*வாழ்க வையகம்!*
*வாழ்க வையகம்!*
*வாழ்க வளமுடன்!!*
*தினம் ஒரு மாற்றம்*
*(15/04/2019)*
பஞ்ச மகா பாதகங்கள் பொய், களவு, சூது, கற்பழிப்பு, கொலை அனைத்தும் பாவச் செயல். இதில் எதெல்லாம் அடக்கமாகிறது..? பொய் பேசுவதும், செய்த தவறை மறைக்க பல பொய்கள், தவறான வதந்திகள் பரப்புவதும், பிறரைப்பற்றி கோள் பேசுவதும் , நேரில் கண்டமாதிரியே பேசுவதும், ...
சிறு வயதிலிருந்து தொடரும் பிறரது வீட்டு தோட்டத்து மரத்தில் மாங்காய் கொய்யா உரிமையாளரிடம்... கேட்காமலேயே பறிப்பது போன்று செயல்கள், பெரியவர்களானாலும்... விளையாட்டாக பிறர் பொருளை மற்றும் சிலவற்றை கேட்காமலே எடுக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு.. அது தவறில்லை என்று நினைத்து திருட்டை அல்லவா செய்ய நேர்கிறது..?? பிறரின் அனுமதியோடு எதையும் பெற வேண்டும் என்ற அறிவு வர வேண்டும்.
பெற்ற தாய் தந்தையே ஆனாலும் பிள்ளைகளே ஆனாலும் கேட்காமல் எடுக்கும் பணம், பொருள், எதுவானாலும் தவறாகும்.
கேட்டு எடுக்கும் பழக்கம் நல்லது. பிறர் பொருளுக்கும்/ நபருக்கும் ஆசைப்படாமல் வாழ்வதும், தன் சுய உழைப்பினால் ஈட்டுவதும் ஒருவரது கடமை.. இதில் யாருக்கு விலக்கு உண்டு...? குழந்தைகள், இயலாதவர்கள் ஊனமுற்றவல்கள், வயதில் முதிந்தோர்கள். அவர்களது உழைப்பைப் பெற்று வளர்ந்து அதை அவர்களுக்கு அன்பினால் திருப்பி தனது கடமையை நன்றியுணர்வுடன் செய்ய வேண்டும்.
பணம் வைத்து ரகசியமாகவும், சட்ட விரோதமாகவும், எந்த சூதாட்டமும் ஒரு பாவச்செயல்.. சூது/ மது/ மாது என்பது பிறர் அறியாமையை பயன்படுத்தி நயவஞ்சகமாக பணம், பொருள், மற்ற பிற தவறான செயலில் ஈடுபடுவதும் அதில் வருமானத்தை சேர்ப்பதும் பாவமாகும். பிறர் குடும்பத்தை பிரிப்பதும்... இதில் அடங்கும். நேர்மையாக பொருள் ஈட்ட பழக்குதல் நலம். பெண்களை மதிப்பதும் நலம்.
பிறர் சுதந்திரத்தை பறித்து வலுக்கட்டாயமாக பலவந்தப்படுத்துவதும், வன்முறைகள் செய்வதும் மாபெரும் பாதகமாகும். துரோகச் செயலும் இதில் அடக்கம். கற்பொழுக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
உயிர்கொலை ..தீங்கு செய்பவர் அவரவருக்கான விளைவுக்கேற்பவே விளைவுகளை அனுபவிக்கிறார்கள். தண்டனை இறைநிலையால் மனிதன் மூலமே அளிக்கப்படுகிறது.. பாவச்செயலுக்கு தண்டனை மூலமாக முற்றுப்புள்ளி வைக்கப் படுகிறது. உயிர்களை மதிக்க பழக வேண்டும்.
பாதகச் செயலே பிறவிகளின் தொடருக்குக் காரணம். துன்பம் அனுபவிப்பதற்கும் காரணம்.
சிறிய/பெரிய அளவில் செய்யும் தவறுகள் அதற்கேற்ற துன்பங்கள் பிறவிகளில் அனுபவிக்கிறார்கள்.. பாவங்கள் குறைந்து புண்ணியங்கள் மேலோங்கும் போது தன்னை அறிய முனைகிறார்கள். ஞான மார்க்கம் இங்கே தான் துவங்குகிறது.
அன்புடன் ஜே.கே
No comments:
Post a Comment