Saturday, 6 April 2019

தினம் ஒரு மாற்றம்

*வாழ்க வையகம்!*
*வாழ்க வையகம்!*
*வாழ்க வளமுடன்!!*

*தினம் ஒரு மாற்றம்*
*(06/04/2019)*

ஸ்வாதிஷ்டான சக்கரம்

இது பஞ்சபூதத்தில் நீருக்குரிய இடம். இதை அட்ரினல் சுரப்பி என்று ஆங்கிலத்தில் கூறுவர்.

இங்கு நமது மகரிஷி அவர்கள் சிறிதளவு நேரமே தவம் இயற்றக் கூறுகிறார்கள். . இதை யாரும் சரியான முறையில் பயன்படுத்தினால், ஹார்மோன் சீராக சுரக்கும்.... கணைய நீர், பித்தநீர் உற்பத்தியை சரி செய்து சீராக இயங்கச் செய்கிறது. இரத்த ஓட்டம் சீரமைக்கிறது. ரத்த அழுத்தத்தை சமநிலையில் வைக்க உதவுகிறது. சுறுசுறுப்பாகவும், பிராணவாயு சீராக இருக்க உதவுகிறது.

தூண்டப்படும் இடம், தூண்டப் படும் பொருள் உணர்ச்சிக்குட்பட்டது என்றாலும் பாலியல் சக்தி இதில்தான் மையம் கொண்டிருக்கிறது. இந்த  சக்தியை புனிதமாகக் கருதுவோர் அதை தற்காத்துக் கொள்கிறார்ள்.  ஈகோவுக்கும் இந்த சக்திதான் காரணமாக இருக்கிறது.
மற்றவர்களின் மன அலைச்சுழலை உணரும் தன்மை இந்த சக்கரத்துக்கு உண்டு. ஐம்புலன்களை அடக்கி அறிகின்ற சக்தியும் இதிலிருந்து தொடர்கிறது. பாலியல் சுரப்பிகளின் மீது இது ஆதிக்கம் செலுத்துகிறது. உற்பத்தி உறுப்புகள், கால்கள்  இதன் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

சிறிதளவு தவமியற்றி அதன் செயல்பாட்டை சீராக வைத்துக் கொண்டும் காயகல்பம் பயிற்சியை செய்வதன் மூலம் பாலுணர்வு தூண்டுதலை சமன்படுத்திக் கொள்ளவும் கற்பொழுக்கம் ஓங்கவும், செய்ய முடியும்.

இந்த சக்கரத்தினால் விளைவும் நன்மைகளை மட்டுமே கவனத்தில் கொண்டு பயன்பெறலாமே! அதிகம் தூண்டப்படுவதற்குப் பதிலாக குறைந்த நேரம் தவமியற்றி தன்னை பாதுகாத்துக் கொள்ளலாமே.. சீரான இயக்கம் உணர்ச்சியை தூண்டுவதிலிருந்து தன்முனைப்பிலிருந்து (ஈகோ) காத்துக் கொள்ள முடியும். மன அமைதிக்கும் வழி வகுக்கும்.

அன்புடன் ஜே.கே

No comments: