Monday, 9 July 2018

தினம் ஒரு மாற்றம் (09/07/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (09/07/2018)

கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.
-திருக்குறள்.

எதைக் கற்றாலும் அது 'தான்' கற்றுக் கொண்டதை, சரியாகப் புரிந்து கொண்டு, அதை ஒவ்வொருவரது  
வாழ்க்கையிலும்
அதன் நெறியை பயன்படுத்தியும், பின்பற்றியும், வாழ்ந்து அதில் மனநிறைவு கண்டால், அதே பலனை பிறருக்கும் நாம் எடுத்துரைக்கும் போது, அவர்களும் அதை பின்பற்றுவார்கள்.

ஆசிரியர்கள் தான் பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதில்லை.
வீட்டுப் பெரியோர்கள், பெற்றோர்கள், அறிவில் முதிர்ச்சியுடையவர்கள் அனைவரும் அனுபவசாலிகள். 

யார் கூறுவது தனக்கு நன்மை பயக்குமாயின் அந்த  அனுபவமும் அறிவும்  ஒரு பாடம் தான்.

தொழில்நுட்பத்தை ஆராய்ந்து கண்டறிந்ததே மனிதனின் அறிவு தான்.

கல்வியை நம்பும் அளவு பெற்றோர்களையும், பெரியவர்களையும், அவர்களது வாழ்க்கை முறையையும், அனுபவத்தையும் ஆராய்ந்தும், நம்பிக்கையோடும் பார்த்தால் அவர்கள் *இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையில் நோயின்றி, மனதில் களங்கமின்றி வாழ்ந்த முறை தெரிய வரும்.*

*உடல்உழைப்பும், உண்மையும், எதிர்பார்ப்பில்லாத அன்பும், விட்டுக்கொடுத்தலும், ஒற்றுமையும், அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டவர்கள் நற்பண்புகளோடும் நல்லிணக்கத்தோடும் வாழ்கிறார்கள்.*

*தொழில்நுட்பம் அறிவை வளர்க்கப் பயன்படுத்த வேண்டும்.*

*அறிவின் தரத்தை உயர்த்தப் பயன்பட வேண்டும்.*

வியாபார நோக்கத்திற்காக, தேவையில்லாததை, ஊடகங்களின் வாயிலாக, மனிதனின் தரத்தை பண்பை, மதிப்பை தரம் தாழ்த்தி  பயன்படுத்துவது அறிவுடைமை அல்ல.

தொழில்நுட்ப அறிவு என்ற பெயரில், வியாபாரத்தில் மனிதனின் தன்மானத்தையும், தரத்தையும் விலைபோக விட்டால் மிஞ்சுவது தான் என்ன??

அன்று ஒவ்வொன்றையும் தேடிப் போய் கற்றார்கள்,

இன்று உலகமே கையில், அலைபேசியில் உள்ளது.

எதை நம் மனதிற்குள் அனுமதிக்க வேண்டும், வேண்டாம் என்பது மனிதனின் அறிவிற்கு எட்டவில்லை என்றால் *மனவளக்கலை*  *யோகம் பயில்வது தான் சிறந்தது.*

சுயமாக சிந்தித்து முடிவு எடுக்க வேண்டிய தருணம் இது.

*ஒருவரது தனிப்பட்ட சுதந்திரத்தை, அடிமையாக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்புமாகும்.*

அன்புடன் ஜெ.கே

No comments: