Tuesday, 16 April 2019

அருட்தந்தையோடு அருளானந்தனின் அனுபவங்கள்

வாழ்க வளமுடன்

அருட்தந்தையோடு அருளானந்தனின் அனுபவங்கள்

பாகம் : 25

அறிவின் அலை மனம்

அறிவு சுத்தவெளியின் இயக்கநிலை என்பதால், அறிவைத் தன்னகத்தேக் கொண்டுள்ள சுத்தவெளியின் அலை 'மனம்' என்றும் கூறலாம். அருட்தந்தை அவர்கள் இந்த உண்மையைக் கீழ்க்காணும் சாமியத்தில் தெளிவுபடுத்துகிறார்கள்.

மனம் = அறிவின் நிலை
அறிவு = தெய்வத்தின் அலை
(இயக்க நிலை)

எனவே, மனம் தெய்வத்தின் அலை. இந்த சாமியத்திற்கான விளக்கத்தை கீழ்க்காணும் பாடலில் அளித்துள்ளார்கள்.

மனத்தின் அடித்தளம் இறைநிலை

அலையலையாய் இயங்கும் மனத்து அடித்தளமே நிலைப்பொருள்
அது தெய்வம் கடல் போன்று, அலை போன்றதே மனம்.

( ஞானக்களஞ்சியம் பாடல் எண்.1657)

எனவே, மனித அமைப்பில் உள்ள உடல், உயிர், மனம், அறிவு அனைத்தும் தெய்வம் என்பதை, "பேரின்ப ஊற்று" என்ற தலைப்பில்,
"இன்ப ஊற்றாய் நிறைந்த இறைவா" என்ற தொடங்கும் பாடலில் கீழ்க்காணுமாறு அருட்தந்தை அவர்கள் விளக்கமளிக்கிறார்கள்.

"உடலாய் எனை நினைந்தேன்! உணர்ச்சிகள் வருத்தின!
உடலுள் உயிராய் என்னை உணர்ந்து அறிவில் நிறைந்தேன்!
உடலுயிர் உடறிவாய் உன்னை உணர்ந்த போது,
உடலுயிர் அறிவு நீயாய்,
உணர்ந்துன்னுள் நானடங்க,
இன்ப ஊற்றாய் நிறைந்த இறைவா.

(ஞானக்களஞ்சியம் பாடல் எண் : 1646, பத்தி (stanza)-4)

எனவே, தெய்வமே தான் நம் ஒவ்வொருவரது, உடல், உயிர், அறிவு இவையாகத் தன்மாற்றம் பெற்றுள்ளது என்ற உண்மையை உணரும் ஒரு மனிதர், யாருக்கு ஒரு தீங்கு செய்தாலும், அது தெய்வத்திற்கு தீங்கு செய்வதாகும் என்ற உணர்வு பெறுவார். அத்தகைய மனிதரது மனதில் இரண்டொழுக்கப் பண்பாடு் இயல்பாக மலரும்.

தொடரும்......

No comments: