Sunday, 29 July 2018

தினம் ஒரு மாற்றம் (29/07/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (29/07/2018)

"ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே 
பேரா இயற்கை தரும்"

மு.வரதராசனார் உரை:

ஒருபோதும் நிரம்பாத தன்மை உடைய அவாவை ஒழித்தால் ஒழித்த அந்நிலையே எப்போதும் மாறாதிருக்கும் இன்ப வாழ்வைத் தரும்.

Translation: 

Drive from thy soul desire insatiate; 
Straight'way is gained the moveless blissful state.

Explanation: 

The removal of desire, whose nature it is never to be satisfied, will immediately confer a nature that can never be changed.

அவசியமானவற்றில் மட்டுமே கவனத்தைத் தானே திசைத் திருப்பிக் கொள்வது தன்னிலை உணர்வாகும். இதற்கு  தியானம் உதவும்.

(உ-ம்) அலைபேசியில் நேரத்தை சிக்கனமாகவும் அளவுடனும் கையாள்வது,  யோகா, நேர மேலாண்மை விழிப்புணர்வு, சுய பாதுகாப்புடன் வாழ்வது, எப்பொழுதும் மன தைரியத்துடன், தன்னம்பிக்கையுடன் இருப்பது உயர்வை ஈட்டித் தரும்.

நிறைவேறக் கூடிய ஆசைகள்
தகுதியுடையவர்களிடம் செயலாகும்.

சில மனதுக்குப் பிடித்த விஷயம்... ஆனால் உடன் இருப்பவர்களுக்கு அது ஏற்றுக் கொள்ள முடியாத  விஷயமாக இருப்பின் அந்த ஆசையை வளர்த்துக் கொள்வதை விட கைவிடுவது மேல்.

மனம் தேவையில்லாததை சிந்திப்பதில் இருந்து விலக்கிக்  கொள்ளவும், மனத்தை கட்டுப்படுத்திக் கொள்ளவும், நல்ல சிந்தனைகளைத் தானே தூண்டிவிடவும், மனத்தை பழக்க வேண்டும்.

*எதை மனம் தூண்டுகிறதோ, அதில் மிகுந்த விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்.*

தூண்டும் விஷயங்களுக்கு எல்லாம் இடம் கொடுத்தால் புலன் மயக்கத்தில் தான் மனம் இயங்கும்.

*அறிவை விழிப்புணர்வுடன் நேர்மறையாக சிந்திக்கவும், நேரத்தை மதிக்கவும், கற்றால் அதுவும் நம்மை மதிக்கும். பாதுகாப்பு பிறரிடம் அல்ல தன்னிடமே உள்ளது.*

அன்புடன் ஜெ.கே

No comments: