Saturday, 14 July 2018

தினம் ஒரு மாற்றம் (10/07/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (10/07/2018)

மகிழ்ச்சியை விரும்பும் மனிதர்கள் மகிழ்ச்சியை வரவேற்கத் தயாராகிறார்கள். அதை ஈர்க்கிறார்கள் தங்கள் இன்சொற்களின் வாயிலாக, அன்பின் மூலமாக, விட்டுக்கொடுத்தும், சகித்துக் கொண்டும் தன் பக்கம் இருக்கும் அமைதியையும் நிம்மதியையும், அதிகப்படுத்த ஆயத்தமாகிறார்கள்.

மகிழ்ச்சியை ஈர்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களால்  எந்த ஒரு சூழ்நிலையையும் தன் பக்கம் விழிப்புணர்வுடன்  சாதகமாக்கிக் கொள்ள முடியும்.

தனது பிறவிப்பயன் தீர எது வேண்டும்?  என்ற தெளிவு உள்ளவர்களால், அதை தன் பக்கம் ஈர்த்துக் கொள்ளும் துணிவை, அந்த இறையாற்றலே அளிக்கும்.

ஒரே ஒரு விஷயம் தான்... அந்த இறைவனுக்கு அனைவரும் உண்மையாக இருக்க வேண்டும்.

மனசாட்சிக்கு விரோதமாக எதையும் செய்யக் கூடாது. அனைத்தையும் மதித்து வாழும் பண்பு போதும்.

உணவை அதிகப்படியாக உண்டால் அஜிரணமாகி உடலில் இருந்து வெளியேறுவது போலவே தான்.. அப்பொழுது ஆசையாக ஆனந்தமாக உண்டோமே என்றால் அளவுமுறை இங்கு மீறியதால் துன்பம் நேர்கிறது.

பணத்தாசையினால்.. உண்மையாக இருந்த ஒருவன் அளவுக்கு மீறி பாலில் நீர் கலந்து விற்றதால், சேர்த்த பணம், அளவுக்கு அதிகம்  ஆசைப்பட்ட பணம், ஆற்று நீரில் சென்றுவிட்ட கதையை கேள்விப்பட்டு இருப்பீர்கள்.

இறைநீதியை உணர்ந்து மகிழ்ச்சியை ஈர்க்க கொடுத்து மகிழ்வோம்.

கொடுக்கக் கொடுக்கவே சுரக்கும்.

அதுவே அட்சயபாத்திரத்தின் பண்பு ..

எதை பாத்திரத்தில் இட்டால் எது சுரக்கும்? உண்மை, ஈகை, அன்பு, ஒற்றுமை, உறவுகளுடன் நல்லிணக்கம்,  பெருந்தன்மை, தன்னடக்கம், பணிவு, கனிவு, இன்பம், நிதானம்,...... போன்றவை..

மகிழ்ச்சியும் மனநிம்மதியும் வேறு எங்கு இருக்கிறது??

அனைத்தும்  அவரவர் இடத்திலே தான் இருக்கிறது.

எதை தருகிறோமோ அதுவே திரும்பி வரும்.

அன்புடன் ஜெ.கே

No comments: