Tuesday, 31 July 2018

தினம் ஒரு மாற்றம் (31/07/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (31/07/2018)
The Way of Maintaining the Family

குறள் 1022:

ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி.

விளக்கம் 1:

முயற்சி நிறைந்த அறிவு என்று சொல்லப்படும் இரண்டினையும் உடைய இடைவிடாத செயலால் ஒருவனுடைய குடி உயர்ந்து விளங்கும்.

விளக்கம் 2:

முயற்சி, நிறைந்த அறிவு என்னும் இரண்டுடன் இடைவிடாத செயல் செய்யக் குடும்பமும் நாடும் உயரும்.

English Couplet 1022:

The manly act and knowledge full, when these combine
In deed prolonged, then lengthens out the race's line.

Couplet Explanation:

One's family is raised by untiring perseverance in both effort and wise contrivances.

ஏதோ ஒன்று யோசித்துக் கொண்டே இருக்கும் மனிதர்கள் அந்த யோசனையில் சிந்தனையில் என்ன யோசிக்கிறோம்?  ஏன் யோசிக்கிறோம்?
அதனால் விளையும் பயன் என்ன? என்று ஆராய்ந்து யாராவது பார்ப்பதுண்டா??

ஒரு நாள் முழுக்க எவ்வளவு விஷயங்களை பார்க்கிறோம், கேட்கிறோம், நுகர்கிறோம், சுவாசிக்கிறோம், அலைபேசியை கணிணியை, தொலைகாட்சியை, எத்தனை முறை தொடுகிறோம் அதனுடன் உறவாடுகிறோம்.

அதில் ஒருவர் செலவழிக்கும் நேரம் தனக்குப் பயன் தருகிறதா?

அதை பார்ப்பதால் என்ன இன்று கற்றுக் கொண்டோம்?

உடல்நலனை தருமா??
மனநலனை ஈட்டித் தருகிறதா??
குடும்பத்தில் அமைதி நிலவுகிறதா?

யாருக்கு என்ன லாபம் இதனால்?

ஒருவர் வியாபார நோக்கில் விளம்பரம் போடுவதில் பலன் அவர் அடைகிறார்.

பார்ப்பவர் என்றாவது பயன் அடைந்தது உண்டா? ஒருவரை மூளைச்சலவை செய்து வருமானத்தை ஈட்டிக் கொள்கிறார்கள். அதற்கு பார்வையாளர்களை கவரும் வகையில் விளம்பரங்களை போடுகிறார்கள்.

மக்கள் சுயமாக சிந்தித்து செயல்பட விழிப்புணர்வு வந்து கொண்டே இருக்கிறது..

ஒருவர் செய்யும் செயலால் தானும் பிறரும் மனம் நிறைவு கொள்ள வேண்டும்.

அவ்வாறான மன நிறைவு எது கொடுக்கிறது என்று சிந்தித்தால் புரியும்.

அவரவர் கடமைக்கு முன்னுரிமை கொடுத்தால் வாழ்க்கையில் மனநிறைவு கொள்ள முடியும்.

குடும்பக்கடமை முதலில்,  உறவுகளை பேணிக் காப்பதிலும், அதற்கு வேண்டிய பொருளாதாரத்திற்கும் சமமான கடமையுணர்வு வேண்டும்.

அன்புடன் ஜெ.கே

No comments: