Tuesday, 9 April 2019

தினம் ஒரு மாற்றம்

*வாழ்க வையகம்!*
*வாழ்க வையகம்!*
*வாழ்க வளமுடன்!!*

*தினம் ஒரு மாற்றம்*
*(09/04/2019)*

குடும்பம் என்பது கணவன் மனைவி, குழந்தைகள் மற்றும் உறவுகள் ஒருவருக்கு ஒருவர் கொடுக்கும்  மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்வதே உறவுகளின் வலிமையாகும். ஒற்றுமையாகவும் உதவியாகவும்,  ஒருவருக்கொருவர் ஊக்கப்படுத்தி முன்னேற்றும் பாலமாக இருப்பதற்காகத் தான்.

குடும்ப அமைதிக்கு முதலில் பிணக்கில்லாத ஒற்றுமை வேண்டும். அந்த பிணக்கு என்பது அன்பினால் போக்க முடியும். பொறுமையை கடைபிடிப்பதாலும், பதிலுக்குப் பதில் பேசாமல் இருப்பதாலும், சங்கடம்  வராமல் இருக்க... சில வாக்குவாதங்களை உடனடியாக தவிர்ப்பதாலும்... சிக்கலை மேலும் பெரிதாக்காமல் இருக்க முடியும். 

குடும்ப உறவுகள்... நான், நீ, என்று போட்டி போடாமல் விட்டுக்கொடுத்து செல்வதும், வீட்டு விஷயங்களை நான்கு  சுவற்றுக்குள் பாதுகாப்பதும், குடும்ப நபர்களுக்கு அழகு.

குடும்ப நபர்கள் ஒவ்வொருவரும் குடும்பத்தில் உள்ளவர்களை மதித்து வாழ்வது.... அன்பு ஓங்கவும், நிலைக்கவும் ஒரு காரணமாக இருக்கும்.

வாழ்க்கையில் இனிமை வேண்டுமென்றால், முதலில் குடும்பத்தில் சுமுகமான நல்லுறவும், ஒற்றுமையும் ஒவ்வொருவரிடமும் வேண்டும்.

அற வாழ்க்கை என்பது ஒழுக்கம், கடமை, ஈகை ஆகும். இதை ஒருவர் கடைபிடித்தால்  எதையும் சமாளிக்கும் வல்லமை வரும். இது உண்மை நிலைக்க உதவும்.

அன்பும் அறனும் மட்டுமே இல்வாழ்க்கை சிறக்க வழிகள்.

அன்புடன் ஜே.கே

No comments: