வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!
*தினம் ஒரு மாற்றம்* (28/07/2018)
நீர் நிறைந்த பாண்டத்துள் காற்றேறாது
நித்தியமாம் மெய்ப்பொருளால் நிறைந்த உள்ளம்
ஊர் உலகப் பொருள் கவர்ச்சி உணர்ச்சி ஏதும்
உள் நுழையா இப்பேறு தவத்தாலன்றி
யார் பெறுவர் யார் தருவர் அறிவு ஓங்கி
அதுவே தான் மெய்ப்பொருளென்றறியும் பேற்றை
சீர் நிலையில் மனம் வைத்து வேண்டாப் பற்றை
செதுக்கிக் கொண்டேயிருக்கும் விழிப்பு வேண்டும்.
- வேதாத்திரி மகரிஷி
ஒவ்வொரு நாளும் அதிகாலையில் உடல், மன பயிற்சிகள் எல்லாம் செய்த பின்னர் தன்னை சீர்செய்து கொண்டு இருக்கிறோமா என்றும், அந்த அமைதியை குடும்பத்தில் காண முடிகிறதா என்றும் உற்று நோக்க வேண்டும்.
தன்னிடத்தில் உடல், மன அமைதி பிறந்தால் மட்டுமே அதை குடும்பத்திலும் அளிக்க முடியும்.
அந்த அமைதியும், மகிழ்ச்சியும் குடும்பத்தில் பரவ விடும் போது அதுவே சிறிது சிறிதாக அக்கம் பக்கத்தினரிடம் ஒரு நல்லிணக்கம், அமைதி காண முடியும்.
அது எப்படி சாத்தியம் என்பவர்களுக்கு மனவளக்கலையை தன்னிடமும், வாழ்க்கையிலும், பயன்படுத்தி பார்க்கும் போது அது சாத்தியம் என்பது புரியும்.
எதைப் பார்த்தாலும் பயம் என்று இருப்பவர்களுக்கு தைரியம் வரவேண்டுமா??
*தவம் செய்வதால் அந்த பயம் நீங்கும்.*
எல்லாவற்றையுமே இறைவனின் வடிவமாகக் காணும் போது அங்கு அன்பும், தைரியமும், உண்மையும், ஓங்கும். பயம் நீங்கும். தைரியம் ஓங்கும். தன்னம்பிக்கை வளரும்.
உளவியல் ரீதியான உண்மை இது.
*மனதை புலனிலேயே பழக்கும் போது அறிவு விழிப்புநிலையில் இருக்காது.*
*அறிவு விழிப்புநிலையில் இருக்கும் போது புலன் அடங்கி விடும்.*
அறிவு மெய்ப்பொருளாக மாறும் போது அதுவே தானாக உணரும் காட்சியை உணர முடியும்.
மனநிம்மதி கைகூடும்.
அன்புடன் ஜெ.கே
No comments:
Post a Comment