*வாழ்க வையகம்!*
*வாழ்க வையகம்!*
*வாழ்க வளமுடன்!!*
*தினம் ஒரு மாற்றம்*
*(20/04/2019)*
இயல்பாக இருப்பவர்கள் என்றுமே இயல்பாகவே இருக்கிறார்கள். அவர்களின் உண்மைநிலை எதையுமே அன்பாக வெளிப்படுத்துவதாகவே இருக்கும். அதில் களங்கம் இருக்காது. இன்னொரு முகத்திரை அவர்களுக்குத் தேவையே படாது..
ஆனால் பொய் முகங்களை.. தனது இயல்புக்கு மேலே முகமூடிகளாக அணிந்திருப்பவர்கள்.. அதையே பழக்கி பழக்கிப் அதுவே மெய் என நம்பி தனது இயல்புநிலையை மறந்து போய் விடுகிறார்கள்.
மெய்யும், பொய்யும் புரிவதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. புரிதலை சரியாக புரிந்து கொள்ளும் மனநிலையான பக்குவநிலை வருவதற்கும், அதை உணர முயற்சிப்பதற்கும் இடைவெளி தேவையாகிறது.
காலம் ஒன்று மட்டுமே அதற்கான விடை கூறும்.
மெய்யை மெய்யாக உணரும் தன்மை என்று பெறுகிறார்களோ அன்றே தன்னை உணரும் தன்மை பெறுவார்கள்.
அப்பொழுது தனது அகத்தின் பிரதிபம்பம் மெய்யாய் கண்ணாடியில் பிரதிபலிக்கும்.
பொய் முகத்திரைகளான போலி முகங்கள் அங்கே தெரியாது. மறைந்து போகும்.
இத்தனை நாள் செய்த செயல் விளைவும் புரிய வரும். வரப்போகும் செயலின் தன்மைகளும் அதன் விளைவுகளும் உணர முடியும்.
அன்பே சிவம். இவ்வுலகம் அனைவரின் ஒற்றுமையையே நாடுகிறது. நட்புணர்வை வெளிப்படுத்தவே முயல்கிறது. வெறுப்புணர்வை அல்ல.
சாதி மதம் இனம் மொழி கடந்த மனிதம் அனைவருக்குள்ளும் இயல்பாகவே தாய்மையாக வெளிப்படும் காலம் வந்துவிட்டது. உலக அமைதி நம்மருகே காத்துக்கொண்டிருக்கிறது. அதை வரவேற்க இரு கரங்களையும் நீட்டி அளவளாவிக் கொள்ள தயாராக இருப்பது அனைவரின் கனிவான வார்த்தைகளில் உள்ளது.
அன்புடன் ஜே.கே
No comments:
Post a Comment