Monday, 8 April 2019

அருட்தந்தையோடு அருளானந்தனின் அனுபவங்கள்

வாழ்க வளமுடன்

அருட்தந்தையோடு அருளானந்தனின் அனுபவங்கள்

பாகம் : 23

சீவகாந்தம் எவ்வாறு உண்டாகிறது.?

நமது உடலில் உள்ள சுத்தவெளியில் தான் உயிர்த்துகள் வேகமாக சுழன்று கொண்டிருக்கிறது. எனவே, உயிர்த்துகளிலிருந்து வேகமாக வெளியேறும் விரிவலை, உயிர்த்துகளைச் சூழ்ந்துள்ள சுத்தவெளியில் உரசுவதனால், சீவகாந்தம் உண்டாகிறது.

எனவே, நிலைப்பொருளான சுத்தவெளியும் (தெய்வமும்), அலைநிலையில் உள்ள உயிர்த்துகளும் இணைந்தது தான் காந்தம்.

மனம் தோன்றுமிடம்

சீவகாந்தம் ஐந்து புலன்கள் மூலம் உடலை விட்டு வெளியேறும்போது அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் இவையாக ஐந்து தன்மாற்றங்கள் உண்டாகின்றன. எடுத்துக்காட்டாக, சீவகாந்தம் கண்கள் வழியாக வெளியேறும் போது ஒளியாகத் தன்மாற்றம் பெறுகிறது. இந்தத் தன்மாற்றம் நிகழும்போது, சீவகாந்தத்தின் நிலைப் பகுதியாகி சுத்தவெளி தன்னுள் அடங்கியுள்ள அறிவைக் கொண்டு, இன்பமோ துன்பமாக உணருகிறது.

இவ்வாறு அறிவு இன்பமோ, துன்பமோ அனுபவிக்கும்போது அறிவு, மனம் என அழைக்கப்படுகிறது.

எனவே, மனம், அறிவினது அலையெனவும், மூன்று நிலைகளில் செயல்படுகிறது எனவும் கீழ்க்காணும் பாடலில் அருட்தந்தை அவர்கள் தெளிவுப்படுத்துகிறார்கள்.

மதிப்புடைய அறிவியக்க நிலைகள் மூன்று.

மனம் என்பது அறிவினது செயல்பாடாகும்
மதிப்புடைய அறிவியக்க நிலைகள் மூன்று
மனம் புறமாய், புலன் மூலம் இன்ப துன்ப
மருட்சியிலே இயங்குநிலை ஒன்று; பின்னும்
மனம் கருவில் பதிவான வினைகள் தம்மை
மருவியுணர் நிலையொன்று, அதற்கு மேலாய்
மனம் உயிரை, உலகைக் கடந்தாதியான
மவுனநிலை நிற்பதொன்று ; உணர்ந்து கொள்வோம்

ஞானக்களஞ்சியம் பாடல் எண் : 1179

தொடரும்.....

No comments: