Saturday, 14 July 2018

தினம் ஒரு மாற்றம் (12/07/3018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (12/07/2018)

ஒன்று பெற வேண்டுமானால் ஒன்றை கொடுத்தால் தான் முடியும்.

இறையுணர்வு பெற மனக் கழிவுகள் போக வேண்டும்.

Give and take policy இவ்வுலகில் எல்லாமே இதன் அடிப்படையில் தான்  இயங்குகிறது.

தொலைக்காட்சி, அலைபேசி, கணிணி, பார்க்கிறோம் கேட்கிறோம்.
ஒருவரது சக்தியை கொடுத்துத் தான்  பார்க்கவும், கேட்கவும், நுகரவும், பேசவும், சுவைக்கவும் புலனின்பம் பெறவும் முடியும்.

அது எப்படி என்று கேட்கிறீர்களா??

ஒரு நாள் முழுவதும் எத்தனையோ செயல்களை பார்க்கிறோம்,  கேட்கிறோம், சுவைக்கிறோம், நமது ஆற்றல் விரயமாகாமல் அதைப் பெற முடியுமா??

உடல், மனம் உழைப்பு வெறும் கை, கால்களுக்கும்  மட்டும் தான் என்றில்லை. கண்கள் மூலமாக டி.வியை பார்க்கும் போதும், காதுகள் மூலமாக ஒன்றை கேட்கும் போதும், நமது சீவகாந்தம் செலவு செய்து தான் பெறுகிறோம்.

ஆற்றல்கள் செலவாகும் போது அவரவர் (Energy field )அதாவது அவர்கள் சக்தி விரயமாகிறது. ஓய்வு தேவைப்படுகிறது.

மொபைல் போன் பாட்டரி சார்ஜ் போடுவது போல், மனித உடலுக்கு தூக்கத்தில்  மட்டுமே ஆற்றலை மீண்டும் பெற முடியும். ஏதேனும் உடல் ரீதியான சிக்கல்களை உடலே சரி செய்தும் விடும்.

ஆகவே எதுவும் செயலுக்கு உண்டான விளைவு தானே தவிர வேறு ஏதும் இல்லை என்பதை உணர்ந்து கொள்வது அவசியமாகிறது.

ஆற்றலை சேமிக்க என்ன செய்யலாம்?? கண்களின் மூலம் விரயமாவதை தியானம் மூலம் அகத்தை நோக்க வேண்டும்.
வாய் மூலம் அவசியமில்லாததை  பேசுவதை குறைத்தும், உணவில் ஒழுக்கம் கடைபிடித்தும், மௌனத்தில் இருப்பதும் சேமிப்பாகும்.

காதுகள் மூலம் வெளிப்புற நிகழ்ச்சிகளில் கேட்டு விரயமாவதை தவிர்த்து அருட்பேராற்றலின் அன்புக் குரலைக் கேட்பதின் மூலம்  இறைவனின் அன்புக் கட்டளையை கேட்க முடியும்.

மூக்கு மூலம் உணவு வகைகள், வாசனை திரவியங்கள், நறுமணம் மூலம் செலவாகும் ஆற்றலை சுவாசத்தை கவனிப்பதின் மூலம் மூளைக்கு பிராணசக்தியை அளித்து ஆற்றலை பெருக்கிக் கொள்ள முடியும்.

தோல் மூலம்  ஆற்றலை, உணர்வது, அனுபவிப்பது, ஸ்பரிசிப்பதன் மூலம் ஆற்றல் செலவாவதை தவிர்க்க புலன் கட்டுப்பாடும் ஒழுக்கமும் பெற பஞ்சேந்திரிய தவம் உதவும்.

இவ்வாறு ஐம்புலன்கள் மூலம் ஆற்றல் விரயமாவதை சேமிக்க தியானம் பயில்வோம். புலன் மயக்கம், புலன் பற்று, இதன் மூலம் சரி செய்யவும் அனைத்திலும் அளவுடன் அனுபவிக்கவும், தேவையில்லாதவற்றில் கவனம் செலுத்தி நேரம் விரயமாக்குவதில் இருந்து தவிர்க்கப்பட்டு, ஒழுக்கம் மேம்பட்டு, கட்டுப்பாடு கடைபிடிக்க முடியும்.

அன்புடன் ஜெ.கே

No comments: