Tuesday, 23 April 2019

தினம் ஒரு மாற்றம்

*வாழ்க வையகம்!*
*வாழ்க வையகம்!*
*வாழ்க வளமுடன்!!*

*தினம் ஒரு மாற்றம்*
*(22/04/2019)*

அநாகதம் : ( Thymus Gland )
அநாகதம் நான்காவது சக்கரம். இது பஞ்சபூதத்தில் காற்றுக்குள்ள இடம்.
இந்த ஆதார மையமானது நமது கழுத்திற்கு கீழே இதயத்திற்கும், நுரையீரலுக்கும் நடுவில் சுழிமுனை நாடியில் அமைந்திருக்கிறது.

இதற்கு இருதயச் சக்கரம் என்ற என்கிற பெயரும் உண்டு. மார்பின் மையத்தில், இருதயம் உள்ள பகுதியில் இது இருப்பதால்  அன்பு, பாசம், இரக்கம், சகோதரத்துவம், விசுவாசம், பக்தி, ஆகிய அனைத்து நல்லியல்புகளின் சாத்வீக குணங்கள் மேம்படும்.  படைப்பாற்றலின் ரகசியமும் புரியவரும்.

தைமஸ் சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. இருதயம், நுரையீரல்கள்,இரத்த ஓட்டம், கல்லீரல்,ஆகியவையும் இதன் ஆதிக்கத்தில் இருக்கின்றன.
அனாகத சக்கர இடத்தை மனதில் இருத்தி மூல மந்திரத்தை தொடர்ந்து உருவேற்றி வர மணிப்புரக சக்கரத்திலிருந்து குண்டலினி எழும்பி, அனாகதம் வந்தடையும்.

இதன் மூல மந்திரம் 'யம்மம்' ----சுட்டுவிரல். காற்றுக்குரிய முத்திரை விரல்.

இதில் மனதை இருத்தி தவமியற்றுவதால் கிடைக்கும் பலன்கள்:

1) மனோதிடம், செயல் ஆர்வம், தைரியம், தன்னம்பிக்கை, திறமை ஆகியவை பெருகும்.

2)புலன்களுக்கு அப்பலான அறிவு இங்கும் ஏற்படுகிறது. ( Extra sensory Perception)

3)தூரக்காட்சிகள், எண்ணத்தை அறிதல், உள்ளுணர்வு ( Intuition), உள்ளிருந்து பேசுவது, புதியன கண்டுபிடிக்கும் ஆர்வம், ஊக்கம் ஆகியவை பிறக்கின்றன.

4) பயம், கோழைத்தனம், தாழ்வு மனப்பான்மை நீங்குகிறது.

5) எண்ணங்களை ஆராயும் ஊக்கமும், சரியான முடிவைத் தீர்மானிக்கும் துல்லியமான நுட்ப அறிவும், அம்முடிவை செயலுக்குக் கொண்டு வரும் உறுதியும், திறமையும் ஏற்படுகின்றன.

6) Thymus Gland ஊக்கம் பெறுகிறது. வீரம் உண்டாகிறது.

இந்த சுரப்பி பாக்டீரியா, வைரஸ், பூஞ்சக் காளான்கள், புற்றுநோய் செல்கள் போன்றவற்றை எதிர்த்து அரணாக நின்று பாதுகாக்கும் தன்மை கொண்டதால் இதை நோய் எதிர்ப்புக் காவலன் எனக் கொள்ளலாம்.

இதிலிருந்து சுரக்கும் Thymocin .எனும் Hormone இரத்த ஓட்டத்தில் கலந்து உடலில் உள்ள அத்தனை உறுப்புகளின் நோய் எதிர்ப்புத் தன்மையைத் தூண்டிவிடும்.

அன்புடன் ஜே.கே

No comments: