாழ்க வையகம்!*
*வாழ்க வளமுடன்!!*

*தினம் ஒரு மாற்றம்*
*(24/04/2019)*

நேரடியாக தன்னை, தனது தவறுகளை சரி செய்து கொள்ளும் வாய்ப்பு தான் ஒவ்வொரு மனிதப்பிறவியும்.

Face book app, Whats App, இது இரண்டில் சில வேறுபாடுகள் உண்டு.

Public post - இல் பலபேர் பார்ப்பார்கள்.  ஒரு பதிவு அனுப்பிவிட்டால் அதில் சில பிழைகளை திருத்த  வேண்டும் என்றால்...
FB - இல் நாம் அனுப்பிய பதிவில் திருத்தம் மேற்கொள்ள corrections சரி செய்து கொள்ள,  'Edit post' option இல் திருத்தியமைத்துக் கொள்ள முடியும்  நேரடியாகவும், உடனடியாகவும். அதன் பின்பு திருத்தப்பட்ட பதிவாக அதில் பதிவு மாற்றம்பெற்றுவிடும்.   ஆனால் Whats App இல் அப்படி முடியாது. அதில்  delete for everyone option பயன்படுத்தி  அந்த பதிவை அழித்து விட்டு தான் சரி செய்ய முடியும்.. நேரடியாக அதை பிழைதிருத்தியமைக்க முடியாது.

இப்படித் தான் மனிதர்கள்  உடனடியாகவும், நேரடியாகவும்,  FB Edit option  போல் தன்னை நேரடியாக, தன்னை தனது தவறுகளை  சரிபடுத்திக் கொள்கிறார்கள் யோக மார்க்கத்தின் மூலமாக. முழுமைப்பேற்றை பெறுவதற்கு ஒரே பாதையை தேர்ந்தெடுக்கிறார்கள்.

சாதாரண மனிதர்கள் பல பிறவிகளைத் தொடர்ந்து, Delete for everyone option போன்று உயிர் அழித்து அழித்து ,  பல பிறவிகள்  எடுத்து இறுதியாக  யோக மார்க்கத்திற்கு வருகிறார்கள். முழுமையை  எய்துகிறார்கள்.

பல பிறவிகள் இப்படித் தான் நேர்கிறது . தான் வந்த நோக்கம் உணர்ந்தால்... தன்னை... தனக்குள் இருக்கும் இறைநிலையை உணர... யோக வழிக்கு குரு தானாகவே வருவார். அதற்கான தூய்மை மனதில் கொண்டால் போதும். தன்னை மாற்றிக் கொள்ளவும் தன்னை ஏற்றுக் கொள்ளவும் மனம் வந்தால் போதும்.

அன்புடன் ஜே.கே

Tuesday, 23 April 2019

தினம் ஒரு மாற்றம்

*வாழ்க வையகம்!*
*வாழ்க வையகம்!*
*வாழ்க வளமுடன்!!*

*தினம் ஒரு மாற்றம்*
*(22/04/2019)*

அநாகதம் : ( Thymus Gland )
அநாகதம் நான்காவது சக்கரம். இது பஞ்சபூதத்தில் காற்றுக்குள்ள இடம்.
இந்த ஆதார மையமானது நமது கழுத்திற்கு கீழே இதயத்திற்கும், நுரையீரலுக்கும் நடுவில் சுழிமுனை நாடியில் அமைந்திருக்கிறது.

இதற்கு இருதயச் சக்கரம் என்ற என்கிற பெயரும் உண்டு. மார்பின் மையத்தில், இருதயம் உள்ள பகுதியில் இது இருப்பதால்  அன்பு, பாசம், இரக்கம், சகோதரத்துவம், விசுவாசம், பக்தி, ஆகிய அனைத்து நல்லியல்புகளின் சாத்வீக குணங்கள் மேம்படும்.  படைப்பாற்றலின் ரகசியமும் புரியவரும்.

தைமஸ் சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. இருதயம், நுரையீரல்கள்,இரத்த ஓட்டம், கல்லீரல்,ஆகியவையும் இதன் ஆதிக்கத்தில் இருக்கின்றன.
அனாகத சக்கர இடத்தை மனதில் இருத்தி மூல மந்திரத்தை தொடர்ந்து உருவேற்றி வர மணிப்புரக சக்கரத்திலிருந்து குண்டலினி எழும்பி, அனாகதம் வந்தடையும்.

இதன் மூல மந்திரம் 'யம்மம்' ----சுட்டுவிரல். காற்றுக்குரிய முத்திரை விரல்.

இதில் மனதை இருத்தி தவமியற்றுவதால் கிடைக்கும் பலன்கள்:

1) மனோதிடம், செயல் ஆர்வம், தைரியம், தன்னம்பிக்கை, திறமை ஆகியவை பெருகும்.

2)புலன்களுக்கு அப்பலான அறிவு இங்கும் ஏற்படுகிறது. ( Extra sensory Perception)

3)தூரக்காட்சிகள், எண்ணத்தை அறிதல், உள்ளுணர்வு ( Intuition), உள்ளிருந்து பேசுவது, புதியன கண்டுபிடிக்கும் ஆர்வம், ஊக்கம் ஆகியவை பிறக்கின்றன.

4) பயம், கோழைத்தனம், தாழ்வு மனப்பான்மை நீங்குகிறது.

5) எண்ணங்களை ஆராயும் ஊக்கமும், சரியான முடிவைத் தீர்மானிக்கும் துல்லியமான நுட்ப அறிவும், அம்முடிவை செயலுக்குக் கொண்டு வரும் உறுதியும், திறமையும் ஏற்படுகின்றன.

6) Thymus Gland ஊக்கம் பெறுகிறது. வீரம் உண்டாகிறது.

இந்த சுரப்பி பாக்டீரியா, வைரஸ், பூஞ்சக் காளான்கள், புற்றுநோய் செல்கள் போன்றவற்றை எதிர்த்து அரணாக நின்று பாதுகாக்கும் தன்மை கொண்டதால் இதை நோய் எதிர்ப்புக் காவலன் எனக் கொள்ளலாம்.

இதிலிருந்து சுரக்கும் Thymocin .எனும் Hormone இரத்த ஓட்டத்தில் கலந்து உடலில் உள்ள அத்தனை உறுப்புகளின் நோய் எதிர்ப்புத் தன்மையைத் தூண்டிவிடும்.

அன்புடன் ஜே.கே

Saturday, 20 April 2019

தினம் ஒரு மாற்றம்

*வாழ்க வையகம்!*
*வாழ்க வையகம்!*
*வாழ்க வளமுடன்!!*

*தினம் ஒரு மாற்றம்*
*(20/04/2019)*

இயல்பாக இருப்பவர்கள் என்றுமே இயல்பாகவே இருக்கிறார்கள். அவர்களின் உண்மைநிலை எதையுமே அன்பாக வெளிப்படுத்துவதாகவே இருக்கும். அதில் களங்கம் இருக்காது. இன்னொரு முகத்திரை அவர்களுக்குத் தேவையே படாது..

ஆனால் பொய் முகங்களை.. தனது இயல்புக்கு மேலே முகமூடிகளாக அணிந்திருப்பவர்கள்.. அதையே பழக்கி பழக்கிப் அதுவே மெய் என நம்பி தனது இயல்புநிலையை மறந்து போய் விடுகிறார்கள்.

மெய்யும், பொய்யும் புரிவதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. புரிதலை சரியாக புரிந்து கொள்ளும் மனநிலையான பக்குவநிலை வருவதற்கும், அதை உணர முயற்சிப்பதற்கும் இடைவெளி தேவையாகிறது.

காலம் ஒன்று மட்டுமே அதற்கான விடை கூறும்.

மெய்யை மெய்யாக உணரும் தன்மை என்று பெறுகிறார்களோ அன்றே தன்னை உணரும் தன்மை பெறுவார்கள்.

அப்பொழுது தனது அகத்தின் பிரதிபம்பம் மெய்யாய் கண்ணாடியில் பிரதிபலிக்கும்.

பொய் முகத்திரைகளான போலி முகங்கள் அங்கே தெரியாது. மறைந்து போகும்.

இத்தனை நாள் செய்த செயல் விளைவும் புரிய வரும். வரப்போகும் செயலின் தன்மைகளும் அதன் விளைவுகளும் உணர முடியும்.

அன்பே சிவம். இவ்வுலகம் அனைவரின் ஒற்றுமையையே நாடுகிறது. நட்புணர்வை வெளிப்படுத்தவே முயல்கிறது. வெறுப்புணர்வை அல்ல.

சாதி மதம் இனம் மொழி கடந்த மனிதம் அனைவருக்குள்ளும் இயல்பாகவே தாய்மையாக வெளிப்படும் காலம்  வந்துவிட்டது. உலக அமைதி நம்மருகே காத்துக்கொண்டிருக்கிறது. அதை வரவேற்க இரு கரங்களையும் நீட்டி அளவளாவிக் கொள்ள தயாராக இருப்பது அனைவரின் கனிவான வார்த்தைகளில் உள்ளது.

அன்புடன் ஜே.கே

Wednesday, 17 April 2019

தினம் ஒரு மாற்றம்

*வாழ்க வையகம்!*
*வாழ்க வையகம்!*
*வாழ்க வளமுடன்!!*

*தினம் ஒரு மாற்றம்*
*(17/04/2019)*

நம் நாட்டில் அனைத்து வளங்களும் இருப்பாகவே, உபரியாகவே உள்ளது. ஒவ்வொருவரின் எதிர்மறை எண்ண அலைகளால் இருப்பை இல்லாதது போல் ஒரு மாயையை உண்டு பண்ணுகிறது மனித மனம் தான்.

இயல்பை உணரும் காலம் வந்துவிட்டது.. தனக்குள் இருக்கும் தெய்வீத்தை மனித மனம் உணரத் தொடங்கி விட்டது. இனி இறையுணர்வுடனும் அறநெறியுடனும் வாழவே முற்படுகிறான் மனிதன். நியாயம், அநியாயம், உண்மை, பொய், எது என்பது புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டார்கள் மக்கள்.

மக்கள் வளமாக, நலமாக, வாழ என்ன வேண்டும் என்று எண்ணத்தை சிந்தனையில் செதுக்க ஆரம்பித்து விட்டார்கள்  மனிதர்கள்.

இனி விழிப்புணர்வில் நின்று செயல்களாற்றும் திறம் தன்னுள் வந்துவிட்டதை உணர்கிறார்கள். 

எது வேண்டும் வேண்டாம் என்று இனங்கண்டு கொள்ள எந்த புலன் அனுபோகம் பெறும் பொழுதும் நினைவை துரியத்தில் வைத்து செயல்களாற்ற நன்மையே அனைவருக்கும் நடக்கும் என்ற நம்பிக்கை விதையை நம்பிக்கையோடு விதைக்கலாம்.

ஒரு விதை தரும் பயனை சில ஆண்டுகளில் மரமாகி காய் கனியாகி நிழலாக கிடைக்கும் போது மட்டுமே அது புரிய வருகிறது.. ஆரம்பத்தில் புரிவதில்லை. புரிந்து கொண்டு அறிவைக் கொண்டு செயல்படும் பொழுது இறைநிலை அனைத்து மக்களுக்கும் பாரபட்சமின்றி நன்மையே அளிக்கும்.

அன்புடன் ஜே.கே

Tuesday, 16 April 2019

அருட்தந்தையோடு அருளானந்தனின் அனுபவங்கள்

வாழ்க வளமுடன்

அருட்தந்தையோடு அருளானந்தனின் அனுபவங்கள்

பாகம் : 25

அறிவின் அலை மனம்

அறிவு சுத்தவெளியின் இயக்கநிலை என்பதால், அறிவைத் தன்னகத்தேக் கொண்டுள்ள சுத்தவெளியின் அலை 'மனம்' என்றும் கூறலாம். அருட்தந்தை அவர்கள் இந்த உண்மையைக் கீழ்க்காணும் சாமியத்தில் தெளிவுபடுத்துகிறார்கள்.

மனம் = அறிவின் நிலை
அறிவு = தெய்வத்தின் அலை
(இயக்க நிலை)

எனவே, மனம் தெய்வத்தின் அலை. இந்த சாமியத்திற்கான விளக்கத்தை கீழ்க்காணும் பாடலில் அளித்துள்ளார்கள்.

மனத்தின் அடித்தளம் இறைநிலை

அலையலையாய் இயங்கும் மனத்து அடித்தளமே நிலைப்பொருள்
அது தெய்வம் கடல் போன்று, அலை போன்றதே மனம்.

( ஞானக்களஞ்சியம் பாடல் எண்.1657)

எனவே, மனித அமைப்பில் உள்ள உடல், உயிர், மனம், அறிவு அனைத்தும் தெய்வம் என்பதை, "பேரின்ப ஊற்று" என்ற தலைப்பில்,
"இன்ப ஊற்றாய் நிறைந்த இறைவா" என்ற தொடங்கும் பாடலில் கீழ்க்காணுமாறு அருட்தந்தை அவர்கள் விளக்கமளிக்கிறார்கள்.

"உடலாய் எனை நினைந்தேன்! உணர்ச்சிகள் வருத்தின!
உடலுள் உயிராய் என்னை உணர்ந்து அறிவில் நிறைந்தேன்!
உடலுயிர் உடறிவாய் உன்னை உணர்ந்த போது,
உடலுயிர் அறிவு நீயாய்,
உணர்ந்துன்னுள் நானடங்க,
இன்ப ஊற்றாய் நிறைந்த இறைவா.

(ஞானக்களஞ்சியம் பாடல் எண் : 1646, பத்தி (stanza)-4)

எனவே, தெய்வமே தான் நம் ஒவ்வொருவரது, உடல், உயிர், அறிவு இவையாகத் தன்மாற்றம் பெற்றுள்ளது என்ற உண்மையை உணரும் ஒரு மனிதர், யாருக்கு ஒரு தீங்கு செய்தாலும், அது தெய்வத்திற்கு தீங்கு செய்வதாகும் என்ற உணர்வு பெறுவார். அத்தகைய மனிதரது மனதில் இரண்டொழுக்கப் பண்பாடு் இயல்பாக மலரும்.

தொடரும்......

அருட்தந்தையோடு அருளானந்தனின் அனுபவங்கள்

வாழ்க வளமுடன்

அருட்தந்தையோடு அருளானந்தனின் அனுபவங்கள்

பாகம் : 24

அன்பார்ந்த நண்பர்களே!

வணக்கம். வாழ்க வளமுடன்.

அருட்தந்தை அவர்களுடன் யான் பெற்ற புற அனுபவங்களை, தொடக்கத்தில் சில பாகங்களில் எழுதியிருந்தேன். அண்மையில் சில பாகங்களில், எனது வாழ்க்கையில் முதன் முதலாக அருட்தந்தை அவர்கள் மூலம் கிடைக்கப்பெற்ற அக (ஆழ்மன) அனுபவங்களை உங்களிடம் பகிர்ந்து கொண்டு வருகிறேன் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மனித வாழ்வின் நோக்கம் முழுமைப்பேறு. இதனை அடைவதற்காகவே அருட்தந்தை அவர்கள் அன்போடும், கருணையோடும் வழங்கியுள்ள மனவளக்கலை யோகாவைக் கற்று, நடைமுறையில் பயன்படுத்தி வருகிறோம்.

எனவே, மனித அமைப்பின் இன்றியமையாத சாதனங்களான (phenomena)
உயிர், மனம், அறிவு, தெய்வம் (இதுகாறும் விஞ்ஞானத்தில் விளக்கப்படாதவை) - இவற்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்ற அருட்தந்தை அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் யான் பெற்ற இன்பம் (பேரின்பம்) அனைவரும் பெற வேண்டுமென்ற பெரு நோக்கத்துடன் தான் இந்த 'அக' அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

மனதின் அடித்தளம் இறைநிலை

நமது உடலில் இயங்கிக் கொண்டிருக்கும் உயிரின் அமைப்பு, அதனுள் இடம்பெற்றுள்ள தெய்வம் (சுத்தவெளி), அறிவு, மனம் இவற்றைப் பற்றியும், இவற்றிற்கிடையேயானத் தொடர்பு குறித்தும் இதுகாறும் சிந்தனை மேற்கொண்டோம்.

இனி, மனித வாழ்விற்கு மிகவும் இன்றியமையாத சாதனமாகிய மனதுக்கும், தெய்வத்திற்குமிடையே உள்ள
தொடர்பு குறித்து அருட்தந்தை அவர்களின் விளக்கத்தைக் காண்போம்.

உயிரின் அமைப்பில் மூன்று சாதனங்கள் (அங்கங்கள் -phenomena) இருக்கின்றன என்பதை அறிவோம். இவற்றுள் உயிர் (உயிர்த்துகள்) என்ற சாதனத்தின் உட்பொருளாக இருப்பது சுத்தவெளிதான் என்பதையும், சுத்தவெளியின் சிறப்பு மிக்கத் தன்மையாகிய அறிவு தான் மனமாக (அறிவின் அலையாக) செயல்படுகிறது என்பதையும் இதற்கு முந்தைய பகுதிகளில் விளக்கம் பெற்றோம்.

மனத்தின் அடித்தளமாக எவ்வாறு தெய்வம் உள்ளது என்பதை நாளைய பதிவில் காண்போம்.

தொடரும்....

தினம் ஒரு மாற்றம்

*வாழ்க வையகம்!*
*வாழ்க வையகம்!*
*வாழ்க வளமுடன்!!*

*தினம் ஒரு மாற்றம்*
*(09/04/2019)*

குடும்பம் என்பது கணவன் மனைவி, குழந்தைகள் மற்றும் உறவுகள் ஒருவருக்கு ஒருவர் கொடுக்கும்  மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்வதே உறவுகளின் வலிமையாகும். ஒற்றுமையாகவும் உதவியாகவும்,  ஒருவருக்கொருவர் ஊக்கப்படுத்தி முன்னேற்றும் பாலமாக இருப்பதற்காகத் தான்.

குடும்ப அமைதிக்கு முதலில் பிணக்கில்லாத ஒற்றுமை வேண்டும். அந்த பிணக்கு என்பது அன்பினால் போக்க முடியும். பொறுமையை கடைபிடிப்பதாலும், பதிலுக்குப் பதில் பேசாமல் இருப்பதாலும், சங்கடம்  வராமல் இருக்க... சில வாக்குவாதங்களை உடனடியாக தவிர்ப்பதாலும்... சிக்கலை மேலும் பெரிதாக்காமல் இருக்க முடியும். 

குடும்ப உறவுகள்... நான், நீ, என்று போட்டி போடாமல் விட்டுக்கொடுத்து செல்வதும், வீட்டு விஷயங்களை நான்கு  சுவற்றுக்குள் பாதுகாப்பதும், குடும்ப நபர்களுக்கு அழகு.

குடும்ப நபர்கள் ஒவ்வொருவரும் குடும்பத்தில் உள்ளவர்களை மதித்து வாழ்வது.... அன்பு ஓங்கவும், நிலைக்கவும் ஒரு காரணமாக இருக்கும்.

வாழ்க்கையில் இனிமை வேண்டுமென்றால், முதலில் குடும்பத்தில் சுமுகமான நல்லுறவும், ஒற்றுமையும் ஒவ்வொருவரிடமும் வேண்டும்.

அற வாழ்க்கை என்பது ஒழுக்கம், கடமை, ஈகை ஆகும். இதை ஒருவர் கடைபிடித்தால்  எதையும் சமாளிக்கும் வல்லமை வரும். இது உண்மை நிலைக்க உதவும்.

அன்பும் அறனும் மட்டுமே இல்வாழ்க்கை சிறக்க வழிகள்.

அன்புடன் ஜே.கே

தினம் ஒரு மாற்றம்

*வாழ்க வையகம்!*
*வாழ்க வையகம்!*
*வாழ்க வளமுடன்!!*

*தினம் ஒரு மாற்றம்*
*(15/04/2019)*

பஞ்ச மகா பாதகங்கள் பொய், களவு, சூது, கற்பழிப்பு, கொலை அனைத்தும் பாவச் செயல். இதில் எதெல்லாம் அடக்கமாகிறது..?  பொய் பேசுவதும், செய்த தவறை மறைக்க பல பொய்கள், தவறான வதந்திகள் பரப்புவதும், பிறரைப்பற்றி கோள் பேசுவதும் , நேரில் கண்டமாதிரியே பேசுவதும், ...

சிறு வயதிலிருந்து தொடரும் பிறரது வீட்டு தோட்டத்து மரத்தில் மாங்காய் கொய்யா  உரிமையாளரிடம்... கேட்காமலேயே பறிப்பது போன்று செயல்கள், பெரியவர்களானாலும்... விளையாட்டாக பிறர் பொருளை மற்றும் சிலவற்றை கேட்காமலே எடுக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு.. அது தவறில்லை என்று நினைத்து திருட்டை அல்லவா செய்ய நேர்கிறது..?? பிறரின் அனுமதியோடு எதையும் பெற வேண்டும் என்ற அறிவு வர வேண்டும்.

பெற்ற தாய் தந்தையே ஆனாலும் பிள்ளைகளே ஆனாலும் கேட்காமல் எடுக்கும் பணம், பொருள், எதுவானாலும்  தவறாகும்.
கேட்டு எடுக்கும் பழக்கம் நல்லது. பிறர் பொருளுக்கும்/ நபருக்கும் ஆசைப்படாமல் வாழ்வதும், தன் சுய உழைப்பினால் ஈட்டுவதும் ஒருவரது கடமை.. இதில் யாருக்கு விலக்கு உண்டு...? குழந்தைகள், இயலாதவர்கள் ஊனமுற்றவல்கள்,  வயதில் முதிந்தோர்கள். அவர்களது உழைப்பைப் பெற்று வளர்ந்து அதை அவர்களுக்கு அன்பினால் திருப்பி தனது கடமையை  நன்றியுணர்வுடன் செய்ய வேண்டும்.

பணம் வைத்து ரகசியமாகவும், சட்ட விரோதமாகவும், எந்த  சூதாட்டமும் ஒரு   பாவச்செயல்.. சூது/ மது/ மாது  என்பது பிறர் அறியாமையை பயன்படுத்தி நயவஞ்சகமாக பணம், பொருள், மற்ற பிற தவறான செயலில் ஈடுபடுவதும்  அதில் வருமானத்தை சேர்ப்பதும் பாவமாகும். பிறர் குடும்பத்தை பிரிப்பதும்... இதில் அடங்கும். நேர்மையாக பொருள் ஈட்ட பழக்குதல் நலம். பெண்களை மதிப்பதும் நலம்.

பிறர் சுதந்திரத்தை பறித்து வலுக்கட்டாயமாக பலவந்தப்படுத்துவதும், வன்முறைகள் செய்வதும் மாபெரும் பாதகமாகும். துரோகச் செயலும் இதில் அடக்கம். கற்பொழுக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

உயிர்கொலை ..தீங்கு செய்பவர் அவரவருக்கான விளைவுக்கேற்பவே விளைவுகளை அனுபவிக்கிறார்கள். தண்டனை இறைநிலையால் மனிதன் மூலமே அளிக்கப்படுகிறது.. பாவச்செயலுக்கு தண்டனை மூலமாக முற்றுப்புள்ளி வைக்கப் படுகிறது. உயிர்களை மதிக்க பழக வேண்டும்.

பாதகச் செயலே பிறவிகளின் தொடருக்குக் காரணம். துன்பம் அனுபவிப்பதற்கும் காரணம்.

சிறிய/பெரிய  அளவில் செய்யும் தவறுகள் அதற்கேற்ற துன்பங்கள் பிறவிகளில் அனுபவிக்கிறார்கள்.. பாவங்கள் குறைந்து புண்ணியங்கள் மேலோங்கும் போது தன்னை அறிய முனைகிறார்கள். ஞான மார்க்கம் இங்கே தான் துவங்குகிறது.

அன்புடன் ஜே.கே

Tuesday, 9 April 2019

தினம் ஒரு மாற்றம்

*வாழ்க வையகம்!*
*வாழ்க வையகம்!*
*வாழ்க வளமுடன்!!*

*தினம் ஒரு மாற்றம்*
*(09/04/2019)*

குடும்பம் என்பது கணவன் மனைவி, குழந்தைகள் மற்றும் உறவுகள் ஒருவருக்கு ஒருவர் கொடுக்கும்  மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்வதே உறவுகளின் வலிமையாகும். ஒற்றுமையாகவும் உதவியாகவும்,  ஒருவருக்கொருவர் ஊக்கப்படுத்தி முன்னேற்றும் பாலமாக இருப்பதற்காகத் தான்.

குடும்ப அமைதிக்கு முதலில் பிணக்கில்லாத ஒற்றுமை வேண்டும். அந்த பிணக்கு என்பது அன்பினால் போக்க முடியும். பொறுமையை கடைபிடிப்பதாலும், பதிலுக்குப் பதில் பேசாமல் இருப்பதாலும், சங்கடம்  வராமல் இருக்க... சில வாக்குவாதங்களை உடனடியாக தவிர்ப்பதாலும்... சிக்கலை மேலும் பெரிதாக்காமல் இருக்க முடியும். 

குடும்ப உறவுகள்... நான், நீ, என்று போட்டி போடாமல் விட்டுக்கொடுத்து செல்வதும், வீட்டு விஷயங்களை நான்கு  சுவற்றுக்குள் பாதுகாப்பதும், குடும்ப நபர்களுக்கு அழகு.

குடும்ப நபர்கள் ஒவ்வொருவரும் குடும்பத்தில் உள்ளவர்களை மதித்து வாழ்வது.... அன்பு ஓங்கவும், நிலைக்கவும் ஒரு காரணமாக இருக்கும்.

வாழ்க்கையில் இனிமை வேண்டுமென்றால், முதலில் குடும்பத்தில் சுமுகமான நல்லுறவும், ஒற்றுமையும் ஒவ்வொருவரிடமும் வேண்டும்.

அற வாழ்க்கை என்பது ஒழுக்கம், கடமை, ஈகை ஆகும். இதை ஒருவர் கடைபிடித்தால்  எதையும் சமாளிக்கும் வல்லமை வரும். இது உண்மை நிலைக்க உதவும்.

அன்பும் அறனும் மட்டுமே இல்வாழ்க்கை சிறக்க வழிகள்.

அன்புடன் ஜே.கே

Monday, 8 April 2019

அருட்தந்தையோடு அருளானந்தனின் அனுபவங்கள்

வாழ்க வளமுடன்

அருட்தந்தையோடு அருளானந்தனின் அனுபவங்கள்

பாகம் : 23

சீவகாந்தம் எவ்வாறு உண்டாகிறது.?

நமது உடலில் உள்ள சுத்தவெளியில் தான் உயிர்த்துகள் வேகமாக சுழன்று கொண்டிருக்கிறது. எனவே, உயிர்த்துகளிலிருந்து வேகமாக வெளியேறும் விரிவலை, உயிர்த்துகளைச் சூழ்ந்துள்ள சுத்தவெளியில் உரசுவதனால், சீவகாந்தம் உண்டாகிறது.

எனவே, நிலைப்பொருளான சுத்தவெளியும் (தெய்வமும்), அலைநிலையில் உள்ள உயிர்த்துகளும் இணைந்தது தான் காந்தம்.

மனம் தோன்றுமிடம்

சீவகாந்தம் ஐந்து புலன்கள் மூலம் உடலை விட்டு வெளியேறும்போது அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் இவையாக ஐந்து தன்மாற்றங்கள் உண்டாகின்றன. எடுத்துக்காட்டாக, சீவகாந்தம் கண்கள் வழியாக வெளியேறும் போது ஒளியாகத் தன்மாற்றம் பெறுகிறது. இந்தத் தன்மாற்றம் நிகழும்போது, சீவகாந்தத்தின் நிலைப் பகுதியாகி சுத்தவெளி தன்னுள் அடங்கியுள்ள அறிவைக் கொண்டு, இன்பமோ துன்பமாக உணருகிறது.

இவ்வாறு அறிவு இன்பமோ, துன்பமோ அனுபவிக்கும்போது அறிவு, மனம் என அழைக்கப்படுகிறது.

எனவே, மனம், அறிவினது அலையெனவும், மூன்று நிலைகளில் செயல்படுகிறது எனவும் கீழ்க்காணும் பாடலில் அருட்தந்தை அவர்கள் தெளிவுப்படுத்துகிறார்கள்.

மதிப்புடைய அறிவியக்க நிலைகள் மூன்று.

மனம் என்பது அறிவினது செயல்பாடாகும்
மதிப்புடைய அறிவியக்க நிலைகள் மூன்று
மனம் புறமாய், புலன் மூலம் இன்ப துன்ப
மருட்சியிலே இயங்குநிலை ஒன்று; பின்னும்
மனம் கருவில் பதிவான வினைகள் தம்மை
மருவியுணர் நிலையொன்று, அதற்கு மேலாய்
மனம் உயிரை, உலகைக் கடந்தாதியான
மவுனநிலை நிற்பதொன்று ; உணர்ந்து கொள்வோம்

ஞானக்களஞ்சியம் பாடல் எண் : 1179

தொடரும்.....

Saturday, 6 April 2019

தினம் ஒரு மாற்றம்

*வாழ்க வையகம்!*
*வாழ்க வையகம்!*
*வாழ்க வளமுடன்!!*

*தினம் ஒரு மாற்றம்*
*(06/04/2019)*

ஸ்வாதிஷ்டான சக்கரம்

இது பஞ்சபூதத்தில் நீருக்குரிய இடம். இதை அட்ரினல் சுரப்பி என்று ஆங்கிலத்தில் கூறுவர்.

இங்கு நமது மகரிஷி அவர்கள் சிறிதளவு நேரமே தவம் இயற்றக் கூறுகிறார்கள். . இதை யாரும் சரியான முறையில் பயன்படுத்தினால், ஹார்மோன் சீராக சுரக்கும்.... கணைய நீர், பித்தநீர் உற்பத்தியை சரி செய்து சீராக இயங்கச் செய்கிறது. இரத்த ஓட்டம் சீரமைக்கிறது. ரத்த அழுத்தத்தை சமநிலையில் வைக்க உதவுகிறது. சுறுசுறுப்பாகவும், பிராணவாயு சீராக இருக்க உதவுகிறது.

தூண்டப்படும் இடம், தூண்டப் படும் பொருள் உணர்ச்சிக்குட்பட்டது என்றாலும் பாலியல் சக்தி இதில்தான் மையம் கொண்டிருக்கிறது. இந்த  சக்தியை புனிதமாகக் கருதுவோர் அதை தற்காத்துக் கொள்கிறார்ள்.  ஈகோவுக்கும் இந்த சக்திதான் காரணமாக இருக்கிறது.
மற்றவர்களின் மன அலைச்சுழலை உணரும் தன்மை இந்த சக்கரத்துக்கு உண்டு. ஐம்புலன்களை அடக்கி அறிகின்ற சக்தியும் இதிலிருந்து தொடர்கிறது. பாலியல் சுரப்பிகளின் மீது இது ஆதிக்கம் செலுத்துகிறது. உற்பத்தி உறுப்புகள், கால்கள்  இதன் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

சிறிதளவு தவமியற்றி அதன் செயல்பாட்டை சீராக வைத்துக் கொண்டும் காயகல்பம் பயிற்சியை செய்வதன் மூலம் பாலுணர்வு தூண்டுதலை சமன்படுத்திக் கொள்ளவும் கற்பொழுக்கம் ஓங்கவும், செய்ய முடியும்.

இந்த சக்கரத்தினால் விளைவும் நன்மைகளை மட்டுமே கவனத்தில் கொண்டு பயன்பெறலாமே! அதிகம் தூண்டப்படுவதற்குப் பதிலாக குறைந்த நேரம் தவமியற்றி தன்னை பாதுகாத்துக் கொள்ளலாமே.. சீரான இயக்கம் உணர்ச்சியை தூண்டுவதிலிருந்து தன்முனைப்பிலிருந்து (ஈகோ) காத்துக் கொள்ள முடியும். மன அமைதிக்கும் வழி வகுக்கும்.

அன்புடன் ஜே.கே